மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களின் ஒரிஜினல்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தலாம்.

By Arun

டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களின் ஒரிஜினல்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தலாம். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

டூவீலர், கார் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அனைவரும், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களின் ஒரிஜினல்களை கையில் வைத்து கொள்ள வேண்டிய தேவை இருந்து வந்தது.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் கேட்கும்போதெல்லாம், ஒரிஜினல் ஆவணங்களை எடுத்து காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. எனவே ஒரிஜினல் ஆவணங்களை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டிய நிலை நிலவி வந்தது.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்சி உள்ளிட்ட ஆவணங்களின் ஒரிஜினல்களை கையில் வைத்து கொண்டு பயணிக்கையில், அவை தொலைந்து விடும் அபாயம் உள்ளது. இந்த ஆவணங்கள் எல்லாம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

அவை தொலைந்து விட்டால், மீண்டும் வாங்குவது கடினம். அவற்றை மீண்டும் வாங்க வேண்டுமெனில், பல சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். அதுதவிர வீண் அலைச்சலையும் சந்திக்க வேண்டியது வரும்.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

ஆனால் இந்தியா டிஜிட்டல் மயமாகி வருவதால், இனி இந்த பிரச்னை உங்களுக்கு ஏற்படாது. ஏனெனில் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்களை மொபைல் போனிலேயே வைத்து கொள்ள முடியும். இதற்கென பிரத்யேகமான மொபைல் செயலிகள் (ஆப்) அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

இதில் ஒன்றுதான் எம் பரிவாகன் (M Parivagan). மோர்த் எனப்படும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம்தான் (MORTH-Ministry of Road Transport and Highways) எம் பரிவாகன் மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

எம் பரிவாகன் மொபைல் ஆப், கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த ஆப்பில் உள்ள Enter Vehicle Number To Get Details என்ற இடத்தில், உங்கள் வாகன பதிவு எண்ணை டைப் செய்தால், ஆர்சி புத்தகத்தில் உள்ள அனைத்து தகவல்களும் கிடைக்கும்.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

அதாவது வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை மற்றும் பெயர், எரிபொருள் வகை, வாகனம் பதிவு செய்யப்பட்ட நாள், வாகனத்தின் வயது என ஆர்சி புத்தகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களும் கிடைக்கும். இதை டவுன்லோடு செய்து, டேஷ்போர்டு பகுதியில் சேமித்து வைத்து கொள்ளலாம்.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

அதேபோல் டிரைவிங் லைசென்ஸின் எண்ணை டைப் செய்தாலும், அது தொடர்பான தகவல்கள் அனைத்தும் கிடைக்கும். இதனையும் டேஷ்போர்டில் சேமித்து வைக்க முடியும். போலீசார் கேட்கும்போது, எம் பரிவாகன் ஆப்பில் உள்ள ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை காட்டினாலே போதுமானது.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

இந்த ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிரும் வகையிலான ஆப்ஷன்களும், எம் பரிவாகன் மொபைல் ஆப்பில் வழங்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் ஆப்பில் உள்ள சிட்டிசன் ரிப்போர்ட் என்ற பகுதியில் உங்கள் புகார்களையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

ஒருவேளை மொபைல் தொலைந்து போனாலும், இதில் உள்ள ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களுடன், இந்த மொபைல் ஆப் வெகு விரைவில் அப்டேட் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

இதுதவிர டிஜி லாக்கர் என்ற மொபைல் ஆப் இருப்பதும் அனைவரும் அறிந்ததே. எனினும் தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்களின் போலீசார், ஒரிஜினல் ஆவணங்களைதான் கட்டாயமாக காட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மோடி வந்த பின் எல்லாம் டிஜிட்டல் மயம்.. ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் தேவையே இல்லை..

ஆனால் அதற்கு அவசியம் இல்லை. ஏனெனில் எம் பரிவாகன், டிஜி லாக்கர் போன்ற மொபைல் ஆப்களில் பதிவு செய்யப்பட்ட முக்கிய ஆவணங்களை, ஒரிஜினல்களுக்கு பதிலாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிக்கை அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
How to Use M Parivagan Mobile App. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X