ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

ஜனாதிபதி வந்த நேரத்தில் லாரி ஒன்று திடீரென பழுதாகி நின்றது. அப்போது போலீசார் செய்த காரியம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இந்தியாவில் பஸ் மற்றும் லாரி போன்ற கனரக வாகனங்கள் அவ்வப்போது பழுதாகி நடுரோட்டில் அப்படியே நின்று விடும். இந்தியாவை பொறுத்தவரை இது வாடிக்கையான ஒரு நிகழ்வாக நடந்து வருகிறது. இவ்வாறு கனரக வாகனங்கள் பழுதாகி நடுரோட்டில் நின்று விட்டால், அதனை சாலையில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான செயல்முறை மிகவும் கடினமானது.

ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

சிறிய ரக வாகனங்கள் சாலையில் பழுதாகி நின்று விட்டால், அதனை மிக எளிதாக அப்புறப்படுத்தி விடலாம். டோ டிரக்குகளின் உதவியுடன் சிறிய வாகனங்களை அப்புறப்படுத்துவது எளிதானதுதான். ஆனால் கனரக வாகனங்கள் என்றால், பெரிய டோ டிரக்குகள் தேவைப்படும். அதே சமயம் அவற்றில் சரக்கு இருந்தால், மிகப்பெரிய கிரேன்கள் உதவி கண்டிப்பாக தேவை.

ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இந்த சூழலில், சாலையில் திடீரென பழுதாகி நின்ற லாரியை காவல் துறையினர் தள்ளி கொண்டு செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில், ஏராளமான போலீசார் ஒன்றாக சேர்ந்து லாரியை அவசர அவசரமாக தள்ளி கொண்டு செல்வதை நம்மால் காண முடிகிறது. எப்படியும் 20க்கும் மேற்பட்ட போலீசார் இருப்பார்கள்.

ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இதன் பின்னணி என்ன? காவல் துறையினர் இவ்வளவு பேர் இணைந்து முழு வேகத்தில் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஏன்? என்பது போன்ற சந்தேகங்கள், இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் கண்டிப்பாக எழும். உங்கள் சந்தேகங்கள் அனைத்திற்கும் நாங்கள் இந்த செய்தியில் விளக்கம் அளிக்கிறோம்.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

சம்பவத்தன்று ஐதராபாத் நகரில், லாரி ஒன்று திடீரென பிரேக் டவுன் ஆகி அப்படியே நின்று விட்டது. அதுவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருவதற்கு சற்று முன்னதாக. எனவே எவ்வித அசம்பாவிதமும் நிகழ கூடாது என்பதற்காகவே போலீசார் அவசர அவசரமாக அந்த லாரியை தள்ளி சென்றனர். இந்த சம்பவம் நடந்தபோது லாரியில் சரக்கு இருந்ததா? என்பது தெளிவாக தெரியவில்லை.

ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

ஆனால் அந்த லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில், 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். ஜனாதிபதி வரும் சமயம் என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் உடனடியாக அந்த லாரியை அப்புறப்படுத்துவது மிகவும் முக்கியமானது. எனவேதான் போலீசார் ஒன்றாக இணைந்து களமிறங்கி விட்டனர்.

ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

இந்த வீடியோ லாரியின் ஒரு பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 11 போலீசார் லாரியை தள்ளுவது இதன் மூலம் நமக்கு தெரியவருகிறது. அதே சமயம் லாரியின் மறு பக்கத்தில் இன்னும் அதிகமான காவல் துறையினர் இருப்பார்கள் என தெரிகிறது. எனவே எப்படியும் 20க்கும் மேற்பட்ட போலீசார் இணைந்து லாரியை தள்ளியிருப்பார்கள்.

ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

சரக்கு இல்லாமல் காலியாக இருக்கும் லாரியின் எடையே மிக அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சரக்கு இல்லாம சமயத்தில் கூட லாரியின் எடை 10 ஆயிரம் கிலோ வரை இருக்கலாம். அதே சமயம் சரக்கு இருந்தால், லாரியின் எடை இன்னும் அதிகமாகும். ஐதராபாத் போக்குவரத்து போலீசார் லாரியை தள்ளி கொண்டு செல்லும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்தியாவை பொறுத்தவரை மிக முக்கியமான நபர்கள் பயணம் செய்யும் சாலையை தேர்வு செய்வதிலும், அவற்றை கண்காணிப்பதிலும், சம்பந்தப்பட்ட நகர, மாவட்ட நிர்வாகங்கள், போக்குவரத்து காவல் துறை, சிறப்பு பாதுகாப்பு குழு ஆகியோர் ஒன்றாக இணைந்து பணியாற்றுகின்றனர். இவ்வாறான சாலைகள் உச்சகட்ட கண்காணிப்பின் கீழ் இருக்கும்.

ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

ஐதராபாத்தில் பழுதாகி நின்ற லாரியை அப்படியே விட்டிருந்தால், ஒருவேளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் கான்வாய்க்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்க கூடும். அல்லது கான்வாயை 'பிளாக்' செய்து, அதன் வேகத்தை குறைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் போலீசார் கிரேனுக்கு காத்திருக்காமல், கைகளாலேயே தள்ளி சென்று விட்டனர்.

ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்த காரணத்தால், சாலையில் இருந்து அந்த லாரி அகற்றப்பட்டு விட்டது. ஆனால் காவல் துறையினர் எவ்வளவு தூரம் லாரியை தள்ளி சென்றார்கள்? என்பது தெரியவில்லை. இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டின் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக உள்ளார். எனவே அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன் கார்டை (Mercedes-Benz S600 Pullman Guard), அவர் தனது அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்துகிறார். இது அதிகப்படியான கவச வசதிகள் செய்யப்பட்ட லிமோசைன் ஆகும். இதில், ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் ஜனாதிபதியின் கான்வாய், கவச டொயோட்டா பார்ச்சூனர்கள், லேண்ட் க்ரூஸர்கள் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி உள்பட பல்வேறு கார்களால் வழிநடத்தப்படுகின்றன.

Image Courtesy: FB TV/YouTube

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

ஜனாதிபதி வந்த நேரத்தில் தற்போது லாரி பழுதாகி நின்றதை போல், ரயில் வந்த நேரத்தில் கார் ஒன்று தண்டவாளத்தில் சிக்கி கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவமும் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்றது. அப்போது என்ன நடந்தது? என்பது குறித்த விரிவான தகவல்களையும், காண்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் அந்த சம்பவத்தின் வீடியோவையும் தொடர்ந்து பார்க்கலாம்.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்கை கொண்டிருக்கும் நாடு இந்தியா (அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன). இந்திய ரயில்வே துறையில் சுமார் 13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய நகரம் ஒன்றில், மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கார் ஒன்று எதிர்பாராத விதமாக ரயில்வே தண்டவாளத்தில் சிக்கி கொண்டது. சக்தி வாய்ந்த காராக கருதப்பட்டாலும், தண்டவாளத்தில் இருந்து வெளியே வர முடியாமல் அந்த கார் திணறியது.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

அப்போது அவ்வழியாக ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காரின் டிரைவர் தன்னால் முடிந்த வரைக்கும் முயற்சி செய்து பார்த்தார். இருந்தபோதும் தண்டவாளத்தில் இருந்து காரை வெளியே எடுக்க முடியவில்லை.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

எனவே அங்கிருந்த மக்கள் உடனடியாக உதவி செய்ய ஓடி வந்தனர். தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி அவர்கள் காரை தள்ளி பார்த்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அப்போதும் கார் வெளியே வரவில்லை. அந்த நேரத்தில் ரயில் நெருங்கி வந்திருந்தது.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

இதனால் பதற்றம் அடைந்த மக்கள், ரயிலை நிறுத்தும்படி அதன் டிரைவருக்கு வேகமாக சைகை காட்டினர். அதிர்ஷ்டவசமாக இதனை புரிந்து கொண்ட ரயிலின் டிரைவர் ஒரு வழியாக ரயிலை நிறுத்தி விட்டார். வேகமாக பயணித்து கொண்டிருக்கும் ஒரு ரயிலை அப்படியே நிறுத்துவது அபாயகரமானது.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

அப்படி நிறுத்தினால் ரயில் தடம் புரண்டு விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதனால் ரயிலின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே தண்டவாளத்தில் கார் சிக்கி கொண்டிருப்பதை, அந்த ரயிலின் டிரைவர் தொலைவில் இருந்தே பார்த்திருக்க கூடும் என கருதப்படுகிறது.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

இதன்மூலம் அவர் படிப்படியாக வேகத்தை குறைத்திருக்கலாம். அல்லது சிறிய நகரம் என்பதால், அவர் ரயிலை மிகவும் மெதுவாகவே இயக்கி வந்திருக்கலாம். எது எப்படியோ அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு விட்டது.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

ரயில் நிறுத்தப்பட்ட பின்புதான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதன்பின் கூடுதலாக சிலர் வந்து காரை மீட்க உதவி செய்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பே கார் மீட்கப்பட்டது. அதுவரை ரயில் மிகவும் பொறுமையாக அங்கேயே காத்து கொண்டிருந்தது.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், அங்கிருந்த சிலர் இந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்தனர். சமூக வலை தளங்களில் வைரலாக பரவிய அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

தண்டவாளத்தில் இருந்து கார் மீண்டு வருவதை வீடியோவின் 2வது பகுதியில் பார்க்க முடிகிறது. நிச்சயமாக இதன்பின்புதான் காரின் டிரைவர் நிம்மதி அடைந்திருப்பார். குறுக்கு வழியில் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த பாதையை தேர்வு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

ஆனால் இந்த சம்பவத்தின் மூலமாக அவர் பாடம் கற்று கொண்டிருப்பார். இந்திய ரயில்வே துறையானது, உள்கட்டமைப்பு தேவைகளை வேகமாக பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் இதுபோன்ற 'ஷார்ட் கட்ஸ்' மீதுதான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் (டிரெயின்-18) சேவையை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி வைத்தார். சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட டிரெயின்-18 ரயில், டெல்லி-வாரணாசி இடையே இயக்கப்படுகிறது.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

இந்த ரயில் சோதனை ஓட்டத்தின்போதே மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது. இப்படிப்பட்ட வேகத்தில் வரும் ஒரு ரயில், தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார் உள்ளிட்ட சிறிய இலகு ரக வாகனங்கள் மீது மோதினால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும்.

ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ...

எனவேதான் இத்தகைய 'ஷார்ட் கட்ஸ்' மீது இந்திய ரயில்வே துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வாகன ஓட்டிகளும் மற்ற போக்குவரத்து முறைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களை மிச்சம் பிடிப்பதற்காக, குறுக்கு வழியை தேர்வு செய்தால் ஆபத்துதான் மிஞ்சும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyderabad Cops Push Break Down Truck During President Ramnath Kovind Visit - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X