ஒரு வருடத்திற்கு முன் காணாமல்போன பைக்கிற்கு இ-செல்லாண் அனுப்பிய போலீஸார்: அதிர்ச்சியில் உரிமையாளர்!

போலீஸாரின் அலட்சியத்தால், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன பைக்கிற்கு இ-செல்லாண் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன பைக்கிற்கு இ-செல்லாண் அனுப்பிய போலீஸார்...

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்கானிக்கும் விதமாக, சாலையோரங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், சிக்னலை மதிக்காமல் செல்பவர்கள், தலைகவசம் அணியாதவர்கள், தவறான பாதையில் செல்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் விதமாக இ-செல்லாண் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன பைக்கிற்கு இ-செல்லாண் அனுப்பிய போலீஸார்...

இதுதவிர, பணியில் இருக்கும் போலீஸார்களிடமும் சிறிய ரக கேமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலமும், மேற்கூறியவாறு கணிசமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பல வழிகளில், போக்குவரத்து விதிமீறல்களைத் தவிர்க்கவும், அதனால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன பைக்கிற்கு இ-செல்லாண் அனுப்பிய போலீஸார்...

இந்நிலையில், காணாமல்போன பைக்கிற்கு இளைஞர் ஒருவருக்கு, இ-செல்லாண்களைப் போலீஸார் அனுப்பி வைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன பைக்கிற்கு இ-செல்லாண் அனுப்பிய போலீஸார்...

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள குசைகுடா பகுதியில் வசித்து வருபவர் சேஷாத்ரி. இவர்தான், தனது காணாமல்போன் பைக்கிற்காக இதுவரை ஆறுமுறை, புகைப்படங்களுடன் கூடிய இ-செல்லாண்களைப் பெற்று வருகின்றார். இந்த பைக்கானது, கடந்த 2018ம் ஆண்டே காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. அதற்கான முதல் தகவல் அறிக்கையும் அவர் வைத்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன பைக்கிற்கு இ-செல்லாண் அனுப்பிய போலீஸார்...

சேஷாத்ரி, யமஹா நிறுவனத்தின் எஃப்இசட் பைக் (AP 29AF 9635) பயன்படுத்தி வந்து கொண்டிருந்தார். இதனை எப்போதும் அவரது இல்லத்திற்கு முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். அவ்வாறு, நிறுத்தி வைக்கப்பட்ட பைக் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருடப்பட்டு விட்டது. இதுகுறித்து, சம்பவம் நிகழ்ந்த அன்றே, அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன பைக்கிற்கு இ-செல்லாண் அனுப்பிய போலீஸார்...

இந்த நிலையில்தான், காணாமல்போன யமஹா எஃப்இசட் பைக் போக்குவரத்துவிதி மீறல்களில் ஈடுபடுவதாக கூறி, அவருக்கு அவ்வப்போது இ-செல்லாண்கள் வந்துள்ளன. அவ்வாறு, இ-செல்லாண்கள் அவருக்கு 2019ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி முதல் வர தொடங்கியுள்ளது. மேலும், தொடர்ச்சியாக இதுவரை ஆறு முறை இ-செல்லாண்கள் போலீஸாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன பைக்கிற்கு இ-செல்லாண் அனுப்பிய போலீஸார்...

இதுகுறித்து, முதல் செல்லாணைப் பெற்றபோதே சேஷாத்ரி, உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் தொடர்ச்சியாக ஆறு முறை இ-செல்லாண்களைப் பெற்றுள்ளார். இதற்கு, அவரின் புகாரின் பேரில் போலீஸார்கள் பெரிதாக நடவடிக்கை மேற்கொள்ளாததே காரணமாக என அவர் குற்றம் சாட்டுகிறார்.

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன பைக்கிற்கு இ-செல்லாண் அனுப்பிய போலீஸார்...

இதன்காரணமாகவே, காணாமல் போன பைக்கிற்கு பதிலாக, அபராத செல்லாண்களைப் பெற்று வருவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுவரை, சேஷாத்ரிக்கு கிடைத்துள்ள அனைத்து செல்லாண்களும், புகைப்படங்களுடன் கூடியதாக இருக்கின்றது. அதில், சில போலீஸாரின் ஹேண்டி கேம் மூலமாக எடுக்கப்பட்டதாக இருக்கின்றது.

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன பைக்கிற்கு இ-செல்லாண் அனுப்பிய போலீஸார்...

சேஷாத்ரியின் புகார்குறித்து, போலீஸார் முறையாக இணையத்தில் பதிவு செய்திருந்தாலே, முதல் முறை பைக் விதிமீறலில் ஈடுபட்டபோதே கண்டுபிடிக்கப்பட்டு, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். ஆனால், சில போலீஸார் காட்டிய அலட்சியத்தின் காரணமாக இதுவரை ஆறு முறை கேமிராவின் கண்களில் சிக்கியும், திருடர்கள் அகப்படாமல் தப்பித்து கொண்டு வருகின்றனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்போன பைக்கிற்கு இ-செல்லாண் அனுப்பிய போலீஸார்...

இதனால், மன உலைச்சலடைந்த சேஷாத்ரி, போலீஸார் அனுப்பிய இ-செல்லாணையும், புகைப்படங்களையும் அவரது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில்,

"எனது பைக், கடந்த 2018 ஆம் ஆண்டு காணாமல் போய்விட்டதாக, குசைகுடா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். இதன் பின்னர், எனது பைக் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக இதுவரை ஆறு முறை எனக்கு அபராத செல்லாண்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் சில புகைப்படங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என அதில் வேதனை தெரிவித்திருந்தார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyderabad Man Gets e-Challans For Stolen Bike. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X