பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்த விபத்திற்கு காரணமானவர் குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

அதிவேகம் ஆபத்தானது என எவ்வளவுதான் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அதற்கு பலன் இல்லை. அதிவேகத்தால் ஏற்படும் அபாயங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், வாகன ஓட்டிகள் பலர் தொடர்ந்து ஓவர் ஸ்பீடில் வாகனங்களை இயக்கி கொண்டுதான் உள்ளனர். இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிகம் பேர் உயிரிழக்க இதுவே மிக முக்கியமான காரணம்.

பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இதில், பெரும்பாலானோரின் உயிரிழப்பிற்கு அதிவேகம்தான் முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் பயணிப்பதை தடுக்க அரசு மற்றும் காவல் துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

ஆனால் இதையெல்லாம் வாகன ஓட்டிகள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வதில்லை என்பதை ஐதராபாத் நகரில், கடந்த சனிக்கிழமை மதியம் நடைபெற்ற ஒரு விபத்து நிரூபணம் செய்தது. பாலத்தில் அதிவேகமாக சென்ற கார், எதிர்பாராதவிதமாக திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

நாட்டையே உலுக்கிய இந்த விபத்திற்கு காரணமானவர் கல்வகுண்ட்ல கிருஷ்ண மிலன் ராவ். ஐதராபாத் நகரில் உள்ள பயோடைவர்சிட்டி ப்ளை ஓவரில் கடந்த சனிக்கிழமை மதிய நேரத்தில் கல்வகுண்ட்ல கிருஷ்ண மிலன் ராவ் அதிவேகத்தில் தனது காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். ஆனால் பயோடைவர்சிட்டி ப்ளை ஓவர் அவருக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதது.

பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

அவர் முதல் முறையாக அந்த பாலத்தின் மீது கார் ஓட்டி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மணிக்கு 104 கிலோ மீட்டர்கள் வேகத்தில் அவர் காரை ஓட்டியுள்ளார். கல்வகுண்ட்ல கிருஷ்ண மிலன் ராவ் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மீனாட்சி டவருக்கு அருகே உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

அவர் ஓட்டி சென்றது சிகப்பு நிற ஃபோக்ஸ்வேகன் கார் ஆகும். ஆனால் அதிவேகத்தில் சென்றதால், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. அந்த சமயத்தில் கீழே உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பஸலா நாகவெங்கட சத்யவேணி என்ற பெண் இதன் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.

MOST READ: புதிய டொயோட்டா காரில் ஏகப்பட்ட பழுது... கோபத்தில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா? இது வேற லெவல்

பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

இதுதவிர ப்ரணீதா, ஆட்டோ ரிக்ஸா டிரைவர் பாலு நாயக் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர் குபேரா ஆகியோர் இந்த விபத்தால் காயமடைந்தனர். அதே சமயம் காரை ஓட்டி வந்தவரான கல்வகுண்ட்ல கிருஷ்ண மிலன் ராவ் உயிர் தப்பி விட்டார். விபத்து நடைபெற்ற உடனேயே காரின் ஏர்பேக் விரிவடைந்தததால் அவர் உயிர் பிழைத்தார்.

MOST READ: திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் ஓர் இரவு... லோகேஸ்வரனின் ஆச்சர்ய அனுபவம்!

பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

எனினும் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. எனவே உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். இவர் பிரபலமான எம்பவர் லேப்ஸ் எனும் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் தெலங்கானாவை சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ: போலீஸாக மாறிய ஜவுளிக்கடை பொம்மைகள்... வாகன ஓட்டிகளின் 'அந்த' பழக்கம்தான் இதற்கு காரணம்...

பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் என தெரிந்தால் கோவப்படுவீங்க...

எனவே இந்த வழக்கில் இருந்து கல்வகுண்ட்ல கிருஷ்ண மிலன் ராவை காப்பாற்ற அந்த அமைச்சர் முயற்சி மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த புகார்கள் தற்போது பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளன. இந்த வழக்கில் அடுத்தகட்டமாக என்ன நடக்க போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyderabad: Speeding Car Falls Off From Biodiversity Flyover - Women Killed, CEO Saved By Airbags: Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X