அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தடுப்பதற்காக, மரண பயத்தை காட்டும் புது டெக்னிக் ஒன்றை காவல் துறையினர் கையில் எடுத்துள்ளனர்.

அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

கண்ணுக்கே தெரியாத கோவிட்-19 வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கி வருகிறது. அதே சமயம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி கொண்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் முடக்கி போட்டுள்ளது.

அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஈரான் போன்ற நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும். ஆனால் பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்காமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால், ஒரு சில வாகன ஓட்டிகள் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். இத்தகைய வாகன ஓட்டிகளால் கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது.

அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

இதனால் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தேவையே இல்லாமல் ஊர் சுற்றும் நபர்களுக்கு எதிராக காவல் துறை தற்போது கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில், வாகன ஓட்டிகளை காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், வாகன ஓட்டிகளை தாக்குவதை போலீசார் நிறுத்தி கொண்டனர்.

அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

எனினும் வழக்கு பதிவு செய்வது, அபராதம் விதிப்பது மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் போலீசார் இறங்கினர். தமிழகத்தை பொறுத்தவரை, ஊரடங்கை மீறியதற்காக மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று கர்நாடகாவிலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

பெங்களூர் மாநகர போலீசார், கடந்த ஏப்ரல் 1ம் தேதி வரை, 6,800க்கும் மேற்பட்ட வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பிறகுதான் இந்த வாகனங்கள் விடுவிக்கப்படும் என தெரிகிறது. ஆனால் காவல் துறை இப்படி எவ்வளவோ முயன்றும் இன்னும் பலர் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி கொண்டுதான் உள்ளனர்.

அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

எனவே வாகன ஓட்டிகளுக்கு போலீசார் 'மரண பயத்தை' காட்ட தொடங்கியுள்ளனர். ஆம், கோவிட்-19 வைரஸ் போன்று டிசைன் செய்யப்பட்ட ஹெல்மெட்களை அணிவது காவல் துறை அதிகாரிகள் மத்தியில் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த ஹெல்மெட்டை அணிந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

இதன்படி தமிழக தலைநகர் சென்னையில், காவல் துறை அதிகாரி ஒருவர், கோவிட்-19 வைரஸை போன்று வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட்டை அணிந்தபடி, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இச்சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதன்பின் பெங்களூர் போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ ஒன்று வைரலாக பரவியது.

அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

வீடுகளை விட்டு வெளியே வரும் வாகன ஓட்டிகளை கோவிட்-19 வைரஸ் தொற்றி கொள்ளும் என்பதை புரிய வைக்கும் வகையில் பெங்களூர் போலீசார் நடித்து காட்டி அந்த வீடியோவை வெளியிட்டனர். இதில் நடித்த காவல் துறையினர் கொரோனா ஹெல்மெட்டை அணிந்திருந்தனர். இந்த வீடியோவில் மற்றொரு ஹைலைட்டும் இருக்கிறது.

அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

சங்கு ஊதியும், மணி அடித்தும் கோவிட்-19 வைரஸின் அபாயத்தை வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை புரிய வைத்தது. இந்த வரிசையில், கோவிட்-19 வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, ஐதராபாத் போக்குவரத்து போலீசார் சார்பில், விழிப்புணர்வு பேரணி ஒன்று நேற்று (ஏப்ரல் 3ம் தேதி) நடத்தப்பட்டது.

அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு... மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்... நடுங்க வைக்கும் போலீஸ்

இந்த பேரணியில் கலந்து கொண்ட போக்குவரத்து காவல் துறையினர், கொரோனா வைரஸ் ஹெல்மெட்டை அணிந்திருந்தனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுப்பதற்காகவும், கோவிட்-19 வைரஸின் தீவிரத்தை அவர்களுக்கு புரிய வைப்பதற்காகவும் இந்த பேரணி நடத்தப்பட்டது. ஆக மொத்தத்தில் நாடு முழுவதும் கொரோனா ஹெல்மெட் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது.

Image Courtesy: Hyderabad Traffic Police

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyderabad Traffic Cops Use Coronavirus Inspired Helmets To Raise Awareness. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X