புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் இந்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு அளித்து வரும் ஆதரவின் காரணமாக இந்திய மார்க்கெட்டில் படிப்படியாக புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாக தொடங்கியுள்ளன. இதில், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முக்கியமானது.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஜூலை 9ம் தேதி இந்திய மார்க்கெட்டிலும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

இந்தியாவில் ஏற்கனவே ஒரு சில எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இருந்தாலும் கூட, அவை நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை. ஆனால் அந்த குறைகளை எல்லாம் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி களைந்துள்ளது. இந்தியா கண்ட ஒரு முழுமையான, நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் கார் மாடல் என ஹூண்டாய் கோனாவை கூறலாம்.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 39.2KWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யலாம். இந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் எக்ஸ் ஷோரூம் விலை 25.30 லட்ச ரூபாய்.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

விலை சற்று அதிகம் என்பதை தவிர வேறு எந்த குறையும் சொல்ல முடியாத மாடலாக ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி திகழ்கிறது. ஆனால் மத்திய அரசின் ஒரு அதிரடி நடவடிக்கை மூலமாக விலை அதிகம் என்ற பிரச்னைக்கும் கொஞ்சம் தீர்வு காணப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி கவுன்சில் சமீபத்தில் குறைத்தது.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை 1.50 லட்ச ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தால்தான் இந்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்குள்ள ஒரு வீட்டை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கராஜில் நிறுத்தப்பட்டிருந்த கோனா எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 26ம் தேதி) இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

இது பியாரோ கோசென்டினோ (Piero Cosentino) என்பவரது கராஜ் ஆகும். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தனது கராஜில் இருந்து கரும்புகை வெளியேறி கொண்டிருப்பதை பியாரோ கோசென்டினோ பார்த்தார். உடனடியாக ஓடி சென்று பார்த்தபோது உள்ளே நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

இதனால் பியாரோ கோசென்டினோ அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மாண்ட்ரியல் தீயணைப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் சுமார் 30 தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் கராஜின் மேற்கூரை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக சேதமடைந்து விட்டன.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

''அதே சமயம் நாங்கள் மட்டும் கராஜ் கதவிற்கு அருகே நின்று கொண்டிருந்தால், இந்நேரம் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருப்போம்'' என சம்பவத்தின் தீவிரத்தை பியாரோ கோசென்டினோ விவரித்துள்ளார். பியாரோ கோசென்டினோ கடந்த மார்ச் மாதம் இந்த புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

ஆனால் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்தது ஏன்? என்பதற்கான காரணங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் எதுவும் கராஜிற்குள் இல்லை என்று மட்டும் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. எனினும் அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

அதேபோல் ஹூண்டாய் நிறுவன அதிகாரிகளும் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். வெகு விரைவில் அவர்களிடம் இருந்து அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களில் லித்தியம் இயான் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. இதில், சில பேட்டரிகள் அதிகப்படியான வெப்ப நிலைகளில் ''ஓவர் ஹீட்'' ஆகி தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.. இந்திய வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

இந்தியா உள்பட உலக நாடுகள் பலவும் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து மெல்ல மெல்ல விலகி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் திடீர் தீ என்பது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமடைவதில் இது பின்னடைவை ஏற்படுத்துகிறது. முன்னதாக தீப்பற்றிய சமயத்தில் கோனா எலெக்ட்ரிக் கார் சார்ஜருடன் இணைக்கப்படாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தீ விபத்திற்கான காரணத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.

News Source: CBC

Image Courtesy: Mathieu Daniel Wagner/Radio-Canada

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyundai Kona Electric Car Catches Fire In Canada. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X