ஹூண்டாய் உடன் கை கோர்த்த ரோல்ஸ் ராய்ஸ்... இவங்க ரெண்டு பேரும் எதுக்காக இணைஞ்சிருக்காங்க தெரியுமா?..

ஹூண்டாய் (Hyundai) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) ஆகிய இரு நிறுவனங்களும் கை கோர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹூண்டாய் உடன் கை கோர்த்த ரோல்ஸ் ராய்ஸ்... இவங்க ரெண்டு பேரும் எதுக்காக இணைஞ்சிருக்காங்க தெரியுமா?..

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai)-ம், சொகுசு கார் உற்பத்தியாளரான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce)-ம் பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நிறுவனங்களும் இணைந்து எலெக்ட்ரிக் ப்ரோபல்சன் (electric propulsion) மற்றும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் தொழில்நுட்பம் ஆகியவற்றை உருவாக்க இருக்கின்றன.

ஹூண்டாய் உடன் கை கோர்த்த ரோல்ஸ் ராய்ஸ்... இவங்க ரெண்டு பேரும் எதுக்காக இணைஞ்சிருக்காங்க தெரியுமா?..

வானூர்தி பிரிவை நவீன மயமாக்கும் பொருட்டு அவை உருவாக்கப்பட இருக்கின்றன. ஆமாங்க, விமானம் மற்றும் பிற பறக்கும் ஊர்திகளுக்கான எலெக்ட்ரிக் ப்ரோபல்சன் மற்றும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லால் இயங்கும் மோட்டார்களையே இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க இருக்கின்றன.

ஹூண்டாய் உடன் கை கோர்த்த ரோல்ஸ் ராய்ஸ்... இவங்க ரெண்டு பேரும் எதுக்காக இணைஞ்சிருக்காங்க தெரியுமா?..

ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வானூர்திக்கு தேவையான முக்கிய பாகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இதேபோல், ஹூண்டாய் நிறுவனமும் ஏர் மொபிலிட்டி சார்ந்து பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இரு நிறுவனங்களும் இப்பிரிவில் தரமான சம்பவத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இணைந்திருக்கின்றன.

ஹூண்டாய் உடன் கை கோர்த்த ரோல்ஸ் ராய்ஸ்... இவங்க ரெண்டு பேரும் எதுக்காக இணைஞ்சிருக்காங்க தெரியுமா?..

உலகமே மின் வாகன இயக்கத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு மின் வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இரு நிறுவனங்களும் வானூர்தி துறையை மின்சார மயமாக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன ஹூண்டாய் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ். அதிலும், ஃப்யூவல் செல்லை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் விமானத்தை இயக்க இரு நிறுவனங்களும் முயற்சியை மேற்கொண்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ஹூண்டாய் உடன் கை கோர்த்த ரோல்ஸ் ராய்ஸ்... இவங்க ரெண்டு பேரும் எதுக்காக இணைஞ்சிருக்காங்க தெரியுமா?..

முழுமையாக மின்சாரத்தால் இயங்கும் ஓர் வாகனத்தைக் காட்டிலும் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் வாகனங்கள் அதிக சிறப்புக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றன. ஏனெனில், ஓர் மின்சார வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும் எனில் பல மணி நேரங்களைச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஹூண்டாய் உடன் கை கோர்த்த ரோல்ஸ் ராய்ஸ்... இவங்க ரெண்டு பேரும் எதுக்காக இணைஞ்சிருக்காங்க தெரியுமா?..

அதேநேரத்தில், ஃப்யூவல் செல் வாகனங்களில் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்ப ஒரு சில நிமிடங்களே போதும். வெகு விரைவில் அதை நிரப்பிவிட முடியும். உதாரணமாக சிஎன்ஜி, எல்பிஜி வாகனங்களில் வாயுக்களை நிரப்புவதைப் போல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லையும் உடனடியாக நிரப்பிக் கொள்ள முடியும்.

ஹூண்டாய் உடன் கை கோர்த்த ரோல்ஸ் ராய்ஸ்... இவங்க ரெண்டு பேரும் எதுக்காக இணைஞ்சிருக்காங்க தெரியுமா?..

அதுமட்டுமின்றி, ஒரு முறை சிலிண்டரை முழுமையாக நிரப்பினால் ஆயிரக் கணக்கான கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ளவும் முடியும். இத்தகைய ஓர் சிறப்புமிக்க வாகனமாகவே ஹைட்ரஜன் ஃபூயவல் செல்லால் இயங்கும் வாகனங்கள் இருக்கின்றன. இத்தகைய ஓர் வசதிக் கொண்ட விமானங்களையே ஹூண்டாய் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் தயாரிக்க உள்ளன.

ஹூண்டாய் உடன் கை கோர்த்த ரோல்ஸ் ராய்ஸ்... இவங்க ரெண்டு பேரும் எதுக்காக இணைஞ்சிருக்காங்க தெரியுமா?..

கூட்டணியின் அடிப்படையில் ஹூண்டாய் நிறுவனம் வானூர்திகளுக்கான மின்சாரத்தால் இயங்கும் ப்ரபல்சனையே உருவாக்க இருக்கின்றது. அதாவது, ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை மின்சார கன்வெர்ட் செய்து, அந்த மின்சாரத்தின் வாயிலாக இயங்கும் தொழில்நுட்பங்களையே நிறுவனம் உருவாக்க இருக்கின்றது.

ஹூண்டாய் உடன் கை கோர்த்த ரோல்ஸ் ராய்ஸ்... இவங்க ரெண்டு பேரும் எதுக்காக இணைஞ்சிருக்காங்க தெரியுமா?..

இதன் உருவாக்க பணியின்போது தேவைப்படும் அனைத்துவிதமான தொழில்நுட்ப உதவியையும் ரோல்ஸ் ராய்ஸ் வழங்க இருக்கின்றது. இத்தகைய ஓர் கருவியை விமானத்துறையில் பயன்படுத்துவதனால் இன்னும் பல மடங்கு காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும். மேலும், எரிபொருள் பயன்பாட்டை பல மடங்கு குறைக்கவும் முடியும்.

Most Read Articles
English summary
Hyundai rolls royce joins to bring air mobility with electric propulsion
Story first published: Tuesday, July 19, 2022, 20:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X