சான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ!

சாலையில் திருபம்பும்போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்தின் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ!

விபத்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அரங்கேறக்கூடியது. இதனை விரும்பக் கூடியவர்கள் நிச்சயம் இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் இந்தியச் சாலைகளும், அதன் கட்டமைப்புகளும்தான். ஆகையால், நீங்கள் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றாலும், நான்கு சக்கர வாகனத்தில் சென்றாலும் சரி இந்தியாவின் பல சாலைகள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளன.

சான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ!

ஆகையால், சாலை பயணத்தின்போது சற்று கூடுதல் கவனத்துடன் செல்வது மிக முக்கியம். பெரும்பாலும், இந்தியர்கள் மத்தியில் எஸ்யூவி காரே அதிகளவில் புகழ்பெற்றதாக இருக்கின்றது. ஏனென்றால், மிகப் பெரிய அளவிலான உருவம், கம்பீரமான தோற்றம், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவற்றை அவை கொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

சான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ!

ஆனால், அதன் மிகப்பெரிய உருவமும், பிரமாண்டமுமே மிகப் பெரிய ஆபத்தானதாக இருக்கின்றது. நாங்கள் எஸ்யூவி கார் என்றாலே பாதுகாப்பு நிறைந்தது என்று கூற வரவில்லை. சூழ்நிலையைப் பொருத்து அவை ஆபத்தானவையாக மாறிவிடுகின்றன. அதேசமயம், ஹேட்ச்பேக் ரக கார்கள் எஸ்யூவி மாடலைக் காட்டிலும் சற்று பாதுகாப்பு நிறைந்தவையாக இருக்கின்றன.

சான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் ஓர் விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளது. அதுகுறித்த, பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது யுடியூபில் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளை பவர்ஸ்ட்ரோக் பிஎஸ் என்ற யுடியூப் தளம்தான் வெளியிட்டிருக்கின்றது.

அந்தவகையில், இந்த காட்சிகள் அனைத்தும் பார்க்கிங் யார்ட் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில், விபத்து குறித்த அதிர்ச்சியான காட்சிகள் பதிவாகியுள்ளன.

வீடியோவில், ஃபோர்டு நிறுவனத்தின் எஸ்யூவி ரக எண்டெவர் கார், பார்க்கிங் யார்ட் இருக்கும் பகுதியை நோக்கி வந்த வேகத்திலேயே திரும்புகின்றது. அப்போது, அதே சாலையில் வந்த ஹூண்டாய் சான்ட்ரோ கார் எதிர்பாராத விதமாக எண்டெவர் கார் மீது மோதியது. இந்த விபத்தில், பிரமாண்ட உருவமுடைய ஃபோர்ட் கார் நிலைகுலைந்து, தலை குப்புற கவிழ்ந்தது.

சான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ!

ஆனால், அதைவிட பல மடங்கு சிறிய ரக காரான, ஹூண்டாய் சான்ட்ரோ ஹேட்ச்பேக் கார் சிறு சேதத்துடன் தப்பித்தது. அதேசமயம், பிரமாண்டமான ஃபோர்டு எண்டெவர் கார் நிலைகுலைவதற்கு, சான்ட்ரோவின் அதிவேகமே முக்கிய காரணமாக இருக்கின்றது. அதுவும் நேரடியாக, எண்டெவர் காரின் பக்கவாட்டு பகுதியின் மத்தியில் மோதியதால், அந்த கார் உடனே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ!

அதேசமயம், ஃபோர்டு எண்டெவர் கார் அந்த சமயத்தில் திரும்பிக் கொண்டிருந்ததும், அது எளிதாக கவிழ்ந்ததற்கு காரணமாக இருக்கின்றது. அந்தசமயத்தில், எண்டெவர் காரின் சஸ்பென்ஷன் அனைத்தும் கம்பரஸ் நிலையில் இருந்ததால், சான்ட்ரோ காரின் மோதலைத் தாங்காமல், அது எளிதில் கவிழ்ந்துவிட்டது.

சான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ!

விபத்து எந்தவொரு காரையும் எந்த சூழ்நிலைக்கும் தள்ளிவிடும் என்பதை உணர்த்தும்வகையில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆகையால், சாலையில் செல்லும்போது, முக்கியமாக வளைவுகளில் திரும்பும் போது, சிக்னலைக் கடக்கும்போது அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். இவற்றை உணர்த்தும் வகையிலேயே, இந்த விபத்து தற்போது அரங்கேறியுள்ளது.

சான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ!

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த எஸ்யூவி ரக எண்டெவர் கார், தற்போது இரண்டு விதமான டீசல் எஞ்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அந்தவகையில், 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் ஆகிய கொள்ளளவில் இது கிடைக்கின்றது. இதில், 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 160 பிஎஸ் பவரையும், 385 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேபோன்று, 3.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் 200 பிஎஸ் பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தம் திறனைக் கொண்டுள்ளது.

சான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ!

ஹூண்டாய் சான்ட்ரோ கார் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கின்றது. இது, 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இத்துடன், இதன் எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், 7 விதமான வண்ணத் தேர்வில் கிடைக்கும் இந்த கார், ரூ. 3.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyundai Santro Hits Ford Endeavour. Read In Tamil.
Story first published: Monday, June 24, 2019, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X