உச்சி வெயில்ல வண்டிய நிறுத்தினா பெட்ரோல் ஆவியாகுமா?.. ரொம்ப நாள் சந்தேகத்திற்கு முற்று புள்ளி வைக்கலாம் வாங்க!

உச்சி வெயிலில் வாகனத்தை நிறுத்தினால் பெட்ரோல் ஆவியாகுமா என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஓர் யுட்யூபர் விநோத ஆய்வை மேற்கொண்டிருக்கின்றார். இது குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உச்சி வெயில்ல வண்டிய நிறுத்தினா பெட்ரோல் ஆவியாகுமா?.. ரொம்ப நாள் சந்தேகத்திற்கு முற்று புள்ளி வைக்கலாம் வாங்க!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு பக்கம் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க, மறுபக்கம் இந்த வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. காடுகளும், மரங்களும் அழிக்கப்பட்டு வருவதன் காரணத்தினாலேயே இந்தளவிற்கு வெயில் தற்போது கொளுத்திக் கொண்டிருக்கின்றது.

உச்சி வெயில்ல வண்டிய நிறுத்தினா பெட்ரோல் ஆவியாகுமா?.. ரொம்ப நாள் சந்தேகத்திற்கு முற்று புள்ளி வைக்கலாம் வாங்க!

தற்போதைய உச்சபட்ச வெயிலுக்கு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இதுகுறித்த தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கபோவதில்லை. வெயிலில் நிறுத்தப்படுவதனால் எரிபொருள் தொட்டியில் இருந்து பெட்ரோல் ஆவியாகுவதாக கூறப்படுகின்றது. இந்த கூற்றின் உண்மையா?, அல்லது பொய்யா?, என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உச்சி வெயில்ல வண்டிய நிறுத்தினா பெட்ரோல் ஆவியாகுமா?.. ரொம்ப நாள் சந்தேகத்திற்கு முற்று புள்ளி வைக்கலாம் வாங்க!

சமீபத்தில் ஓர் யுட்யூப் சேனலைச் சேர்ந்த நபர் இதுகுறித்து ஆராயும் பணியில் களமிறங்கினார். இதற்காக சிறிதளவு பெட்ரோலை எடுத்துக் கொண்ட அவர் ஓர் அகலமான வாய் பகுதிக் கொண்ட கண்ணாடி கோப்பையில் அந்த பெட்ரோலை நிரப்பினார். இதையே வெயிலில் வைத்து தன்னுடைய சோதனையை அவர் மேற்கொண்டார்.

உச்சி வெயில்ல வண்டிய நிறுத்தினா பெட்ரோல் ஆவியாகுமா?.. ரொம்ப நாள் சந்தேகத்திற்கு முற்று புள்ளி வைக்கலாம் வாங்க!

அவர் மேற்கொண்ட சோதனையில், வெயில் அதிகரிக்க அதிகரிக்க பெட்ரோலின் ஆவியாதல் வேகமாகமும் அதிகரித்ததை நம்மால் காண முடிகின்றது. பெட்ரோல் நிரப்பி வைத்த கோப்பை திரவத்தை அளவிட பயன்படுத்தப்படும் அளவியாகும். யூட்யூபர் சுமார் 910 மில்லி லிட்டர் பெட்ரோலை அந்த கோப்பையில் நிரப்பினார். அவர் ஆராய்ச்சியை ஆராம்பிக்கும் போது வெயிலின் அளவு 33 டிகிரி செல்சியஸாக இருப்பதாக செல்போன் காண்பித்தது.

உச்சி வெயில்ல வண்டிய நிறுத்தினா பெட்ரோல் ஆவியாகுமா?.. ரொம்ப நாள் சந்தேகத்திற்கு முற்று புள்ளி வைக்கலாம் வாங்க!

இதையடுத்து சுமார் 2 மணி நேரங்கள் கழித்து அளவை பரிசோதிக்கும்போது, அந்த கோப்பையில் 560 எம்எல் பெட்ரோல் மட்டுமே இருந்தது. இதற்கு அடுத்தபடியாக மீண்டும் ஓர் இரண்டு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது அது 350 மில்லி லிட்டராக குறைந்தது. இந்த அளவுகள் பெட்ரோல் காற்றில் கரைவதில் சில வேறுபாடுகளைக் கொண்டிருப்பதை நமக்கு உணர்த்துகின்றது.

உச்சி வெயில்ல வண்டிய நிறுத்தினா பெட்ரோல் ஆவியாகுமா?.. ரொம்ப நாள் சந்தேகத்திற்கு முற்று புள்ளி வைக்கலாம் வாங்க!

ஆம், அதிகப்படியான சூரிய ஒளி மட்டுமே பெட்ரோலை ஆவியாக்க காரணமாக அமைவதில்லை. காற்றின் வேகம் மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் இவையிரண்டைப் பொருத்தும் பெட்ரோல் ஆவியதலின் வேகம் மாறுபடுகின்றது. இதுவே இந்த ஆராய்ச்சியின் வாயிலாக நமக்கு கிடைத்திருக்கம் தகவல் ஆகும்.

உச்சி வெயில்ல வண்டிய நிறுத்தினா பெட்ரோல் ஆவியாகுமா?.. ரொம்ப நாள் சந்தேகத்திற்கு முற்று புள்ளி வைக்கலாம் வாங்க!

அதேவேலையில், ஓர் வாகனத்தில் இருக்கும் எரிபொருள் சூரிய ஒளியால் ஆவியதற்கும், திறந்த வெளியில் கோப்பையில் நிரப்பப்பட்ட பெட்ரோல் ஆவியதற்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். வாகனங்களில் வழங்கப்பட்டிருக்கும் எரிபொருள் தொட்டிகள் பிரத்யேகமாக ஆவியதலைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதேவேலையில், மிக உச்சபட்ச வெயில் காரணத்தினால் மிக கணிசமான அளவே அவை ஆவியாகின்றன என கூறப்படுகின்றது.

உச்சி வெயில்ல வண்டிய நிறுத்தினா பெட்ரோல் ஆவியாகுமா?.. ரொம்ப நாள் சந்தேகத்திற்கு முற்று புள்ளி வைக்கலாம் வாங்க!

இந்த கோப்பை ஆராய்ச்சியில் அரங்கேறியதைப் போல மிக அதிக வேகத்தில் ஆவியாதல் வாகனங்களில் அரங்கேறாது. ஒருவேலை யுட்யூபர் இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை நிரப்பி, அதை உச்சி வெயிலில் நிறுத்தி, பின்னர் அதில் இருக்கும் பெட்ரோலின் அளவை எடுத்து ஆராய்ந்திருந்தால் இதன் பின்னால் இருக்கும் அனைத்து விஷயங்களையும் நம்மால் முழுமையாக அறிந்திருக்க முடியும். மேலும், நமக்கும் மிக துள்ளியமான தகவல் கிடைத்திருக்கும்.

இருப்பினும், இந்த வீடியோவின் வாயிலாக உச்சி வெயில் மட்டுமல்ல காற்றின் வேகம் மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதத்தைப் பொருத்தும் எரிபொருள் ஆவியாதல் அமையும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இவை எரிபொருள் திறந்த நிலையில் இருக்கும்போது மட்டுமே நிகழும். ஆகையால், இருக்கும் மரங்களை வெட்டாமல், அந்தமரங்கள் தரும் நிழலுக்கு அடியில் வாகனங்களை நிறுத்துவதை கடைப்பிடிப்பது மிக சிறந்தது. இதன் வாயிலாக வாகனங்கள் விரைவாக புதுப் பொலிவு இழப்பதை நம்மால் தவிர்க்க முடியும். இத்துடன், நான்கு சக்கர வாகனங்களின் கேபின் பகுதியை சற்றே குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் பேருதவியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
If the vehicle parked under the sun will the petrol evaporate
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X