இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

குறிப்பிட்ட வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கை எதற்கானது என்பது பற்றிய முழுமையான தகவலைக் கீழே காணலாம்.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

இப்போதாங்க வெளிய விட்டு போனேன் அதுக்குள்ள வண்டிய தள்ளி போய்ட்டாங்க... என கூறுமளவிற்கு இந்தியாவில் மிகவும் நூதமான வகையில் வாகன கொள்ளையர்கள் வாகனங்களைக் களவாடி வருகின்றனர். நவீன கால தொழில்நுட்பங்களை எப்படி திருட்டில் கையாள வேண்டும் என்பதை நன்கு அறிந்து அவர்கள் வாகன திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

ஆகையால், அவர்களை பிடிப்பதில் போலீஸாருக்கு சற்று சிரமமாக காட்சியளிக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் நவீன யுக்திகளைக் கையாண்டு போலீஸாரின் பார்வையில் வாகன கொள்ளையர்கள் தப்பித்து வருகின்றனர்.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

இருப்பினும், வாகன திருட்டை ஒட்டுமொத்த ஒழிக்க வேண்டும் என்பதில் காவல்துறை மிகக் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றன. அரசுகளும் இதில் அதிக அக்கறை செலுத்துகின்றன. வாகன திருட்டை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மிக தீவிர கண்கானிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

இருந்தும் வாகன கொள்ளையர்கள் தங்களின் கை வரிசையைக் காட்டிய வண்ணம் இருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையை சற்று விநோதமான முறையில் கையாளும் விதமாக அவுரங்காபாத் காவல்துறை ஓர் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

இனி திருட்டை வாகனங்களை வாங்குபவர்களும் குற்றவாளியாக கருதப்பட்டு அவர்கள் மீது வாகன திருட்டு வழக்கு பதியப்படும் என அறிவித்திருக்கின்றது. வாகன திருட்டையும், திருட்டு வாகன விற்பனையையும் ஒழிக்கும் பொருட்டு இந்த அதிரடி அறிவிப்பை அவுரங்காபாத் காவல்துறை வெளியிட்டுள்ளது.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்ற காரணத்திற்காக சிலர் வாகனத்தின் ஆவணத்தைக் கூட சரிபார்க்காமல் வாங்கிவிடுகின்றனர். இதுபோன்று குறைந்த விலையில், போதிய ஆவணங்கள் இன்றி விற்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் திருட்டு வாகனங்களே ஆகும்.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

இத்தகைய செயல்பாட்டையே தவிர்க்கும் வகையில் அவுரங்காபாத் காவல்துறை ஆணையல் நிகில் குப்தா, புதிய விதியை அறிவித்துள்ளார். இது திருட்டு வாகனங்களை விற்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், நிகில் குப்தாவின் இந்த அதிரடி அறிவிப்பால் எதிர்காலத்தில் வாகன திருட்டு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

போலீஸார் கூறியிருக்கும் தகவலின்படி, வாகன கொள்ளையர்கள் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு பல்வேறு யுக்திகளை கையாளுவது தெரிய வந்துள்ளது. வாகன விற்பனையாளர்போல் வாடிக்கையாளரை அணுகி, அவரிடத்தில் வாகனத்தை ஒப்படைத்துவிட்டு, இப்போது 50 சதவீதம் தொகை கட்டினால்போதும், மீதத் தொகை ஆவணங்களை கொடுத்த பின்னர் செலுத்துங்கள் என கூறி திருட்டு வாகனங்களை ஒப்படைத்துவிடுகின்றனர்.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

வாகனத்தை கொடுத்துவிட்டு, 50 சதவீத பணத்தைப் பெறும் கொள்ளையர்கள் அதன் பின்னர் ஆவணத்தை வழங்க திரும்பி வருவதே இல்லை. இவ்வாறே பலரிடத்தில் விநோத முறையில் திருட்டு வாகனங்களை வாகன கொள்ளையர்கள் விற்று காசு பார்த்திருக்கின்றனர்.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

இதுபோன்று பல்வேறு யுக்திகளை அவர்கள் திருட்டு வாகனங்களைக் கையாளுவதாக காவல்துறை தெரிவித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே திருட்டு வாகனங்களை வாங்குவோரும் குற்றவாளி என்ற உத்தரவை அவுரங்காபாத் காவல்துறை வெளியிட்டுள்ளது.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

மிக சமீபத்தில் திருட்டு நகையை வாங்கியதற்காக நகை விற்பனையாளர் ஒருவர் மீது நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்தே, இதே யுக்தியை காவல்துறையினர் வாகன திருட்டு விஷயத்திலும் கையாள இருக்கின்றது.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

இதுமட்டுமின்றி வாகன திருட்டைத் தவிர்க்க அதிகம் வாகனங்கள் திருட்டு சம்பவம் அரங்கேறும் இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதியை கூடுதல் பாதுகாப்பு வலையத்திற்குள் அவுரங்காபாத் போலீஸார் கொண்டு வந்திருக்கின்றனர். இத்துடன், பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் மற்றும் நகரத்தின் குறிப்பிட்ட சில இடங்களைக் கூடுதல் கவனத்துடன் கண்கானிக்கவும் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

பெரும்பாலும் திருடப்படும் வாகனங்கள் கிராமப்புறங்களிலேயே விற்கப்பட்டிருக்கின்றன. குறைந்த விலையில் வாகனங்களைத் தேடும் ஏழை மக்களை தேடி சென்று திருடர்கள் ஏமாற்றி வருகின்றனர். ஆகையால், இந்த விவகாரத்தில் அப்பாவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டு விடுவார்களே என்ற அச்சம் பொதுமக்கள் எழும்பியுள்ளது.

இனி அந்த வாகனங்களை வாங்குவோர் மீதும் வழக்கு பதியப்படும்... போலீஸாரின் கடும் எச்சரிக்கையால் பீதி!!

எனவே, காவல்துறை சார்பில் திருட்டு வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்ற சட்ட சிக்கல்களில் இருந்து கிராமவாசிகளை காப்பாற்ற உதவும். மேலும், நகரங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
If you are purchasing stolen vehicles you will be considered as a accused
Story first published: Thursday, August 5, 2021, 20:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X