இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

இந்தியாவில் ஏர் டெக்ஸியை தயாரிக்க ஐஐடி கான்பூர் மற்றம் விடிஓஎல் ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்துள்ளனர். இவர்கள் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக ஒரு ஏர் டெக்ஸியை வடிவமைத்து சோதனையிட திட்டமிட்டுள்ளனர்.

By Balasubramanian

சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிமானதால் இனி பறந்து தான் போக வேண்டும் என்று வேடிக்கையாக நாம் சொல்லி வந்தது. தற்போது நினைவாகி கொண்டிருக்கிறது.

இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

ஆம் இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பறக்கும் டெக்ஸியை வடிவமைக்க பல நாடுகள் போட்டி போட்டு கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவாக போக்குவரத்து மற்றும் அதிக இட வசதிக்கு ஒரே வழி அகாய மார்க்கமான போக்குவரத்து தான்.

இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

இன்று பறந்து செல்வதற்காக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இருந்தாலும் அதை வாங்குவதற்கான செலவு, அதை பாராமரிக்க தேவையான செலவு என எல்லோராலும் அதை வாங்க முடியாது. மேலும் இவை எல்லாம் நீண்ட தூர பயணத்திற்கு பயன்படுபவை.

இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

ஆனால் இன்று பெரு நகரங்களில் உள்ள மக்களுக்கு சிட்டிக்குள் பயணம் செய்யவே குட்டி ஹெலிகாப்டர் போன்ற வாகனங்கள் தேவைப்படுகிறுது. மதியம் 2 மணி வெயிலில் டிராபிக் சிக்னல்களில் நிற்பவர்கள் பலரின் வேண்டுதல் இதுவாகத்தான் இருக்கும்.

இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

அதை நினைவாக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள உபேர் நிறுவனம் நாசாவுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன் படி வரும் 2023ம் ஆண்டிற்குள் அமெரிக்காவின் டால்லாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய மாகாணங்களில் ஏர் டாக்ஸி திட்டத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

இதே போல சமஸ்கிருத சொல்லான வாகனா என்கிற பெயரில் ஐரோப்பிய தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், தன் பங்கிற்கு ஏர் டெக்ஸிக்கான தொழிற்நுட்பத்தை வடிவமைத்து வருகிறது. இந்த பணிகள் கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. இந்த வாகனா 15 அடி உயரத்தில் பறக்ககூடியது. இதில் ஒருவர் அல்லது பொருட்களை ஏற்றி பயணம் கொண்டு பயணம் செய்ய வசதியாக இருக்கும்.

இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

இப்படியாக வெளிநாடுகள் பறக்கும் சிறிய ரக வாகனங்களை தயாரிப்பதில் பெரும் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இந்தியாவிலும் அநதற் முயற்சி தற்போது துவங்கப்பட்டுள்ளது. ஐஐடி கான்பூர் மாணவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

ஐஐடி கான்பூர் ஆராய்ச்சி மாணவர்களும், விடிஓஎல் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதாவது வரும் 5 ஆண்டுகளுக்குள் ஏர் டெக்ஸி குறித்த வாகனத்தை வெற்றி கரமாக வடிவமைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

அதற்காக ரூ15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டுகளுக்குள் இவர்கள் உருவாக்கும் புரோட்டோ டைப் இயந்திரத்தின் செயல்பாட்டை பொருத்து தொடர்ந்து அதிக அளவில் அதை உற்பத்தி செய்யப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

இந்த பறக்கும் டெக்ஸி திட்டம் வெற்றிகரமாக நிரைவடைந்தால் மக்கள் டிராப்பிக் இல்லாம் அகாயத்தில் பறந்த படியே செல்ல முடியும். ஆனால் இந்த விமானத்தை உருவாக்குவதில் உள்ள சவாலே இதை டேக் ஆப் செய்ய வைப்பதில் லேன்ட் செய்ய வைப்பதிலும் தான். பறந்து செல்வதற்காக பல தொழிற்நுட்பங்கள் ஏற்கனவே உள்ளன.

இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

இவர்கள் தயாரிக்கும் இந்த ஏர் டெக்ஸி விமானம் முற்றுலும் எலெக்ரிக் பேட்டரியிலயே இயங்கும். இதனால் இதற்காக செலவும் குறைவாகதான் இருக்கும் பராமரிப்பு செலவும் குறைவாக தான் இருக்கும் ஆகையால் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மக்கள் இதை எதிர்பார்க்க முடியாத அளவு குறைந்த விலையில் இதில் பயணம் செய்ய முடியும்.

இந்தியாவில் தயார் ஆகிறது பறக்கும் டாக்ஸி; ஐஐடி மாவணர்கள் புதிய சாதனை முயற்சி

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சி மாணவர்கள் விண்ட் டனல், மற்றும் பிளைட் லேப்ஸ் ஆகியவற்றில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்கள். இதனால் இந்த திட்டத்தை எதிர்பார்த்த நேரத்தை விட குறைவான நேரத்தில் இதை முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் முயற்சி வெற்றி பெறுவதற்கான உங்கள் வாழ்த்துக்களை கீழே உள்ள கமெண்டில் தெரிவியுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Source: Minds Eye Design

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
IIT-Kanpur, VTOL Aviation Sign $2.2 Mn MoU To Develop Flying Taxi Prototype. Read in Tamil
Story first published: Monday, May 28, 2018, 13:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X