சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!

அதிவேகத்தில் செல்லும் புதுமையான போக்குவரத்து சாதனத்தை உருவாக்கும் முயற்சிகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் பல புதுமையான போக்குவரத்து திட்டங்களுக்கான யோசனைகளை முன்வைத்து வருகிறார்.

சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!

அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன், மணிக்கு 1,200 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும், ஹைப்பர்லூப் என்ற அதிவேக போக்குவரத்து சாதனத்தின் மாதிரி திட்டத்தை எலான் மஸ்க் முன்வைத்தார். மேலும், இந்த கனவு திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!

இந்த நிலையில், எலான் மஸ்க்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் சார்பில், ஹைப்பர்லூப் வாகன வடிவமைப்பு தொடர்பான போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. சிறந்த ஹைப்பர்லூப் வாகன மாதிரியை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதற்கான போட்டி வரும் ஜூலை 20ந் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க இருக்கிறது.

சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!

இந்த போட்டிக்கான தகுதிச் சுற்றில் உலகம் முழுவதும் இருந்து 1,600 பொறியாளர் குழுக்கள் தங்களது மாதிரி வாகனத்துடன் கலந்து கொண்டனர். அதில், இறுதி சுற்றுக்கு சென்னை ஐஐடி மாணவர் குழு உருவாக்கிய ஹைப்பர்லூப் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஆசியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே குழு என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!

'அவிஷ்கார் ஹைப்பர்லூப்' என்ற பெயரில் சென்னை ஐஐடி மாணவர்கள் தங்களது வாகனத்தின் மாதிரியுடன் கலந்து கொள்ள இருக்கின்றனர். சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் பல்வேறு பொறியியல் பிரிவுகளை சேர்ந்த 30 மாணவர்கள் சேர்ந்து இந்த ஹைப்பர்லூப் மாதிரி வடிவத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!

அதிவேகம், பாதுகாப்பு, பேட்டரி திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், சவால்களை கடந்து சிறந்த முறையில் இந்த வாகன மாதிரி தயாரிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!

சென்னை ஐஐடி மாணவர் குழு உருவாக்கியிருக்கும் ஹைப்பர்லூப் மாதிரி வாகனம் 3 மீட்டர் நீளமும், 120 கிலோ எடையும் கொண்டதாக இருக்கிறது. ஆனால், இந்த வாகனத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.

சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!

காற்று இல்லாத வெற்றிட குழாய்களில், பாட் எனப்படும் ரயில் பெட்டி போன்ற வாகனத்தை அதிவேகத்தில் செலுத்துவதற்கான கட்டமைப்புடன் ஹைப்பர்லூப் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதிர்வுகள் இல்லாமல், மிக சொகுசான பயணத்தை இந்த ஹைப்பர்லூப் சாதனம் வழங்கும்.

சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!

ஹைப்பர்லூப் கட்டமைப்புக்கான வெற்றிட குழாய்களில் ஒன்றன் பின் ஒன்றாக சில நிமிட இடைவெளியில் பாட் வாகனத்தை செலுத்த முடியும். ஹைப்பர்லூப் வாகனம் மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் செல்லும். சென்னையிலிருந்து மதுரையை 35 முதல் 40 நிமிடங்களில் அடைந்துவிடும் வாய்ப்பை வழங்கும்.

சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ஹைப்பர்லூப் வாகன கான்செப்ட் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!

இந்த புரட்சிகர போக்குவரத்து சாதனத்திற்கான கனவு திட்டத்தை நனவாக்குவதற்கான முயற்சிகளில் எலான் மஸ்க் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக, பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் சோதனை களமும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்த தசாப்தத்தில் ஹைப்பர்லூப் திட்டத்திற்கான இறுதி வடிவம் மற்றும் தொழில்நுட்பம் மெய்ப்பட்டுவிடும் என்று நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
A team from IIT Madras, have been shortlisted for the final round of SpaceX Hyperloop Pod competition 2019 to be held in Los Angeles, California in July 2019.
Story first published: Wednesday, June 26, 2019, 15:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X