காரில் நேம் போர்டு மாட்டி "கெத்து" காட்டிய அரசியல்வாதிகளுக்கு "ஆப்பு"; அதிரடியில் இறங்கிய போலீஸ்

காரில் உள்ள நம்பர் போர்டுகளை டிசைன், டிசைனாகவும், அரசியல் பதிவியில் உள்ள அரசியல்வாதிகள் தங்கள் பெயர் மற்றும் பதவி அடங்கிய போர்டுகளை தங்கள் சொந்த காரில் மாட்டி ஊருக்குள் கெத்து காட்டிய அரசியல்வாதிகள

காரில் உள்ள நம்பர் போர்டுகளை டிசைன், டிசைனாகவும், அரசியல் பதிவியில் உள்ள அரசியல்வாதிகள் தங்கள் பெயர் மற்றும் பதவி அடங்கிய போர்டுகளை தங்கள் சொந்த காரில் மாட்டி ஊருக்குள் கெத்து காட்டிய அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும்
ஆப்பு வைக்கும் விதமாக உத்தரகண்ட் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்..

கார் நேம் போர்டு மாட்டி

உத்திரகண்ட் மாநிலத்தில் போலீசார் விதிமுறைகளை மீறி வாகனங்களில் நம்பர் பிளேட், பெயர் பலகை என வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக மே மாதம் முழுவதும கேம்ப் ஓன்றை நடத்தி வருகிறது. இதில் ஏராளமான வாகனங்கள் சிக்கி வருகின்றனர்.

கார் நேம் போர்டு மாட்டி

இதுவரை அம்மாநில போலீசார் 4805 வாகனங்களில் நம்பர் பிளேட்களை பறிமுதல் செய்துள்ளனர். 5649 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார் நேம் போர்டு மாட்டி

இந்த சோதனை அம்மாநிலத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் நடக்கிறது விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட், அல்லது நேம் பிளேட் போன்ற போர்டுகளை வைத்திருக்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்னறர்.

கார் நேம் போர்டு மாட்டி

இதுவரை 3207 டுவீலர் நம்பர் பிளேட்களும், 2518 நான்கு சக்கர வாகன நம்பர் பிளேட்களும் விதிமுறை மீறல் காரணமாக பறிமுதல் செய்துள்ளது. அதிக பட்சமாக டெகராடூனில் 625 டூவீலர்களின் நம்பர் பிளேட்களும், 446 நான்கு சக்கரவாகனங்களின் நம்பர் பிளேட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கார் நேம் போர்டு மாட்டி

கடந்த மே 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்த நடவடிக்கைகளின் படி மட்டுமே இந்தபுள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் இந்த நடவடிக்கை நடந்து வருகிறது.

கார் நேம் போர்டு மாட்டி

அதே போல அரசு அதிகாரிகளும், தங்களது சொந்த வாகனத்தில் தங்களது பெயர் மற்றும் பதவி அடங்கிய பெயர் பலகையை பொருத்தியுள்ளனர். அதுவும் சட்டப்படி தவறாகும் அதுவும் அகற்றப்படுகிறது.

கார் நேம் போர்டு மாட்டி

அதே போல மக்கள் பிரதிநதிகளாக உள்ள அரசியல்வாதிகளும் இதே போன்ற பெயர்பலகையை வைத்துள்ளனர். இதுவும் சட்டப்படி தவறாகும். அவைகளும் இந்த நடவடிக்கையில் விதிவலக்கு இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

கார் நேம் போர்டு மாட்டி

இவ்வாறாக விதிமுறை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசு அபராத தொகைக்கான செல்லானை அனுப்பியுள்ளது. தெடார்ந்து இந்த நடவடிக்கை தொடரும் என அம்மாநில போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாற்றியமைக்கப்பட்ட அனுமதியில்லாத சைலன்சர்களை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Source: Rushlane

Most Read Articles
English summary
Displaying Political And Government Position On Cars And Bikes Illegal — Police Seize Vehicles.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X