டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸான் முக்கிய முடிவு...

சுற்றுச்சூழல் மாசடைவதால், டீசல் இன்ஜின் கார்களை தயாரிப்பது இல்லை என டொயாட்டோ மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

By Arun

சுற்றுச்சூழல் மாசடைவதால், டீசல் இன்ஜின் கார்களை தயாரிப்பது இல்லை என டொயாட்டோ மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இது டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருவதையே காட்டுவதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இது குறித்து விரிவான செய்தியை காணலாம்.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

டொயாட்டோ, நிஸான் முக்கிய முடிவு

ஐரோப்பிய மார்க்கெட்டில், நடப்பு ஆண்டில் விற்பனையான டீசல் வெர்ஷன் கார்களின் உற்பத்தியை வரும் டிசம்பர் மாதத்துடன் நிறுத்தி கொள்ள உள்ளதாக ஜப்பானின் டொயாட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

ஐரோப்பிய கண்டத்தில், டீசல் இன்ஜின்களை கைவிடும் முதல் மிகப்பெரிய நிறுவனம் என்றால், அது டொயாட்டோதான். டொயாட்டோ எடுத்த அதே முடிவை, ஜப்பானை சேர்ந்த மற்றொரு நிறுவனமான நிஸானும் எடுத்துள்ளது.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக, அதிக மாசு ஏற்படுத்தும் வகையில் டீசல் கார்களை தயாரித்து விற்பனை செய்ததாக, கடந்த 2015ம் ஆண்டில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மீது அமெரிக்க அரசு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தது. இந்த டீசல் மாசு உமிழ்வு மோசடி அந்த சமயத்தில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

இந்த சர்ச்சைக்கு பிறகு, டீசல் இன்ஜின்களை கைவிடுவது தொடர்பாக எடுக்கப்பட்ட முதல் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கையாகவே, டொயாட்டோ மற்றும் நிஸ்ஸான் ஆகிய நிறுவனங்களின் முடிவு பார்க்கப்படுகிறது.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

ஐரோப்பிய கண்டத்தில் டீசல் இன்ஜின் விற்பனையை கைவிட்டு விட்டு, பெட்ரோல், எலக்ட்ரிக் ஹைபிரிட் வெர்ஷன்களில் அதிக கவனம் செலுத்தப்போவதாக டொயாட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. நிஸ்ஸான் நிறுவனம் அதிக எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

முன்னதாக அயர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளில் டொயாட்டோ டீசல் கார்களின் விற்பனை கணிசமான அளவில் சரிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

டீசல் இன்ஜின்களின் சகாப்தம் முடிவடைகிறது

டொயாட்டோ நிறுவனமானது, இந்தியாவிலும் கூட இத்தகைய முடிவை எடுக்க வாய்ப்புகள் உள்ளன. அந்நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் லான்ச் செய்த யாரிஸ் சி-செக்மெண்ட் சீடன் பெட்ரோல் இன்ஜின் கார்தான்.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

அதுமட்டுமின்றி கொரெல்லா ஆல்டிஸ் டீசல் காருக்கு பதிலாக கொரெல்லா ஹைபிரிட் காரை ரீ ப்ளேஸ் செய்ய டொயாட்டோ திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் அடுத்த ஜெனரேஷன் கொரொல்லா லான்ச் ஆகும்போது இந்த மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

தற்போது உள்ள கார்களுக்கு பதிலாக டீசல் இன்ஜின் கார்களை கொண்டு வரும் எண்ணம் டொயாட்டோவுக்கு இல்லை. அப்படியானால் உலகம் முழுவதும், டொயாட்டோ காரின் டீசல் இன்ஜின் தயாரிப்பு பெரும் சரிவை சந்திக்கும்.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

இந்தியாவும் டீசல் கார்களில் இருந்து விலகி செல்வதை விரும்புகிறது. பெட்ரோல்-ஹைபிரிட் இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக் கார்களை நோக்கிதான் இந்தியாவின் பயணம் உள்ளது.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மோசடிக்கு பிறகுதான், டீசல் கார்கள் மீதான சந்தேகம் பரவலாகவே எழுந்தது. இந்த சம்பவம் ஆட்டோமொபைல் உலகில் பெரும் பரபரப்பை கிளப்பியது. ஏனெனில் டீசல் கார்களால் சுற்றுச்சூழல் அதிகளவு பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

டீசல் கார்களால் அதிகளவு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக டெல்லி பசுமை தீர்ப்பாயம் கூட பலமுறை கூறியுள்ளது. இதன்பின் டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் கார்களுக்கு தடை உள்ளிட்ட உத்தரவுகளும் வந்தன.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

இந்த சூழலில் டொயாட்டோ, நிஸ்ஸான் என இரு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் இன்ஜின்களை கைவிட உள்ளதாக அறிவித்திருப்பது, டீசல் இன்ஜின்களின் சகாப்தம் அழிவின் விளிம்பில் இருப்பதையே காட்டுகிறது.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

டீசல் இன்ஜினை விரும்புவது ஏன்?

ஆனால் டீசல் இன்ஜினை மட்டும் விரும்பக்கூடிய பலர் இருக்கிறார்கள். டீசல் இன்ஜின் மூலம் கிடைக்கும் நன்மைகளே அதற்கு காரணம். இதில், முக்கியமானது மைலேஜ். பெட்ரோலை காட்டிலும் டீசலின் விலை குறைவாக இருப்பதும், அதிக மைலேஜ் கிடைப்பதுமே டீசல் இன்ஜினை அதிகம் விரும்ப காரணம்.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

பயோ-டீசல் போன்ற மாற்று எரிபொருட்கள் மூலமாக கூட டீசல் இன்ஜின்கள் இயங்கும். இதன் ஆயுட்காலமும் அதிகம்.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

டீசல் இன்ஜின்கள் உருவாக்கும் எக்ஸ்ட்ரா டார்க் மூலம், அதிக சுமைகளை இழுத்து செல்ல முடியும். டவ்விங் செய்வதற்கும் டீசல் இன்ஜின்கள் சிறப்பானவையே.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

டீசல் இன்ஜினின் குறைகள்

அதே நேரத்தில் டீசல் இன்ஜின் கார்களில் பல குறைகளும் உள்ளன. குறிப்பாக பெட்ரோல் கார்களை காட்டிலும் டீசல் கார்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நைட்ரஜன் டை ஆக்ஸைடை, டீசல் இன்ஜின் கார்கள் அதிகம் வெளியிடுகின்றன. இன்சூரன்ஸ் தொகையும் 10-15 சதவீதம் அதிகம்.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

பெட்ரோல் கார்களை போல், டீசல் இன்ஜின் கார்களில் அதிக வேகமாக செல்ல முடியாது. அதிக சப்தம் எழுப்பும். நீண்ட நாட்களுக்கு காரை எடுத்து ஓட்டாவிட்டால், மறுமுறை அதனை இயக்கும்போது ஸ்டார்ட்டிங் டிரபிள் உள்ளிட்ட பிரச்னைகள் எழும்.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

அதுமட்டுமின்றி தற்போது பெட்ரோலின் விலைக்கும், டீசலின் விலைக்கும் உள்ள இடைவெளி கூட வேகமாக குறைந்து கொண்டேதான் வருகிறது.

டீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸ்ஸான் முக்கிய முடிவு...

எலக்ட்ரிக்தான் தீர்வு

டீசல் இன்ஜின் கார்களில் உள்ள நிறை, குறைகளை அலசினாலும் கூட, பெட்ரோல் இன்ஜின் கார்களிலும் ஏகப்பட்ட குறைகள் உள்ளன. அதுமட்டுமின்றி பெட்ரோலின் விலை உயர்வு, பெட்ரோலுக்கான தேவை அதிகரிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால், எலக்ட்ரிக் வாகனங்கள்தான் முழுமையான தீர்வாக இருக்கும் என கருதப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Impending death of diesel engines: After Toyota, Nissan decides to kill off diesel engines. read in tamil
Story first published: Wednesday, May 16, 2018, 16:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X