சென்னை- சேலம் இடையில் அமையும் புதிய பசுமை விரைவு சாலையின் சிறப்புகள்!

சென்னையிலிருந்து சேலம் வரை புதிய பசுமை நெடுஞ்சாலை அமைய இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையின் சிறப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Saravana Rajan

இந்தியாவின் இரண்டாவது பசுமை நெடுஞ்சாலை தலைநகர் சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. இந்த புதிய பசுமை நெடுஞ்சாலை பற்றியத் தகவல்களை காணலாம்.

வெறும் 3 மணிநேரத்தில் சென்னை டு சேலம்... புதிய பசுமை நெடுஞ்சாலை அமைகிறது!

ரூ.10,000 கோடி செலவில் இந்த புதிய பசுமை நெடுஞ்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை துவங்குமாறு தமிழக அரசுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முறைப்படி கடிதம் எழுதி இருக்கிறது.

வெறும் 3 மணிநேரத்தில் சென்னை டு சேலம்... புதிய பசுமை நெடுஞ்சாலை அமைகிறது!

இந்த நெடுஞ்சாலை 274 கிமீ தொலைவு கொண்டதாக அமைக்கப்பட இருக்கிறது. இதில், 250 கிமீ தூரமானது வனப்பகுதியில் அமைக்கப்பட இருக்கிறது.

வெறும் 3 மணிநேரத்தில் சென்னை டு சேலம்... புதிய பசுமை நெடுஞ்சாலை அமைகிறது!

சென்னை தாம்பரத்தில் துவங்கி தர்மபுரி மாவட்டம் அரூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையானது 179B எனவும், அரூர் முதல் சேலம் வரையில் அமைக்கப்பட இருக்கும் புதிய நெடுஞ்சாலை 179A என்ற பெயரிலும் குறிப்பிடப்படும்.

வெறும் 3 மணிநேரத்தில் சென்னை டு சேலம்... புதிய பசுமை நெடுஞ்சாலை அமைகிறது!

இந்த சாலையானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீ தூரத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிமீ தொலைவிற்கும் அமைக்கப்பட உள்ளது.

வெறும் 3 மணிநேரத்தில் சென்னை டு சேலம்... புதிய பசுமை நெடுஞ்சாலை அமைகிறது!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிமீ தூரம் தொட்டுச் செல்லும் இந்த சாலை மீண்டும் தர்மபுரியில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி என 53 கிமீ தொலைவுக்கு அமைய இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியிலிருந்து சேலம் மாநகரம் வரை 38 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட இருக்கிறது.

வெறும் 3 மணிநேரத்தில் சென்னை டு சேலம்... புதிய பசுமை நெடுஞ்சாலை அமைகிறது!

தற்போது சென்னையிலிருந்து உளூந்தூர்பேட்டை வழியாக சேலம் வரையில் 360 கிமீ தொலைவுக்கான நெடுஞ்சாலை பயன்பாட்டில் இருக்கிறது. புதிய பசுமை நெடுஞ்சாலையின் மூலமாக இரு நகரங்களுக்கு இடையிலான தொலைவு 60 கிமீ வரை குறையும்.

வெறும் 3 மணிநேரத்தில் சென்னை டு சேலம்... புதிய பசுமை நெடுஞ்சாலை அமைகிறது!

சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சேலத்திற்கான சாலையானது, இரு நகரங்களையும் 6 மணிநேரத்தில் இணைக்கிறது. ஆனால், புதிய பசுமை நெடுஞ்சாலையின் மூலமாக இரு நகரங்களையும் வெறும் 3 மணிநேரத்தில் இணைக்க முடியும்.

வெறும் 3 மணிநேரத்தில் சென்னை டு சேலம்... புதிய பசுமை நெடுஞ்சாலை அமைகிறது!

தற்போதுள்ள பயண நேரத்தைவிட இது பாதியாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாகனங்களின் எரிபொருள் சிக்கனமும் வெகுவாக மேம்படும் வாய்ப்பு கிடைக்கும்.

வெறும் 3 மணிநேரத்தில் சென்னை டு சேலம்... புதிய பசுமை நெடுஞ்சாலை அமைகிறது!

இந்த சாலையில் சென்னை மற்றும் சேலம் இடையிலான போக்குவரத்து மிகச் சிறப்பாக மாறுவதுடன், ஆன்மிக தலமாக விளங்கும் திருவண்ணாமலை நகரமும் மிகச் சிறப்பான போக்குவரத்து வசதியை பெறும்.

வெறும் 3 மணிநேரத்தில் சென்னை டு சேலம்... புதிய பசுமை நெடுஞ்சாலை அமைகிறது!

மேலும், இது Controlled access highway என்ற நவீன கட்டமைப்பு வசதிகளுடன் 8 வழித்தட சாலையாக அமைக்கப்பட இருக்கிறது. இதன்படி, வாகனங்கள் இந்த சாலையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கும், உள் நுழைவதற்கும் ஏதுவான கட்டமைப்புகளை பெற்றிருக்கும்.

வெறும் 3 மணிநேரத்தில் சென்னை டு சேலம்... புதிய பசுமை நெடுஞ்சாலை அமைகிறது!

அதேபோன்று, நேராக செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைக்காமலும், பாதுகாப்பாகவும் கடந்து செல்ல முடியும். இந்த சாலையில் சிக்னல்கள், சாலை சந்திப்புகள் இல்லாத வகையில் கட்டமைக்கப்பட உள்ளது. இதனால், மிக சுலபமாகவும், விரைவாகவும் பயணிக்க முடியும் என்பதால், பயண நேரம் பாதியாக குறையும்.

வெறும் 3 மணிநேரத்தில் சென்னை டு சேலம்... புதிய பசுமை நெடுஞ்சாலை அமைகிறது!

இதுபோன்ற மிக நவீன சாலை கட்டமைப்பு திட்டத்தை முதல்முறையாக தமிழக அரசு செய்ய இருக்கிறது. மேலும், இந்தியாவிலேயே இது இரண்டாவது பசுமை வழித்தட நெடுஞ்சாலையாகவும் அமைய இருக்கிறது.

இதேபோன்று, சென்னை - பெங்களூர் இடையில் புதிய விரைவு சாலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் சிறப்பம்சங்களை தொடர்ந்து படிக்கலாம்.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை!

சென்னை - பெங்களூர் இடையிலான போக்குவரத்து தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலுவலக பணி, வர்த்தக விஷயமாக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, போக்குவரத்து கட்டமைப்பை விரிவாக்கும் அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை!

சென்னையிலிருந்து பெங்களூரை சாலை மார்க்கமாக அடைவதற்கு இப்போது மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன. அதில், சென்னையிலிருந்து வேலூர் - கிருஷ்ணகிரி- ஓசூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்-7 தற்போது பிரதான போக்குவரத்து தடமாக இருக்கிறது. 372 கிமீ தொலைவுடைய இந்த தடத்தில் 6 முதல் 8 மணிநேரம் பயணிக்க வேண்டிருக்கிறது.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை!

அதேபோன்று, சித்தூர்-கோலார் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்4 வழியாக செல்லும்போது 7 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். இதில், சித்தூர் பகுதியில் இருவழித்தடமாக செல்வதால், விபத்து ஆபத்தும், போக்குவரத்து நெரிசலும் அதிகம் உள்ளது. மற்றொரு வழியானது கிழக்குதொடர்ச்சி மலை வழியாக செல்வதால், அதனை அதிகம் பயன்படுத்துவதில்லை.

இந்த சூழலில், சென்னை- பெங்களூர் இடையிலான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் விதத்தில், புதிதாக எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த சாலையானது, சென்னை எல்லைப்பகுதியாக இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் துவங்கி, பெங்களூர் நகரின் எல்லைப்பகுதியில் உள்ள ஒசகோட்டை வரை அமைக்கப்பட இருக்கிறது.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை!

ஸ்ரீபெரும்புதூர்- அரக்கோணம்-குடியாத்தம்- வி-கோட்டா- பலம்னேர்- மாலூர்- ஒசகோட்டை வழியாக இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலையானது 250 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. இந்த சாலை திசைக்கு 3 வழித்தடங்கள் வீதம் 6 வழித்தட எக்ஸ்பிரஸ் சாலையாக அமைக்கப்படும். இந்த சாலை 90 மீட்டர் அகலமுடையதாக இருக்கும்.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை!

இந்த சாலையில் மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்வதற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு ஒருவழியில் 45,000 முதல் 60,000 கார்கள் செல்வதற்கு கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை!

இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்ட பின்னர், இந்த வழித்தடத்தில் சென்னை பெங்களூர் இடையில் பயண நேரம் 4 மணிநேரமாக குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக மங்களூர் வரை இந்த சாலையை நீடிக்கும் திட்டமும் இருக்கிறது.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை!

இந்த வழித்தடத்தில் பல்வேறு தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்த மையங்களை ஒட்டி அமைக்கப்பட இருக்கிறது. இதனால், இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கும் இந்த சாலை உறுதுணையாக அமையும்.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை!

வாலாஜாபேட்டை அருகில் உள்ள கீழ்வீராணம் மற்றும் பானவரம் பகுதிகளில் புதிய தொழிற்பேட்டை அமைவதற்கான சாத்தியக்கூறுகளும், இந்த வழியாக சென்னை- பெங்களுர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க ஜப்பானிய நிறுவனம் நடத்திய ஆய்வுகளும் இந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களை ஈர்த்துள்ளன. ராணிபேட்டை- பொன்னப்பன்தாங்கல்- அரக்கோணம் இடையிலான பகுதிகளில் நில மதிப்பும் வெகுவாக உயர்ந்துள்ளன.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை!

சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மறுபுறத்தில் பெங்களூர் எல்லையில் அமைந்துள்ள ஒசக்கோட்டை, நரசப்புரா, கோலார் வரையிலான பகுதிகளில் உள்ள வாகன நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கும் இந்த சாலை சிறப்பான போக்குவரத்தை வழங்கும்.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை!

அதேநேரத்தில், சென்னை- பெங்களூர் இடையே ஏற்கனவே சிறப்பான கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், புதிய எக்ஸ்பிரஸ் சாலை தேவையில்லை என்று எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் வழங்குவோருக்கு முறையான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Important Things About Chennai- Salem Green Express Highway.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X