உங்க வாகனத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா..? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!

இன்சூரன்ஸ் வாங்கும்போது பெரும்பாலானோர் செய்யும் தவறு இதுவாகதான் இருக்கிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உங்க வாகனத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா..? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!

உச்சநீதிமன்றம் மற்றும் காப்பீட்டு ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம், இன்சூரன்ஸ் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது. அதில், புதிதாக வங்கப்படும் வாகனங்களுக்கு மூன்று மற்றும் ஐந்தாண்டுகளுக்கு கட்டாயம் காப்பீடு பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

உங்க வாகனத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா..? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!

இந்த புதிய உத்தரவினால், புதிதாக வாங்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டுகள் காப்பீடும், கார்களுக்கு மூன்று ஆண்டுகள் காப்பீடும் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆகையால் இந்தியாவில் வாகனம் வாங்குவர்கள் கட்டாயம் காப்பீட்டையும் பெற வேண்டும் என்று சட்டம் நிலவி வருகிறது.

உங்க வாகனத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா..? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!

எனவே, இந்தியாவில் வாகனத்தை வாங்குவதைவிட, அதற்கான காப்பீட்டை பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதேபோன்று, காப்பீடு செய்யாத வாகனங்களை இயக்கக்கூடாது என்ற சட்டம் கடந்த 1988ம் ஆண்டு முதலே இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் இடம்பெற்று வருகிறது.

உங்க வாகனத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா..? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!

இந்தியாவைப் பொறுத்தவரை வாகன காப்பீடு என்பது ஒரு மிக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், காப்பீடு பெற்ற வாகனம் விபத்தைச் சந்தித்தால், அது சந்தித்த இழைப்பினை காப்பீட்டு நிறுவனங்கள் ஈடுசெய்யும். மேலும், அந்த வாகனத்தால் ஏற்பட்ட மற்ற வாகனத்தின் சேதாரத்தையும் உரிய காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு செய்யும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு கணிசமான அளவு துயரத்தை போக்கும் என்பதால், வாகனத்திற்கு காப்பீடு பெறுவது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

உங்க வாகனத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா..? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!

ஆனால், சிலர் சொற்ப அளிவிலான பணத்தைச் சேகரிக்க நினைத்து முறையான காப்பீட்டைப் பெறாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதனால், இவர்கள் சந்திக்கும் இழப்பினை அவர்களே ஈடு செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். மேலும், சட்டத்தின் பார்வையில் சிக்கி தண்டனையையும் அனுபவிக்கின்றனர். இவ்வாறு, அவர்கள் மட்டும் துயரத்தில் ஆழ்வதுடன், மற்றவர்களையும் துயரத்தில் ஆழ்த்திவிடுகின்றனர்.

இவ்வாறு, காப்பீடினை பெறாமல் சிலர் இருக்க, பலர் காப்பீடு பெறுவதிலேயே தவறுகளை செய்கின்றனர். அதன்படி காப்பீடு செய்வதில் ஏற்படும் சில பிழைகளை கீழே பார்க்கலாம்,

உங்க வாகனத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா..? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!

காப்பீட்டைப் பெறும்போது சரியான தகவல்களைக் கொடுக்கவேண்டும்:

வாகனத்தை வாங்கிய நபர், அதற்கான காப்பீட்டைப் பெறும்போது, அவருடைய முறையான தகவலை வழங்க வேண்டும். அதன்படி, சரியான பெயர், விலாசம், தொடர்பு எண், வாகனத்தின் எண், எஞ்ஜின் எண் உள்ளிட்டவையை ஒரு முறைக்கு பலமுறை சரிபார்த்து வழங்க வேண்டும். ஏனென்றால் பலர் காப்பீட்டைப் பெறும் தவறான தகவலைக் கொடுத்துவிடுகின்றனர்.

உங்க வாகனத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா..? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!

இதனால், அவர்களின் வாகனம் விபத்தைச் சந்தித்த பின்னர், காப்பீட்டை கிளைம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க காப்பீடு பெறும்போது, முறையான தகவலைத் தான் வழங்கியுள்ளோமா...? என சரிபார்ப்பது நல்லது.

இதேபோன்று, முக்கியமாக நாமினி பெயரைக் குறிப்பிடும்போதும் கவனம் தேவை. நாமினியின் பெயர், வயது, உறவு முறை, விலாசம் ஆகியவற்றை தவிறின்றி வழங்கவேண்டும். இது, நமது இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

உங்க வாகனத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா..? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!

காப்பீட்டினை நேரடியாகச் சென்று பெறுவது:

பலர் நினைக்கிறார்கள் காப்பீட்டை நேராக சென்று வாங்கினால் நல்லது என்று. மேலும், இதன்மூலம் சில சலுகைகள் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. ஏனென்றால், ஆஃப்லைன் காப்பீட்டைக் காட்டிலும், இணையம் வழியாக பதிவு செய்யப்படும் காப்பீட்டிற்கு தான் அதிக சலுகைகள் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்க வாகனத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா..? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!

செகண்ட் ஹேண்ட் வாகனம்:

இது பலர் செய்யக்கூடிய முக்கிய தவறாக இருந்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலானோர், செகண்ட் ஹேண்ட் வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள் அந்த வாகனத்தை வாங்கியபின் அவர்களது பெயருக்கு மாற்றாமல், அப்படியே பழைய உரிமையாளரின் பெயரைக் கொண்டே வாகனத்தை இயக்கி வருகின்றனர்.

உங்க வாகனத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா..? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!

மேலும், அவர்கள் காப்பீட்டைப் புதிக்கும்போது, பழைய உரிமையாளரின் பெயரிலேயே புதுப்பிக்கப்படுகிறது. ஆகையால், வாகனத்தில் செகண்ட் ஹேண்ட் உரிமையாளர் செல்லும்போது விபத்து ஏற்பட்டால், காப்பீட்டைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, வாகனத்தை செகண்ட் ஹேண்டாக வாங்கிய உடன், அதனை உரியவர்களின் பெயரில் மாற்றம் செய்து பயன்படுத்துவது சிறப்பு.

உங்க வாகனத்திற்கு இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா..? அப்போ முதல்ல இதை படிச்சிட்டு போங்க...!

காப்பீடு இணைய ஒப்பீடு:

காப்பீட்டினை புதிதாக வாங்குவதற்கு முன்பாக ஒரு முறை இணைய தளத்தில் ஒப்பீடு செய்து பார்ப்பது நல்லது. ஏனென்றால், கவுண்டர் வைத்து வேலைசெய்யும் நிறுவனங்களைக் காட்டிலும், ஆன்லைனில் காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் சில சலுகைகளை வழங்கலாம். மேலும், எந்த நிறுவனம் குறைந்த தொகையில், பல சேவையை வழங்குகிறது என்பதை அறிந்துக்கொள்ளலாம். ஆகையால், ஒரு முறை காப்பீட்டை வாங்குவதற்கு இணையதளத்தில் செக் செய்துகொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Important Things About Insurance. Read In Tamil.
Story first published: Thursday, April 4, 2019, 11:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X