பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணித்த Mi17 V5 ஹெலிகாப்டரின் முக்கிய அம்சங்கள்!

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்து நாட்டையே பதை பதைக்க வைத்துள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 9 பேர் பயணித்த அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் பிபின் ராவத் உள்ளிட்டோரின் நிலை குறித்து இதுவரை உறுதியாக தெரியவில்லை.

பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்!

இந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்தும் உறுதியான தகவல்கள் இல்லை. பனிமூட்டம் காரணமாக விழுந்ததாக சொல்லப்பட்டாலும், மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதா அல்லது எஞ்சின் பழுதடைந்ததா என பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது. இதுகுறித்து உயர் மட்ட விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்!

நாட்டின் மிக உயரிய பொறுப்பில் உள்ள முப்படை தளபதி பிபின் ராவத் பயணிப்பதற்கு Mi17 V5 ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஹெலிகாப்டர் ரஷ்ய நாட்டு தயாரிப்பு. ரஷ்யன் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கஸன் ஹெலிகாப்டர் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்!

ராணுவ அதிகாரிகள், துருப்புகள் மற்றும் முக்கிய தளவாடங்களை எடுத்துச் செல்லும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மீட்புப் பணிகள், விவிஐபிகளின் பாதுகாப்புக்கு செல்லும் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது.

பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்!

ரஷ்ய நாட்டுத் தயாரிப்பான இந்த ஹெலிகாப்டர் கடந்த 1977ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அதிக நம்பகத்தன்மையை கொண்டதாகவும் கருதப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு 80 ஹெலிகாப்டர்களுக்கு ரஷ்யாவுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதில், 36 ஹெலிகாப்டர்கள் வரை 2013ம் ஆண்டு வரை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்!

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் எஞ்சிய அனைத்து ஹெலிகாப்டர்களும் இந்தியாவிடம் டெலிவிரி கொடுக்கப்பட்டுவிட்டது. இதற்காக, 2019ம் ஆண்டு தனி ஒர்க்ஷாப்பும் இந்திய விமானப்படையால் துவங்கப்பட்டது. இதனால், அதிக பராமரிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவே கருதலாம். எனினும், 8 ஆண்டுகளில் இந்த ரக ஹெலிகாப்டர்கள் 6 முறை விபத்தில் சிக்கி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்!

எனவே, இந்த ஹெலிகாப்டர்கள் சிறந்த பராமரிப்புப் பணிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஹெலிகாப்டர் அதிகபட்சமாக 13,000 கிலோ எடையுடன் பறக்கும் திறன் கொண்டது. இந்த ஹெலிகாப்டரில் அதிகபட்சமாக 36 வீரர்கள் அல்லது 4,500 கிலோ எடையை உள்ளே வைத்து எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்!

மேலும், அதிநவீன கட்டுப்பாட்டு சாதனங்கள் கொண்டது. இரவு நேரத்தில் பயணிப்பதற்கான வசதி, மோசமான வானிலையை கணித்து சொல்லும் வசதி, ஆட்டோபைலட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்!

இந்திய விமானப்படையின் Mi17 V5 ஹெலிகாப்டரில் எந்திர துப்பாக்கி உள்ளிட்ட தற்காப்பு அல்லது தாக்குதல் பயன்பாட்டிற்கான ஆயுதங்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இது பன்முக பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த ஹெலிகாப்டர் மாடலாக கருதப்படுகிறது.

பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்!

இந்த ஹெலிகாப்டர் எரிபொருள் டேங்குகள் விசேஷ ஃபோம் பாலியூரித்தேன் பூச்சு கொடுக்கப்பட்டு இருப்பதால் வெடிக்கும் ஆபத்துக்களை தவிர்க்கும். ஜாமர், ஹெலிகாப்டரின் புகைப்போக்கி வெப்பத்தை வைத்து ஏவுகணைகள் தாக்கும் அபாயத்தை தவிர்க்கும் தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.

பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்!

Mi17 V5 ஹெலிகாப்டர் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 580 கிமீ தூரம் வரை பயணிக்கும். 1,065 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான வாய்ப்பை கூடுதல் எரிபொருள் கலன்களை பொறுத்தி பயன்படுத்த முடியும். 6,000 அடி உயரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்!

உலக அளவில் ஏராளமான நாடுகளில் அதிக நம்பகத்தன்மையுடன் இந்த Mi17 V5 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருப்பது பேரதிர்ச்சியையும், சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது.

பதை பதைக்க வைக்கும் விபத்து... பிபின் ராவத் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட Mi17 V5 ஹெலிகாப்டர்!

கருப்புப் பெட்டி கிடைத்தால் விபத்துக்கான காரணம் குறித்து உண்மைகளை வெளிக்கொணர வாய்ப்பு கிடைக்கும். இந்த விபத்துக்கு மனித தவறு காரணமா அல்லது தொழில்நுட்பக் கோளாறுதான் காரணமா என்பது குறித்த தகவல்களை விசாரணைகளுக்கு பின்னர்தான் தெரிய வரும். முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் நலமுடன் மீள வேண்டும் என்று நாட்டு மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்து நாட்டையே பதை பதைக்க வைத்துள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 9 பேர் பயணித்த அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் பிபின் ராவத் உள்ளிட்டோரின் நிலை குறித்து இதுவரை உறுதியாக தெரியவில்லை.
Story first published: Wednesday, December 8, 2021, 15:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X