கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

இன்ஜின் ஆயிலை மாற்றும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

ஒவ்வொருவரும் தங்களது காரை சுத்தமாகவும், ஸ்கிராட்ச்கள் இல்லாமலும் வைத்து கொள்கின்றனர். இதன் மூலம் சாலையில் தங்களது கார் தனித்து தெரிய வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். இப்படிப்பட்ட எண்ணம் இருப்பதில் தவறில்லை. ஆனால் அதே அளவு முக்கியத்துவத்தை காரின் பராமரிப்புக்கும் வழங்க வேண்டும்.

கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

காரின் தோற்றத்திற்கு வழங்கும் முக்கியத்துவத்தை பராமரிப்பிற்கு வழங்க ஒரு சிலர் தவறி விடுகின்றனர். குறிப்பாக உங்கள் காரின் இதயம் என வர்ணிக்கப்படும் இன்ஜினின் பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது அவசியம். இன்ஜின் என்பது காரின் மிகவும் முக்கியமான பாகம் என்பதால், சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.

கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

நீங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் கார் ஓட்டுவதற்கு ஏராளமான நகரும் பாகங்கள் தொடர்ச்சியாக வேலை செய்வதால் இன்ஜின் தேய்மானம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இன்ஜின் ஆயில் மூலம் இந்த பாகங்களுக்கு முறையான லூப்ரிகேஷன் (Lubrication) கொடுக்கப்பட வேண்டும். அதிகப்படியாக உருவாகும் வெப்பத்தையும் இது குறைக்கிறது.

கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

ஆனால் இன்ஜின் ஆயிலுக்கும் குறிப்பிட்ட ஆயுள் காலம் உள்ளது. அதற்கு பிறகு அது பயன்படாமல் போய் விடும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் இன்ஜினிற்கு பாதிப்பு ஏற்படலாம். உங்கள் கார் இன்ஜின் நன்றாக வேலை செய்யு உதவும் இன்ஜின் ஆயிலை மாற்றும்போது ஒரு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆயிலை மாற்ற வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தோம். அந்த இடைவெளி எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்வது முதலில் முக்கியமானது. பொதுவாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கிலோ மீட்டர்களில் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும் என கார் உற்பத்தி நிறுவனங்கள் பரிந்துரை செய்கின்றன.

கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

கார் நிறுவனங்களை பொறுத்து இந்த பரிந்துரை மாறுபடலாம். அத்துடன் உங்கள் காரின் பயன்பாட்டை பொறுத்தும் கூட இந்த அளவு மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் சந்தேகமாக இருக்கிறது என்றால், உங்கள் காரின் டிப் ஸ்டிக்கை பயன்படுத்தலாம். இதன் மூலம் இன்ஜின் ஆயில் மிகவும் கருப்பாக இருப்பது உங்களுக்கு தெரியவந்தால், உடனடியாக அதை மாற்றி விட வேண்டும்.

கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

அதே சமயம் தற்போது விற்பனைக்கு வரும் சில அதிநவீன கார்களில், இன்ஜின் ஆயிலை மாற்றுவது தொடர்பாக உரிமையாளருக்கு நினைவுபடுத்தும் எலெக்ட்ரானிக் இன்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக இன்ஜின் ஆயில்கள் வெவ்வேறு அளவிலான பிசுபிசுப்பு (Viscosity) மற்றும் அடர்த்தியுடன் (Thickness) வருகின்றன.

கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

பிசுபிசுப்பு தன்மை மற்றும் அடர்த்தி தவிர, இன்ஜின் ஆயில்களில் மினரல் ஆயில், சிந்தடிக் ஆயில், செமி-சிந்தடிக் ஆயில் மற்றும் ஹை மைலேஜ் ஆயில் என நிறைய வகைகளும் இருக்கின்றன. உங்கள் கார் மற்றும் இன்ஜின் வகைக்கு ஏற்ற இன்ஜின் ஆயிலை தேர்வு செய்வதும் மிகவும் முக்கியம். இதற்கு நீங்கள் உங்கள் கார் மேனுவலை (Car Manual) பார்க்கலாம்.

கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

இதில் உங்கள் காருக்கு ஏற்ற இன்ஜின் ஆயில் எது? என்பது தொடர்பான பரிந்துரைகளை கார் உற்பத்தி நிறுவனம் வழங்கியிருக்கும். இதற்கு அடுத்தபடியாக இன்ஜின் ஆயிலை மாற்றுவதற்கான காலம் வந்தவுடன், நம்பிக்கையான ஒர்க்ஸாப்பை அணுகுவது அவசியம். ஏனெனில் இன்ஜின் ஆயிலை மாற்றும்போது ஒரு சில ஒர்க்ஸாப்களில் உள்ள சிலர் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

நேர்மையற்ற ஒரு சில மெக்கானிக்குகளிடம் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். அதாவது இன்ஜின் ஆயிலை மாற்றாமலேயே மாற்றி விட்டதாக கூறும் மெக்கானிக்குகள் சிலர் இங்கு இருக்கின்றனர். இப்படி நடந்து கொள்ளும் மெக்கானிக்குகளால் உங்கள் பணம் தேவையில்லாமல் செலவு ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

அத்துடன் இன்ஜின் ஆயில் மாற்றப்பட்டு விட்டது என்ற நம்பிக்கையில் நீங்கள் தொடர்ந்து காரை ஓட்டினால் உங்கள் காரின் இன்ஜின் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அப்படி இன்ஜின் செயலிழக்கும்பட்சத்தில் நீங்கள் அதிக செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படும். எனவே இதுபோன்ற மெக்கானிக்குகளிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

கொஞ்சம் ஏமாந்தா கூட அவ்ளோதான்... இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

எனவே இன்ஜின் ஆயிலை மாற்றும் வேலை முடிந்தவுடன் மீண்டும் ஒரு முறை டிப் ஸ்டிக் மூலமாக பரிசோதித்து கொள்ளுங்கள். புதிய இன்ஜின் ஆயில் என்றால், ஒளி ஊடுருவக்கூடிய வகையில் அம்பர் நிறத்தில் இருக்கும். அதே சமயம் பழைய இன்ஜின் ஆயில் என்றால் கருப்பு நிறத்தில் அழுக்காக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Important things to remember while changing your vehicle s engine oil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X