கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

கார் விற்பனை பிரதிநிதிகளிடம் நீங்கள் என்னென்ன விஷயங்களை சொல்லக்கூடாது? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

புதிய கார் வாங்குவது என்பது ஒருவர் செய்யும் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கும். எனவே புதிய காரை வாங்குவதற்கு முன்பு விற்பனை பிரதிநிதிகளிடம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும்? என உங்களுக்கு என்று சில எண்ணங்கள் இருக்கும். விற்பனை பிரதிநிதிகளிடம் கேள்விகளை கேட்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதில் தவறில்லைதான்.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

ஆனால் தப்பி தவறி கூட அவர்களிடம் நீங்கள் ஒரு சில விஷயங்களை சொல்ல கூடாது. அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். விற்பனை பிரதிநிதிகள் செய்யும் முறைகேடுகளில் இருந்து காக்க இந்த செய்தி உங்களுக்கு உதவி செய்யும் என நாங்கள் நம்புகிறோம். வாருங்கள், இனி செய்திக்குள் செல்வோம்.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

எனக்கு இந்த கார் ரொம்ப பிடிச்சிருக்கு...

உங்களுக்கு மிகவும் பிடித்த காரை வாங்குவதற்கு நீங்கள் எவ்வளவு செலவு வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பீர்கள் என்பது கார் விற்பனை பிரதிநிதிகளுக்கு நன்றாகவே தெரியும். எனவே இந்த கார் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என நீங்கள் கூறுவது என்பது, அவர்கள் விலையை ஏற்றுவதற்கு ஒரு காரணமாக அமைந்து விடும்.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

எனவே பொறுமையாக இருங்கள். எமோஷனல் ஆகாதீர்கள். சரியான விலையில் கிடைக்கவில்லை என்றால், வேறு காரை வாங்குவதற்கு தயாராக உள்ளேன் என்பதை விற்பனை பிரதிநிதிகளிடம் தெளிவாக கூறுங்கள். இதன் மூலம் விலையை குறைப்பது, கூடுதல் சலுகைகளை தருவது என விற்பனை பிரதிநிதிகள் இறங்கி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

எனக்கு காரை பத்தி பெருசா எதுவும் தெரியாது...

வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த வார்த்தையை கேட்பதற்குதான் கார் விற்பனை பிரதிநிதிகள் மிகவும் விரும்புவார்கள். நீங்கள் இந்த வார்த்தையை கூறி விட்டால், உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களை எல்லாம் விற்பனை பிரதிநிதிகள் கூறுவார்கள். இதன் மூலம் அவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கும் கூட முயற்சி செய்யலாம்.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

எனவே கார் வாங்க செல்லும் முன்னர் முதலில் அனைத்து விஷயங்களையும் நன்கு ஆராய்ந்து கொள்ளுங்கள். என்னென்ன வேண்டும்? என்னென்ன வேண்டாம்? என்பதில் நீங்கள் தெளிவாக இருக்கும்பட்சத்தில், யாராலும் உங்களை ஏமாற்ற முடியாது. நீங்கள் விஷயம் தெரிந்தவர் என்பதை விற்பனை பிரதிநிதிகள் உணர்ந்து கொண்டால், நீங்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

முழுசா பணம் கொடுத்து வாங்கிக்கறேன்...

ஒரு புதிய காரை வாங்குவதற்கு தேவையான பணம் உங்களிடம் முழுமையாக இருக்கிறதா? வாழ்த்துக்கள். ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் முழுமையாக பணம் இருப்பதில்லை. சமீப ஆண்டுகளில், புதிய கார் வாங்கும் 84 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஃபைனான்ஸ் வசதியைதான் நம்பியுள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

எனவே முழுமையாக பணம் செலுத்தி வாங்குவதாக இருந்தாலும், கார் விற்பனை பிரதிநிதிகளிடம் அதனை முன்கூட்டியே கூறாதீர்கள். நீங்கள் ஃபைனான்ஸ் மூலம்தான் கார் வாங்க போகிறீர்கள் என கார் டீலர்கள் நினைத்தால், உங்கள் நல்ல விலையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு விலையை குறைப்பதன் மூலம் ஏற்படும் இழப்பை அவர்கள் ஃபைனான்ஸ் மூலம் ஈடுகட்டி கொள்வார்கள்.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

எனவே எடுத்த உடனேயே முழுமையாக பணம் கொடுத்து கார் வாங்க இருக்கும் திட்டத்தை கார் விற்பனை பிரதிநிதிகளிடம் கூறாதீர்கள். அதனை அவர்களிடம் கொஞ்சம் தாமதமாக தெரியப்படுத்துங்கள். இதன் மூலமாக உங்களால் ஓரளவிற்கு பணத்தை சேமிக்க முடியும் என்பதை எப்போதும் மனதில் நிலைநிறுத்துங்கள்.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

எனக்கு உடனே கார் வேணும்...

உங்களுக்கு கார் அவசரமாக தேவைப்பட்டாலும், முடிந்தவரையில் அதனை கார் விற்பனை பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது நல்லது. நீங்கள் இந்த தவறை செய்தால், காருக்கு அதிக விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும். ஒரு வேளை உங்களுக்கு கார் மிகவும் அவசரம் என்றால், அதற்கு வேறு சில வாய்ப்புகள் உள்ளன.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

உங்கள் நண்பர்களிடம் அல்லது தெரிந்தவர்களிடம் இரவலாவோ அல்லது வாடகைக்கோ காரை எடுத்து ஒரு சில வாரங்கள் பயன்படுத்தலாம். இதன் மூலம் கார் விற்பனை பிரதிநிதிகளிடம் பேரம் பேசுவதற்கும், சரியான முடிவை எடுப்பதற்கும் உங்களுக்கு போதுமான அவகாசம் கிடைக்கும். கார் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்று என்பதால் அவசரப்படாதீர்கள்.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

நான் ஒரு டாக்டர்...

நீங்கள் அதிகம் சம்பாதிக்கும் ஒரு வேலையை செய்கிறீர்கள் என்றால், எடுத்த உடனேயே அதனை விற்பனை பிரதிநிதிகளிடம் கூறி விடாதீர்கள். நீங்கள் அவ்வாறு கூறினால், உங்களால் அதிக விலை கொடுத்து காரை வாங்க முடியும் என்பதை விற்பனை பிரதிநிதிகள் உணர்ந்து கொள்வார்கள். இதன்பின்பு விலையை கணிசமாக உயர்த்தி விடுவார்கள்.

கார் சேல்ஸ்மேன்களிடம் நீங்கள் தப்பி தவறி கூட இந்த விஷயங்களை சொல்லி விடக்கூடாது... முன்னாடியே தெரியாம போச்சே!

உங்களிடம் இருந்து எவ்வளவு பணத்தை கறக்க முடியுமோ, அதனை கறந்து விடுவதுதான் கார் விற்பனை பிரதிநிதிகள் மற்றும் அவர்களது மேலாளரின் நோக்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? என்பது அவர்களுக்கு தெரியாத வரையில், இந்த தவறு நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Important Things You Should Never Say To A Car Sales Representative. Read in Tamil
Story first published: Monday, May 3, 2021, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X