மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ்... அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும்... இதை யாருமே எதிர்பாக்கல!

பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கும் பணியை இந்தியா வெற்றிகரமாகச் செய்துள்ளது. இதனால் வரும் அக்டோபர் மாதம் முதல் பெட்ரோலுக்கான வரியில் லிட்டருக்கு ரூ2 குறையும் என எதிர்பார்க்கலாம்.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

இன்று உலகம் முழுவதும் பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்கிறது. இந்தியாவில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ110-ஐயும் கடந்துவிட்டது. பெட்ரோல் விலையேற்றத்திற்குப் பல விதமான காரணங்கள் சொல்லப்படுகிறது. இருந்தாலும் பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த அரசு எடுத்த முயற்சியும் பெரியதாகப் பலனளிக்கவில்லை. தொடர்ந்து பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

பெட்ரோலை பொருத்தவரை அது கச்சா எண்ணெய்யிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு அதன் பின் அதிலிருந்து பெட்ரோல் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 85 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதியாகிறது.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

ஆண்டுதோறும் 185 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதன் மதிப்பில் 551 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்நிலையில் இந்தியா தனது கச்சா எண்ணெய்க்கான தேவைக்காக வெளிநாடுகளையே சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

இந்நிலையில் மத்திய அரசின் நிதி அயோக் அமைப்பு எப்படி இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையைக் குறைப்பது அல்லது அதற்கான தேவையை இந்தியாவிலேயே உருவாக்குவது என யோசிக்கத் துவங்கியது. அதற்கு அந்த அமைப்பிற்கு கிடைத்த விடைதான் எத்தனால்

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

எத்தனால் என்பது எரிபொருள் தான். இதையும் வாகனத்தில் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். அதனால் பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் கொண்டு வர முடியும். ஆனால் பெட்ரோல் தேவைக்கான அளவிற்கு எத்தனால் தயாரிக்க இந்தியாவில் போதுமான வசதிகள் இல்லை. ஆனால் அந்த வசதிகளை மேம்படுத்தி இந்தியா முயன்று வருகிறது.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நிதி அயோக் ஒரு புதிய திட்டம் ஒன்றை அறிவித்தது. E20 புரோகிராம் எனப் பெயரிடப்பட்ட அந்த திட்டம் மூலம் வரும் 2025ம்ஆண்டிற்குள் இந்தியா பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் எனத் திட்டமிட்டது.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

அப்படியாகச் செய்தால் இந்தியா வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஆண்டிற்கு ரூ30 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்த முடியும் எனத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்துள்ளது. அந்த திட்டத்தின் படி 2022ம் ஆண்டிற்குள் எத்தனால் 10 சதவீதம் வரை கலக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி இந்தியா பெட்ரோலில் 9.45 சதவீதம் எத்தனால் கலக்கும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு அதை 10 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. அது வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்படும் எனத் தெரிகிறது. அப்படியாக அக்டோபர் மாதத்திற்குள் இந்த 10 சதவீத பெட்ரோலில் எத்தனால் கலக்கும் பட்சத்தில் பெட்ரோலுக்கான வரி விதிப்பில் மாற்றம் வரும்.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

பெட்ரோலுக்கான பசுமை வரி என்ற ஒரு வரி விதிக்கப்படுகிறது. இது பெட்ரோலால் நாட்டிற்கு ஏற்படும் மாசுவை சரி செய்ய இந்த வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விட்டால் அந்த 10 சதவீதத்திற்கான பசுமை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும். அப்படியாகப் பசுமை வரி ரத்தானால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2 வரை குறையும் என எதிர்பார்க்கலாம்.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

எத்தனால் என்பது எத்தில் ஆல்கஹால் ஆகும். இதை விவசாய கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. உதாரணமாகக் கரும்பு சக்கை, சோள கழிவுகளிலிருந்த தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த எத்தனால் பெட்ரோலுக்கு மாற்றாக உருவாக்குவது என்பது இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு பொறுத்தமற்றது என ஒரு ஆய்வு சொல்கிறது.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

உதாரணமாக இந்தியாவில் எத்தனால் உருவாக்க 187 ஹெக்டரர் நிலத்தில் கிடைக்கும் சோள கழிவுகளைப் பயன்படுத்தினால் அதில் கிடைக்கும் எத்தனாலை தயாரிக்கப்படும் பெட்ரோல் ஒரு வாகனத்திற்கு எவ்வளவு தூரம் பயணிக்கப் பயன்படுமோ அதே அளவு பயணத்தை 1 ஹெக்டர் நிலத்தில் சூரியசக்திமூலம் மின் சேகரிப்பதால் கிடைக்கும் மின் சக்தி மூலம் மின்சார வாகனங்களில் சென்று விட முடியும் என IEEFA என்ற நிறுவனம் சொன்ன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

இந்தியா உலகின் பசி கொண்ட நாடுகளின் 116 நாடுகள் கொண்ட பட்டியலில் 101வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் விவசாய நிலங்களை இதற்காகப் பயன்படுத்துவது முறையற்றது என்றும், இந்தியாவிற்கு பெட்ரோலை விட மின்சார வாகனங்களே சிறந்த மாற்றாக இருக்க முடியும் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

தற்போது பெட்ரோலில் எத்தனாலை கலப்பது போல டீசலிலும் பயோ டீசலை கலக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2030 ஆண்டிற்குள் அதைச் செய்து முடிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு வைத்துள்ளது. இதன் படி பெட்ரோல் மற்றும் டீசல் இந்தியாவில் இனி கலப்படங்களுடன் தான் விற்பனையாகும். ஆனால் இந்த கலப்படம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, பெட்ரோல் டீசலால் ஏற்படும் தீங்கைக் குறைக்கும் கலப்படம் ஆகும்.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

கார் தயாரிப்பு நிறுவனங்களைப் பொருத்தவரை கடந்த 2008ம் ஆண்டு முதல் தயாரிக்கப்படும் இன்ஜின்கள் E10 எனப்படும் 10 சதவீத எத்தனாலுடன் உள்ள கலப்பட பெட்ரோல்களை பயன்படுத்தும் விதமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இது 2025ம் ஆண்டு 20 சதவீதமாக உயர்ந்தால் தற்போது உள்ள வாகனத்தின் திறன் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

அதன்படி 2008ம் ஆண்டிற்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு தற்போது உள்ள திறனை விட 6-7 சதவீதம் திறன் குறையும் என்றும், 2008ம் ஆண்டு முன்பு தயாரிக்கப்பட்இருசக்கர வாகனங்களுக்கு தற்போது உள்ள திறனை விட 3-4 சதவீதம் குறையும் என்றும் எனவ்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

அதே போல தற்போது E10 பெட்ரோலை வைத்துத் தயாரிக்கப்பட்ட கார்களுகளில் E20 வகை பெட்ரோல்களை பயன்படுத்தும் போது 1-2 சதவீதம் திறன் குறையும் என்றும், டூவீலர்கள் 3-4 சதவீதம் திறன் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

அதே போல கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஃபிளக்ஸி ஃபியூயல் எனப்படும் பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வரும் எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்களே செய்ய முன்வந்துள்ளன. அப்படியான வாகனங்களை அந்நிறுவனங்கள் தயார் செய்தார் கார்களுக்கு தற்போதைய தயாரிப்பு செலவிலிருந்து ரூ17 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலும் டூவீலர்களுக்கு ரூ5 ஆயிரம் முதல் ரூ12 ஆயிரம் வரையிலும் தயாரிப்பு செலவு அதிகமாகும் எனவும் கூறப்படுகிறது. இதனால் வாகனங்களின் விலையும் அதிகமாகும்.

மத்திய அரசின் திட்டம் சக்ஸஸ் . . . அக்டோபர் முதல் பெட்ரோல் விலை அதிரடியாகக் குறையும் . . . இதை யாருமே எதிர்பாக்கல !

இந்த எத்தனால் பெட்ரோலுடன் கலக்கும் திட்டம் வரியில் சற்று விலை குறைவை ஏற்படுத்தினாலும் வாகனத்தின் மைலேஜ் திறன் மற்றும் வாகனங்களின் விலையை அதிகமாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மத்திய அரசின் இந்த திட்டம் குறித்த நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Most Read Articles

English summary
India achieved 10 percent ethanol in petrol people can save rupee 2 per litter tax
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X