ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த இந்தியா.. அமெரிக்காவுக்கு 'நோஸ் கட்'

பொருளாதார தடை என்று அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை மீறி, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொருளாதார தடை என்று அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை மீறி, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

பொதுமக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் டூவீலர், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மறுபக்கம் அதற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவையும் அதிகரித்து கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

கச்சா எண்ணெய்தான், பெட்ரோல், டீசலின் மூலப்பொருள். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 82 சதவீதத்தை, இறக்குமதியின் மூலமே பூர்த்தி செய்து கொள்கிறது. ஈராக், சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு எமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

இந்த சூழலில், ஈரான் நாட்டுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா விலகியது. இதனால் கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சிகளை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்து வருகிறார்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

இதன் ஒரு பகுதியாக, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, நவம்பர் 4ம் தேதி முதல், அனைத்து நாடுகளும் நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும், இந்த உத்தரவை மீறும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

அமெரிக்காவின் இந்த உத்தரவு, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால் அமெரிக்கா விதித்த காலக்கெடுவான நவம்பர் 4 நெருங்கி வரும் சூழலில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்து கொண்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஈரானில் இருந்து 2.07 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதாவது 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018 ஆகஸ்ட் மாதத்தில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா 43.72 சதவீதம் அதிகரித்து கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 0.52 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை மட்டுமே, ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 1.08 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

இதுதவிர நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்கள் (ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) என்ற அளவில் பார்த்தாலும், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்து கொண்டு வருகிறது என்பது நன்றாக புரியும்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

அதாவது நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில், ஈரானில் இருந்து 13.32 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டின் முதல் 5 மாதங்களில், வெறும் 9.26 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை மட்டுமே ஈரானிடம் இருந்து இந்தியா வாங்கியிருந்தது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

கடந்த நிதியாண்டின் முதல் 5 மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை 43.69 சதவீதம் அளவிற்கு இந்தியா அதிகரித்து கொண்டிருப்பது இந்த புள்ளி விபரங்களின் மூலம் உறுதியாகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

பணத்தின் அடிப்படையில் பார்த்தால், கடந்த நிதியாண்டின் முதல் 5 மாதங்களில், 3.27 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை மட்டுமே ஈரானிடம் இருந்து இந்தியா வாங்கியிருந்தது. தற்போது இது 6.82 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

பொருளாதார தடை என்று அமெரிக்கா காட்டிய பூச்சாண்டிக்கு பயந்து, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை, உலகின் சில நாடுகள் படிப்படியாக குறைத்து கொண்டு வருகின்றன. அதிலும் தென் கொரியா ஒரு படி மேலே போய், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தற்போதே நிறுத்தி விட்டது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

ஆனால் இவை அனைத்தையும் மீறி, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரித்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கான எரிபொருள் தேவை மிக அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

ஏனெனில் ஏற்கனவே இங்கு பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இந்த சூழலில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்தாலோ அல்லது நிறுத்தினாலோ கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் விலை இன்னும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

அப்படி பெட்ரோல், டீசல் விலை இன்னும் அதிகரித்து விட்டால், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்பது உறுதி.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

எனவே அது போன்ற அபாயங்களை தவிர்ப்பதற்காகவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும்தான், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, இந்தியா அதிகரித்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

முன்னதாக பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பல மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலமாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அமெரிக்காவை எதிர்க்கும் மோடி.. திடீர் துணிச்சலுக்கு காரணம் இதுதான்..

ஆனால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு இன்னும் செவி சாய்க்கவில்லை. எனவே தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வரிகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவும் அதிகப்படியான விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது என்பதை மறுக்க முடியாது.

Most Read Articles

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்கும் விதமாக பலர் வேக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்த சூழலில், இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் புகைப்பட ஆல்பத்தை இங்கே காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
India Increased Crude Oil Imports From Iran Amid US Sanctions. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X