மண்ணெண்ணெயில் பறக்கப்போகும் இஸ்ரோவின் புதிய ராக்கெட்... 'கிலி'யில் அமெரிக்க நிறுவனங்கள்!!

உலக விண்வெளி ஆய்வில் மிக முக்கிய அத்தியாயத்தை நோக்கி இந்திய விண்வெளி ஆய்வும மையமான இஸ்ரோ பயணித்து வருகிறது. மிக அதிக எடையை சுமந்து செல்லும் புதிய ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு இருக்கிறது. அந்த ராக்கெட் மண்ணெண்ணெயில் இயங்கும் எரிபொருள் அமைப்புடன் தயாராகி வரும் இந்த ராக்கெட் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய ராக்கெட்டுகளை கண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ராக்கெட் தயாரிப்பு நிறுவனங்கள் கிலி பிடித்த நிலையில், தற்போது இந்த புதிய ராக்கெட் அவர்களது கவலையை மேலும் அதிகமாக்கியிருக்கிறது. அதேநேரத்தில், இந்த புதிய ராக்கெட், இந்திய விண்வெளி ஆய்வின் வல்லமையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனை

சாதனை

ஒரேநேரத்தில் ஏராளமான செயற்கைகோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளை இஸ்ரோ செலுத்தி அசத்தி வருகிறது. பல வியத்தகு சாதனைகள் மூலமாக, உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை இஸ்ரோ ஈர்த்து வருகிறது

அடுத்த திருப்பம்

அடுத்த திருப்பம்

இந்த வேளையில், மிக அதிக எடையை சுமந்து செல்லும் புதிய ராக்கெட்டை தயாரிக்கும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதாவது, இந்த ராக்கெட் 10 டன் எடையுடையே செயற்கைகோள்களை சுமந்து கொண்டு ஜியோசிங்க்ரோனஸ் ஆர்பிட்டில் நிலைநிறுத்தும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

கோளப்பாதை

கோளப்பாதை

இதுவரை அதிகபட்சமாக 2.5 டன் எடையுள்ள செயற்கைகோள்களை இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் பூமியிலிருந்து 36,000 கிமீ உயரத்தில் ஜியோசிங்க்ரோனஸ் ஆர்பிட்டில் நிலைநிறுத்தும் வல்லமையை பெற்றிருக்கிறது.

புதிய ராக்கெட்

புதிய ராக்கெட்

ஆனால், புதிய எரிபொருள் நுட்பத்துடன் தயாரிக்கப்படும் ராக்கெட் 10 டன் எடையுடைய செயற்கைகோள்களை ஜியோசிங்ரோனஸ் எனப்படும் மத்திய தூர புவி வட்ட கோளப்பாதையில் நிலைநிறுத்தும்.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

ஜியோசிங்க்ரோனஸ் கோளப்பாதையில் அதிக எடையுடைய செயற்கைகோள்களை நிலைநிறுத்துவது மிக சவாலான விஷயமாக இருக்கிறது. இந்த கோளப்பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கைகோள்கள் பூமிக்கு இணையான வேகத்தில் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் தானாக பயணிக்கும்.

ஜியோசிங்க்ரோனஸ் ஆர்பிட்

ஜியோசிங்க்ரோனஸ் ஆர்பிட்

இந்த கோளப்பாதையில் நிலைநிறுத்தும்போது, பூமிக்கு இணையான வேகத்தில் விண்வெளியில் செயற்கைகோள் சுற்றும் என்பதால், சம்பந்தப்பட்ட நாட்டிற்கு தேவையான தகவல்கள், கண்காணிப்பை எளிதாக மேற்கொள்ள முடிகிறது.

கிரையோஜெனிக் எஞ்சின்

கிரையோஜெனிக் எஞ்சின்

அதிக எடையை சுமந்து செல்லும் இந்த ராக்கெட்டிற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த கிரையோஜெனிக் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய எஞ்சின் தயாரிப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது.

கோத்ரேஜ் தயாரிப்பு

கோத்ரேஜ் தயாரிப்பு

கிரையோஜெனிக் எஞ்சின் தயாரிப்பு பணியை கோத்ரேஜ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இஸ்ரோ ராக்கெட்டுகளுக்கான விகாஸ் எஞ்சின்களை கோத்ரேஜ் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

எரிபொருள்

எரிபொருள்

இந்த புதிய கிரையோஜெனிக் எஞ்சின் மண்ணெண்ணெய் மறறும் திரவ ஆக்சிஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்எல்வி- எம்கே3

ஜிஎஸ்எல்வி- எம்கே3

தற்போது சிஇ20 என்ற கிரையோஜெனிக் எஞ்சின் மூலமாக 4 டன் எடையுடைய செயற்கைகோள்களை சுமந்து செல்லும் திறன் படைத்தை ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டின் புரோட்டோடைப்பை ஏற்கனவே இஸ்ரோ தயாரித்துள்ளது.

விரைவில்

விரைவில்

புதிய ராக்கெட்டை தகவல் தொடர்பு செயற்கைகோள்களுடன் ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. தற்போது 4 டன் எடை சுமக்கும் திறன் என்பது 6 டன் மற்றும் 10 டன் வரையிலும் மேம்படுத்துவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஜிஎஸ்எல்வி எம்கே3

ஜிஎஸ்எல்வி எம்கே3

இந்த ராக்கெட் 65 மீட்டர் நீளமும், 732.6 டன் எடையும் கொண்டது. இந்த ராக்கெட் மூலமாக 10 டன் எடையுடையே செயற்கைகோள்களை குறைந்த தூர புவியின் அடி கோளப்பாதையில் நிலைநிறுத்த முடியும். இதைத்தொடர்ந்து, 10 டன் எடையை சுமந்து கொண்டு பறக்கும் புதிய ராக்கெட் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India to build heavy rocket to carry 10-tonne satellites.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X