சீனாவிற்கு தண்ணி காட்டும் இந்தியா... சத்தமே இல்லாமல் காரியத்தை முடித்த மோடி... பக்கா மாஸ்டர் பிளான்

சீனாவிற்கு தண்ணி காட்டும் விதமாக, சத்தமே இல்லாமல் தரமான சம்பவம் ஒன்றை இந்தியா செய்துள்ளது.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19), மனித உயிர்களை கொத்து கொத்தாக பறிப்பதுடன், பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்துள்ளது. கொரோனா வைரஸின் கோர பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

கொரோனா வைரஸின் தாயகம் என கருதப்படும் சீனா இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது. உலகமே லாக்டவுனில் இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் சீனா, இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்க ஆரம்பித்தது. எனவே எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்களை, சீனா நிறுவனங்கள் கையகப்படுத்தும் சூழல் உருவாகும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

இதனால் உடனே சுதாரித்து கொண்ட மத்திய அரசு, அந்திய நேரடி முதலீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தற்போது விதித்துள்ளது. சீனாவிற்கு செக் வைக்கும் விதமாகதான் இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

இதன் காரணமாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவும் சூழலில், சீனாவிற்கு செக் வைக்கும் விதமாக மற்றொரு அதிரடியையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் உடனும் இந்தியா நில எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது. இவ்விரு நாடுகளும் இந்தியாவிற்கு எப்போதுமே அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

குறிப்பாக இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு சீன ராணுவத்தால் பெரும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. சீனாவின் எல்லையையொட்டி அருணாச்சல பிரதேசம் அமைந்துள்ளது. இதனால் அருணாச்சல பிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அதை அடைந்து விடவும் துடியாய் துடித்து கொண்டுள்ளது.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

இதன் ஒரு பகுதியாக டோக்லாமில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம், அங்கு சாலை உள்ளிட்ட வசதிகளை செய்தது. அத்துடன் டோக்லாம் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி எனவும் சீனா அறிவித்தது. இதனால் இந்தியா-சீனா இடையே பதற்றம் உருவானது. மேலும் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

இதன்பின்னர் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து சீன ராணுவம் வெளியேறியது. இருந்தாலும் இந்தியாவின் வட கிழக்கு பிராந்தியத்தில், சீனாவால் அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளில் சீனா அவ்வப்போது ராணுவத்தை குவிப்பதும், இந்தியாவின் எல்லைகளுக்குள் அத்துமீறி நுழைவதும் தொடர்கதையாகி வருகிறது.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

இதனால் வட கிழக்கு பிராந்தியத்தில் இந்தியா பாதுகாப்பை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில், இந்திய ராணுவ முகாம்கள் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. ராணுவ முகாம்களை அமைப்பதுடன் மட்டுமல்லாது, அங்கு சாலை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளிலும் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

இந்தியாவின் வட கிழக்கு பிராந்தியங்கள் மோசமான சாலை வசதிகளை கொண்டவை என்பது ஊரறிந்த விஷயம்தான். ஆனால் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல் இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் சாலை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் வேகம் எடுத்துள்ளன.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

இதன் மூலம் அந்த பகுதிகள் மேம்படும் என்பதுடன், அவசர சூழ்நிலைகளில் ராணுவம் விரைவாக எல்லைக்கு செல்ல முடியும். ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களையும் வேகமாக கொண்டு செல்லலாம். இதன் காரணமாகதான் வட கிழக்கு பிராந்தியத்தில், சாலைகளையும், பாலங்களையும் தொடர்ச்சியாக கட்டி அதிரடி காட்டி வருகிறது மத்திய அரசு.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

இந்த வரிசையில் அருணாச்சல பிரதேசத்தில் மத்திய அரசு தற்போது புதிய பாலத்தை திறந்துள்ளது. இதன் மூலம் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வேகமாக கொண்டு செல்ல முடியும். இந்த பாலத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 24ம் தேதி திறந்து வைத்தது. சத்தமே இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சீனாவிற்கு செக் வைக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

அப்பகுதியில் உள்ள ஆற்றை கடக்க உதவும் வகையில் இந்த பாலம் வலுவானதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. 40 டன் எடையை தாங்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அதிக எடை கொண்ட வாகனங்களும் இந்த பாலத்தின் மீது எளிதாக சென்று வர முடியும். மத்திய அரசு கட்டியுள்ள இந்த பாலம் இந்திய ராணுவத்திற்கு உதவியாக இருக்கும்.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

தன்னுடைய பகுதி என சீனா சொந்தம் கொண்டாடிய இடத்தில் இந்த பாலத்தை மத்திய அரசு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் முந்தைய காலங்களில் மோதல்கள் நடைபெற்ற இடத்திற்கு அருகே இந்த பாலம் அமைய பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவுடன் மோதல் ஏற்பட்டால், ராணுவம் விரைவாக சென்றடைய இந்த பாலம் உதவும்.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

ராணுவ டாங்குகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றையும் எளிதாகவும், விரைவாகவும் கொண்டு செல்லலாம். எல்லையில் இருக்கும் ராணுவத்திற்கு தேவையான ஆயுத வசதிகளை செய்து கொடுப்பதில், இந்த பாலம் மிக முக்கிய பங்கை வகிக்கும். ராணுவ முக்கியத்துவம் மிகுந்த இந்த பாலம் இந்தியாவின் வலிமையை அதிகரித்துள்ளது.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

அந்திய நேரடி முதலீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சீனாவிற்கு செக் வைத்துள்ள நேரத்தில், மறு பக்கம் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த வலுவான பாலத்தையும் திறந்து, சீனாவிற்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்தியா. எல்லை வழியாக ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கு தண்ணி காட்டிய இந்தியா... சத்தமே இல்லாமல் எல்லையில் நடந்த தரமான சம்பவம்... செம கெத்து...

கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019ம் ஆண்டில் ஊடுருவல் நிகழ்வுகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விவரம் அறிந்தவர்கள் இந்த தகவலை கூறியுள்ளனர். எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய பாலங்கள் அவசியமாகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India Opens New River Bridge In Arunachal Pradesh Near China Border. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X