உலகில் 4வது பெரிய ஆட்டோ மொபைல் சந்தையானது இந்தியா

இன்று இந்தியாவில் பைக் இல்லாத வீடுகளே மிக்குறைவு. இந்நிலையில் இந்தாண்டு இந்தியா உலகின் நான்காவது பெரிய ஆட்டோ மொபைல் சந்தையாக உருவெடுத்துள்ளது.

By Balasubramanian

இந்தியாவில் மக்கள் தொகைவில் விரைவில் முதலிடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வாகனங்களில் தேவையும் அதிகமாகியுள்ளது. இன்று இந்தியாவில் பைக் இல்லாத வீடுகளே மிக்குறைவு. இந்நிலையில் இந்தாண்டு இந்தியா உலகின் நான்காவது பெரிய ஆட்டோ மொபைல் சந்தையாக உருவெடுத்துள்ளது.

உலகில் 4வது பெரிய ஆட்டோ மொபைல் சந்தையானது இந்தியா

இந்தியாவில் விற்பனையாகும் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களின் விற்பனை 9.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் 40 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

உலகில் 4வது பெரிய ஆட்டோ மொபைல் சந்தையானது இந்தியா

ஜெர்மனியில் 38 லட்சம் வாகனம் மட்டுமே விற்பனையானது. இதையடுத்து இந்தியா ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தாண்டிற்கான வளர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகில் 4வது பெரிய ஆட்டோ மொபைல் சந்தையானது இந்தியா

இந்திய சந்தையில் வாகன விற்பனையை பொறுத்தவரை மாருதி சுசூகி, விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா, ஆகிய வாகனங்கள் அதே அளவு விற்பனையை மேற்கொண்டுள்ளனர். புதிதாக வந்துள்ள டாடா நெக்ஸான், ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா ஆகிய வாகனங்கள் விற்பனையை அதிகரித்துள்ளன.

உலகில் 4வது பெரிய ஆட்டோ மொபைல் சந்தையானது இந்தியா

மத்திய அரசு சமீபமாக போக்குவரத்திற்காக கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாலும், வாகன பயன்பாட்டில் பல விதிமுறைகள் கொண்டுவருவதாலும், இந்தியாவில் வரும் ஆண்டில் வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது. இதற்கிடையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு வரும் காலங்களில் மக்கள் மத்தியில் அதிகமாகும் எனவும் நம்பப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India pips Germany, ranks 4th largest auto market now. Read in Tamil.
Story first published: Tuesday, March 27, 2018, 15:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X