இந்தியாவில் முதல் புல்லட் ரயில் எப்போது ஓடும்... மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பரான தகவல்!

இந்தியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான புல்லட் ரயில் திட்டம் எப்போது இந்தியாவில் செயல்பட இருக்கின்றது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வெளியிட்டிருக்கும் முக்கியமான தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை எப்போது எதிர்பார்க்கலாம்... மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பரான தகவல்!

அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய பணிகள் மற்றும் அத்துறை கண்டு வரும் முன்னேற்றங்கள் குறித்த தகவலைப் பகிர்ந்துக் கொண்டார்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை எப்போது எதிர்பார்க்கலாம்... மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பரான தகவல்!

அத்துடன், இந்தியர்களின் நீண்ட நாள் கனவான புல்லட் ரயில் திட்டம் குறித்த முக்கிய தகவலையும் அவர் வெளியிட்டார். இதன் வாயிலாக இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. 2026ம் ஆண்டிலேயே இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதனையே சமீபத்திய பேட்டியில் அமைச்சர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை எப்போது எதிர்பார்க்கலாம்... மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பரான தகவல்!

புல்லட் ரயிலை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கின்றார். அனைவருக்குமான வசதியை மேம்படுத்திக் கொடுக்கும் விஷயத்தில் மத்திய அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், இந்த பணியில் முயல் வேகத்தில் தாங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை எப்போது எதிர்பார்க்கலாம்... மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பரான தகவல்!

இதுமட்டுமின்றி ரயில் கட்டணம்குறித்த முக்கிய தகவலையும் அவர் வெளியிட்டிருந்தார். "பயணிகளின் வசதிக்காக அமைச்சகம் இந்த முறை ரயில் கட்டணத்தை உயர்த்தவில்லை. விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு துளியளவும் இல்லை" என்று தெரிவித்தார். இதன் வாயிலாக மத்திய அரசு ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தாது என்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை எப்போது எதிர்பார்க்கலாம்... மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பரான தகவல்!

தொடர்ந்து பேசிய அவர், "ஏற்கனவே போடப்பட்டுள்ள தண்டவாளங்களை பலப்படுத்துவது, தவிர, இன்னும் பல திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாக" கூறினார். தொடர்ந்து, தற்போது உலகம் முழுவதிலும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கும் செமி கண்டக்டர் பற்றாக்குறைக்கு தீர்வுக் காணும் விதமாக அவற்றின் உற்பத்தியை இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குள் இந்தியாவில் தொடங்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை எப்போது எதிர்பார்க்கலாம்... மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பரான தகவல்!

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பற்றிய முக்கிய தகவல்கள்:

மும்பை - ஆமதாபாத் இடையிலேயே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றது. இத்திட்டத்தின் மதிப்பு 1.10 லட்சம் கோடி ஆகும். இதில் 88,000 ஆயிரம் கோடியை ஜப்பான் கடனாக வழங்குகின்றது. 0.1 சதவீதம் வட்டி விகிதத்தில் இக்கடனை ஜப்பான் இந்தியாவிற்கு வழங்குகின்றது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை எப்போது எதிர்பார்க்கலாம்... மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பரான தகவல்!

மொத்தம் 508 கிமீ தூரத்திற்கு முதல் புல்லட் ரயிலின் வழித்தடம் இருக்கும். இந்த தடத்தில் 468 கிமீ தூரம் மேம்பாலமாகவும், 27 கிமீ சுரங்கப் பாதையாகவும், 13 கிமீ வழக்கமான நிலப்பரப்பைக் கொண்டதாகவும் இருக்கும். இதில், 7 கிமீ தூரம் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சுவாரஷ்யமான வழித் தடங்களுடனேயே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் விரைவில் செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதுமாதிரியான தகவல்களினால்தான் பலர் இந்த திட்டத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை எப்போது எதிர்பார்க்கலாம்... மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பரான தகவல்!

புல்லட் ரயிலின் உச்சபட்ச வேகம் மணிக்கு 350 கிமீ ஆகும். ஆனால், இதைவிட சற்று குறைவான வேகத்திலேயே ரயில் இயக்கப்பட இருக்கின்றது. மும்பை - ஆமதாபாத்தை 2.07 மணி நேரங்களில் கடக்கும் வகையில் அது இயக்கப்படும் என கூறப்படுகின்றது. இரு நகரங்களுக்கு இடையிலான தூரம் 508 கிமீ ஆகும். நாள் ஒன்றுக்கு 70 முறை புல்லட் ரயில்கள் இந்த வழி தடத்தில் இயக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலை எப்போது எதிர்பார்க்கலாம்... மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பரான தகவல்!

அதேநேரத்தில், இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் மும்பை-ஆமதாபாத் இடையில் மட்டுமின்றி, நாட்டின் மேலும் 7 வழி தடங்களிலும் செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதில், சென்னை-மைசூரு வழித்தடமும் அடங்கும். இதுமட்டுமின்றி, டெல்லி - வாரணாசி, டெல்லி - அகமதாபாத், மும்பை - நாக்பூர், மும்பை- ஐதராபாத், டெல்லி - அமிர்தசரஸ், வாரணாசி - ஹவுரா இந்த வழித் தடங்களிலேயே புல்லட் ரயிலை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வேதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India s first bullet train start to run by 2026 here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X