மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

மந்திரவாதிகளும், சூனியக்காரர்களும் உலாவி வருவதாக கூறப்படும் மர்மமான சாலை குறித்த திகிலூட்டும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

இந்தியாவில் உள்ள பல்வேறு சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு பரவசத்தை தரக்கூடியவை. இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் அத்தகைய சாலைகளில் வாகன ஓட்டிகள் மீண்டும் மீண்டும் பயணம் செய்ய விரும்புவார்கள். அதேசமயம் வாகன ஓட்டிகளுக்கு திகிலூட்டும் பல்வேறு சாலைகளும் இந்தியாவில் இருக்கவே செய்கின்றன.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதி இதற்கு மிக சரியான உதாரணம். வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் உறைய வைக்கும் தொப்பூர் கணவாய் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொண்டுள்ளன. இதற்கு ஆவி, பேய்தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

ஆனால் தொப்பூர் கணவாய் பகுதியின் சிக்கலான நில அமைப்புதான் சாலை விபத்துக்களுக்கு காரணம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எனினும் தொப்பூர் கணவாய் பகுதியில், ஆவிகளை பார்த்தாக திகிலூட்டும் பல கதைகளை அப்பகுதி மக்கள் கூறுவதுண்டு. எனவே தொப்பூர் கணவாய் வழியாக பயணிக்கும் அனைத்து வாகன ஓட்டிகளும் ஒரு வித அச்சத்துடன் செல்கின்றனர்.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

அதற்கும் முன்னதாக முனியப்பன் கோயிலில் அவர்கள் வழிபாடு நடத்தி விட்டு செல்வதும் உண்டு. இதுபோல் இந்தியாவின் பல்வேறு சாலைகளை பற்றி பல்வேறு மர்மமான தகவல்கள் உலா வந்து கொண்டுள்ளன. இதில், மும்பை-கோவா நெடுஞ்சாலையும் ஒன்று. மும்பை-கோவா நெடுஞ்சாலையின் மர்மங்கள் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் தகவல்கள் அச்சமூட்டுபவையாக உள்ளன.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

மும்பை-கோவா நெடுஞ்சாலையில், சூனியக்காரர்களும், மந்திரவாதிகளும் உலாவி கொண்டிருப்பதாக அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர். உள்ளூர் மக்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், இறைச்சி மற்றும் சதையை தேடி அவர்கள் எந்நேரமும் அலைந்து கொண்டிருக்கிறார்களாம். எனவே இந்த சாலையில் பயணம் செய்யும்போது அசைவ உணவுகளை எடுத்து செல்ல வேண்டாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

உள்ளூர் மக்கள் விடுக்கும் இந்த எச்சரிக்கையை வாகன ஓட்டிகள் பலரும் பின்பற்றுகின்றனர். குறிப்பாக இந்த சாலையில் அடிக்கடி பயணிக்கும் லாரி மற்றும் பஸ்களின் டிரைவர்கள் தப்பி தவறி கூட தங்கள் வாகனத்தில் எந்த வகையான அசைவ உணவையும் எடுத்து செல்வதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் நடைபெற்றதாக திகிலூட்டும் சம்பவம் ஒன்றை அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை என்றாலும், அப்பகுதி மக்கள் அனைவராலும் இந்த சம்பவம் உண்மை என்று இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

மும்பை-கோவா நெடுஞ்சாலையில், இளம் தம்பதியினர் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். நள்ளிரவை கடந்த நேரத்தில், காரின் ஹெட்லைட் திடீரென அணைவதும், பின்னர் மீண்டும் எரிவதுமாக இருந்துள்ளது. ஆனால் இது காரில் ஏற்பட்ட ஏதோ பிரச்னை என்றுதான் அந்த ஜோடி நினைத்துள்ளது.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

எனவே காரை ஓட்டி வந்த இளைஞர் ஒரு ஓரமாக பார்க் செய்துள்ளார். பின்னர் காரை விட்டு இறங்கிய அந்த ஜோடி, என்ன பிரச்னை என்பதை கண்டறிய முயற்சி செய்து கொண்டிருந்தது. அவர்கள் காரை விட்டு இறங்கிய சில நிமிடங்களில், காரின் அனைத்து டோர்களும் தானாக மூடிக்கொண்டனவாம். ஆனால் எவ்வளவோ போராடியும் அவர்களால் காரின் டோர்களை மீண்டும் திறக்க முடியவில்லை.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

இதனால் அவர்களை அச்சம் தொற்றி கொள்ள தொடங்கியுள்ளது. அந்த நேரத்தில் திடீரென காரில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. அத்துடன் காரின் கதவுகளும் திடீரென தானாக திறந்து கொண்டன. நள்ளிரவு நேரத்தில், துணைக்கு யாரும் இல்லாத சமயத்தில் நடைபெற்ற இந்த திகில் சம்பவத்தால் அந்த ஜோடிக்கு நடுக்கம் எடுக்க ஆரம்பித்துள்ளது.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

எனினும் காரின் கதவு அதுவாக திறந்து கொண்டதால், இளைஞர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது காரில் இருந்த அசைவ உணவுகள் எதையும் காணாததை கண்டு திடுக்கிட்டார். அந்த நேரத்தில் வெளியே நின்றிருந்த அவரது மனைவி அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் காரில் இருந்து அவர் மீண்டும் கீழே இறங்கியபோது, அவரது மனைவியின் முகத்தில் யாரோ அறைந்து போன்ற கீறல்கள் இருந்தனவாம்.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

இந்த நிகழ்வு எப்படி நடந்தது? என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அதைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்காமல் உடனடியாக அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வந்தடைந்தனர். அதன்பின்புதான் அவர்களுக்கு உயிரே மீண்டும் வந்தது. இதன்பின் நடந்த சம்பவங்களை ஒரு சிலரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

அப்போதுதான் சதைக்காக உலாவும் மந்திரவாதிகளின் கதை அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டதை போல் இந்த சம்பவத்தில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் மந்திரவாதிகள் உலாவுவதால், இறைச்சியை எடுத்து செல்லக்கூடாது என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருவது உண்மை.

மந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா?

இதுபோல் இந்தியாவின் பல்வேறு சாலைகள் வாகன ஓட்டிகளை திகிலூட்டி வருகின்றன. அந்த சாலைகளை பற்றி பல்வேறு மர்ம கதைகளும் உலா வருகின்றன. இதுபோல் ஏதேனும் குறிப்பிட்ட சாலையில் வாகனத்தில் பயணிக்கும்போது, திகிலான அனுபவம் ஏதாவது உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அதனை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India’s Most Haunted Road: Mumbai-Goa National Highway. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X