டீசலை விட 40 சதவீதம் குறைவான விலை... எல்என்ஜி ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரம்...

இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில், 1,000 எல்என்ஜி ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டீசலை விட 40 சதவீதம் குறைவான விலை... எல்என்ஜி ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரம்...

இந்தியாவில் எல்என்ஜி (LNG) நிலையங்களை அமைப்பதில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. இந்த எல்என்ஜி எரிபொருள் நீண்ட தூர போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும். எல்என்ஜி எரிபொருளில் வாகனங்களை இயக்குவதற்கு மிகவும் குறைந்த செலவே ஆகும். அத்துடன் உமிழ்வும் குறைவாக இருக்கும்.

டீசலை விட 40 சதவீதம் குறைவான விலை... எல்என்ஜி ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரம்...

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த தகவலை தெரிவித்துள்ளார். Liquefied Natural Gas என்பதன் சுருக்கமே LNG. சிஎன்ஜி எரிபொருளை விட அதிக ஆற்றல் அடர்த்தி காரணமாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு இந்த எல்என்ஜி எரிபொருள் ஏற்றதாக இருக்கும்.

டீசலை விட 40 சதவீதம் குறைவான விலை... எல்என்ஜி ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரம்...

அத்துடன் டீசலை விட எல்என்ஜி எரிபொருளின் விலை 30-40 சதவீதம் வரை குறைவு என்பதும் கூடுதல் சிறப்பம்சம். தற்போது வரை வாகனங்களை இயக்குவதற்கு பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் ஆட்டோ-எல்பிஜி உள்ளிட்டவற்றை இந்தியா எரிபொருளாக பயன்படுத்தி வருகிறது. ஆனால் எல்என்ஜி என்பது புதிய எரிபொருளாகும்.

டீசலை விட 40 சதவீதம் குறைவான விலை... எல்என்ஜி ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரம்...

இந்த எல்என்ஜி எரிபொருள் வாகனங்களை இயக்குவதற்கான செலவை குறைக்கும் அதே நேரத்தில், கார்பன் உமிழ்வையும் குறைக்கும். எனவே இது இந்தியாவிற்கு ஏற்ற எரிபொருளாக இருக்கும். இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

டீசலை விட 40 சதவீதம் குறைவான விலை... எல்என்ஜி ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரம்...

ஆனால் எல்என்ஜி எரிபொருள் மூலம் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க முடியும். இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ''அடுத்த மூன்று ஆண்டுகளில், 1,000 எல்என்ஜி ஸ்டேஷன்களை அமைக்க, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும்'' என்றார். இந்தியாவில் தற்போதைய நிலையில் சுமார் 10 மில்லியன் (1 கோடி) லாரிகள் உள்ளன.

டீசலை விட 40 சதவீதம் குறைவான விலை... எல்என்ஜி ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரம்...

அவை டீசல் மூலம் இயங்கி வருகின்றன. ஆனால் ஏற்கனவே கூறியபடி டீசலை காட்டிலும் எல்என்ஜி எரிபொருளின் விலை 40 சதவீதம் வரை குறைவு. எனவே லாரிகள் எல்என்ஜி எரிபொருளுக்கு மாறினால், பெரும் தொகையை சேமிக்க முடியும். அத்துடன் டீசலுக்கு பதில், குறைவான உமிழ்வு கொண்ட எல்என்ஜி மூலம் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும்.

டீசலை விட 40 சதவீதம் குறைவான விலை... எல்என்ஜி ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரம்...

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் இந்தியாவிற்கு காற்று மாசுபாடு உள்பட ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே அவற்றின் பயன்பாட்டை குறைத்து விட்டு, மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களும் அடங்குகின்றன.

டீசலை விட 40 சதவீதம் குறைவான விலை... எல்என்ஜி ஸ்டேஷன்களை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரம்...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் ஏற்கனவே மத்திய அரசால் தொடங்கப்பட்டு விட்டன. அந்த பணிகள் தற்போது படிப்படியாக வேகம் எடுத்து வருகிறது. இதுதவிர டெல்லி, குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம், தெலங்கானா, கேரளா போன்ற மாநில அரசுகள் தரப்பிலும், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India To Get 1,000 LNG Stations - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X