குடிமகன்களுக்கு இனி ஆப்பு இந்த ரூபத்தில்தான்.. இந்திய இராணுவத்தினரின் அசத்தல் தொழில்நுட்பம்..!

குடிமகன்களுக்கு ஆப்பு வைக்கின்ற வகையில் இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் குழு ஓர் தரமான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

குடிமகன்களுக்கு இனி ஆப்பு இந்த ரூபத்தில்தான்... இந்திய இராணுவத்தினரின் மெய்சிலிர்க்கும் தொழில்நுட்பம்..!

நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்துகளுக்கு போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிலும், குடித்துவிட்டு வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளினாலேயே இது சமீபகாலமாக புதிய உச்சத்தை எட்டி வருகின்றது.

இதனைத் தவிர்க்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இருப்பினும், அது குறைந்தபாடில்லை.

குடிமகன்களுக்கு இனி ஆப்பு இந்த ரூபத்தில்தான்... இந்திய இராணுவத்தினரின் மெய்சிலிர்க்கும் தொழில்நுட்பம்..!

இந்நிலையில், மது அருந்தியிருந்தாலோ அல்லது சீட் பெல்ட் அணியாமல் இருந்தாலோ வாகனத்தை இயக்க முடியாத ஓர் தொழில்நுட்பத்தை இந்திய இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு உருவாக்கியுள்ளது.

இந்திய இராணுவத்தின் கேப்டனான ஓங்கர் கேல் மற்றும் அவரது அதிகாரிகள் குழுவே இந்த சிறப்பான தொழில்நுட்பத்தை இராணுவ வாகனங்களுக்காக உருவாக்கியுள்ளனர்.

குடிமகன்களுக்கு இனி ஆப்பு இந்த ரூபத்தில்தான்... இந்திய இராணுவத்தினரின் மெய்சிலிர்க்கும் தொழில்நுட்பம்..!

இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இராணுவ டிரக்கை இயக்கும் அதிகாரி ஒரு வேலை குடித்திருந்தாலோ அல்லது அவரது உடலில் போதையை ஏற்படுத்தும் ஆல்கஹாலின் தன்மை குறிப்பிட்ட அளவை மீறியிருந்தாலோ அந்த வாகனம் தானாக இயக்கமற்ற நிலைக்கு சென்றுவிடும்.

இதேபோன்று, அந்த வாகன ஓட்டி விபத்தில் பாதுகாப்பு அளிக்கும் சீட் பெல்டினை அணியாமல் இருந்தாலும் தானாக செயலற்ற நிலைக்குச் சென்றுவிடும்.

குடிமகன்களுக்கு இனி ஆப்பு இந்த ரூபத்தில்தான்... இந்திய இராணுவத்தினரின் மெய்சிலிர்க்கும் தொழில்நுட்பம்..!

மேலும், சீட் பெல்டை அணியவில்லை என்ற நினைவூட்டலையும் அது வழங்கும். ஆகையால், இராணுவ அதிகாரி உடனடியாக சீட் பெல்டை அணிந்துக் கொண்ட பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த தொழில்நுட்பமானது, விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருப்பதாக அந்த குழு தெரிவித்துள்ளது. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் பலவற்றில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.

குடிமகன்களுக்கு இனி ஆப்பு இந்த ரூபத்தில்தான்... இந்திய இராணுவத்தினரின் மெய்சிலிர்க்கும் தொழில்நுட்பம்..!

இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைப்பதற்காக இதுபோன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கண்டுபிடித்த வண்ணம் இருக்கின்றனர்.

அந்தவகையில், கடந்த ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, கழிவுப் பொருட்களிலிருந்து ஓர் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியிருந்தனர். இதுவும் ஓட்டுநர் மதுபோதையில் இருந்தால் வாகனத்தை இயக்க அனுமதிக்காது.

குடிமகன்களுக்கு இனி ஆப்பு இந்த ரூபத்தில்தான்... இந்திய இராணுவத்தினரின் மெய்சிலிர்க்கும் தொழில்நுட்பம்..!

அல்மோரா பகுதியில் உள்ள உத்தரகண்ட் குடியிருப்பு பல்கலைக்கழகம், ஹல்துவானியை மையமாகக் கொண்ட ஆர்ஐ இன்ஸ்ட்ரூமெண்ட் மற்றும் புதுமை இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியிருந்தன.

புல் மேடையைப் போல் காட்சியளிக்கும் அந்த கருவி வாகன ஓட்டியை மது அருந்திருந்தால் மற்றும் சீட் அணியாமல் இருந்தால் வாகனத்தை இயக்க அனுமதிக்காது.

குடிமகன்களுக்கு இனி ஆப்பு இந்த ரூபத்தில்தான்... இந்திய இராணுவத்தினரின் மெய்சிலிர்க்கும் தொழில்நுட்பம்..!

இந்தியாவில் அரங்கேறும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இது இவ்வாறே தொடர்ந்தால் விரைவில் அதிகம் விபத்துகள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிமகன்களுக்கு இனி ஆப்பு இந்த ரூபத்தில்தான்... இந்திய இராணுவத்தினரின் மெய்சிலிர்க்கும் தொழில்நுட்பம்..!

அதற்கேற்ப, முந்தைய காலத்தைக் காட்டிலும் பல மடங்கு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக லேன்செட் என்ற ஆராய்ச்சி கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

குடிமகன்களுக்கு இனி ஆப்பு இந்த ரூபத்தில்தான்... இந்திய இராணுவத்தினரின் மெய்சிலிர்க்கும் தொழில்நுட்பம்..!

ஆகையால், இந்த அவல நிலையில் இருந்து வெளியேற தற்போது இந்திய இராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதைப் போன்ற தொழில்நுட்பத்திற்கும் அரசு முக்கியத்துவும் அளிக்க வேண்டும் என்ற கருத்துகள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றது.

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

விபத்துக்களை தவிர்க்கும் வகையில் இந்திய ராணுவம் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதை போல், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் ஒருவர், சூப்பர் கண்ணாடி ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால், நீங்கள் விபத்தில் சிக்க மாட்டீர்கள்.

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

ஆம், உண்மைதான். இதை கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? அப்படி அந்த கண்ணாடியில் என்ன இருக்கிறது? என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவீர்கள். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

உலகிலேயே சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்து வருகின்றனர்.

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

சாலை விபத்துக்கள் நடைபெற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் டிரைவர்கள் தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டுவதே சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

லக்னோ மத்திய வழித்தட ஆராய்ச்சி மைய அறிக்கையின்படி, 20 சதவீத சாலை விபத்துக்களுக்கு சோர்வு (அ) தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டுவதே காரணமாக உள்ளது. எனவே தூக்க கலக்கத்தில் வாகனம் இயக்க வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், டிரைவர்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

இருந்தபோதும் தூக்க கலக்கம் காரணமாக நடைபெறும் விபத்துக்கள் நடைபெற்று கொண்டேதான் உள்ளன. இந்த சூழலில் இப்பிரச்னைக்கு பள்ளி மாணவர் ஒருவர் அறிவியல் உதவியுடன் தீர்வு கண்டுபிடித்துள்ளார்.

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் பிரதியூஷ் சுதாகர். 16 வயதாகும் இவர், கோட்டா சர்வோதயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையிலான புதிய கண்ணாடியை பிரதியூஷ் சுதாகர் கண்டுபிடித்துள்ளார். வாகனம் ஓட்டும்போது இந்த கண்ணாடி டிரைவர்களை தூங்க அனுமதிக்காது. ஆம், உண்மைதான். வாகனம் ஓட்டும்போது நீங்கள் இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால், நீங்கள் கண்டிப்பாக தூங்க மாட்டீர்கள். அது எப்படி? என்பதை இனி பார்க்கலாம்.

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

பிரதியூஷ் சுதாகர் கண்டுபிடித்துள்ள அதிநவீன கண்ணாடியின் இடது பக்கத்தில் இன்ஃப்ராரெட் சென்சார் (Infrared Sensor) வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 எல்இடி பல்புகளும் கனெக்ட் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக உருவாக்கப்படும் இன்ஃப்ராரெட் கதிர்வீச்சு, டிரைவரின் கண் இமைகளின் மீது பட்டு பிரதிபலிக்கும்.

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

அப்போது இக்கதிர்வீச்சை போட்டோடையோடு (Photodiode) 'ரிசீவ்' செய்து சிக்னல் ஒன்றை உருவாக்கும். இதன் விளைவாக உண்டாகும் அதிர்வு, டிரைவரை தூங்க விடாமல் கண் விழிக்க வைத்திருக்கும். எனவே சாலை விபத்துக்களும் தடுக்கப்படும். மாணவன் பிரதியூஷ் சுதாகர் கண்டுபிடித்துள்ள இந்த கண்ணாடி தற்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

சாலை விபத்து தொடர்பான செய்திகளை படித்த பிறகுதான், இப்படி ஒரு கண்ணாடியை உருவாக்கும் ஐடியா கிடைத்ததாக பிரதியூஷ் சுதாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த கண்ணாடியை உருவாக்கும் பணிகளை கடந்த 6 மாதத்தில் முடித்தேன்'' என்றார். பிரதியூஷ் சுதாகருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

பிரதியூஷ் சுதாகரின் தந்தை பெயர் ஆஷிஸ் சுதாகர். இவர் தனியார் வங்கி ஒன்றில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். பிரதியூஷ் சுதாகரின் தாய் பெயர் மம்தா சக்சேனா. இவர் அரசு பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி கொண்டுள்ளார்.

உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...

இந்திய மாணவர்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதற்கு பிரதியூஷ் சுதாகர் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இன்னும் பல திறமைசாலி மாணவர்கள் இங்கு உள்ளனர். இந்த வகையில், சென்னை மாணவர்களின் ஒரு கண்டுபிடிப்பு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...

வெறும் ரூ.15 ஆயிரம் செலவில், உயிர் காக்கும் உன்னத தொழில்நுட்பம் ஒன்றை கண்டறிந்து, உலகின் கவனத்தை சென்னை மாணவர்கள் ஈர்த்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. வாய்க்காலில் கார் பாய்ந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வுதான் அது.

உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...

பழனி முருகன் கோயிலுக்கு அவர்கள் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தபோது, இந்த துயர சம்பவம் நடைபெற்றது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வாய்க்காலில் பாய்ந்தது. ஆனால் காரின் கதவுகளை திறந்து அவர்களால் வெளியேற முடியவில்லை.

உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...

தற்போது இதுபோன்ற பிரச்னைகளுக்கு சென்னை எஸ்எஸ்என் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் தீர்வு கண்டுபிடித்துள்ளனர். கார் ஒருவேளை நீரில் மூழ்க தொடங்கினால், அதன் மேற்கூரை (Roof) தானாக திறந்து கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தை அவர்கள் முன் வைத்துள்ளனர்.

உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...

நீரில் மூழ்கும் கார்களில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக வெளியேறி உயிர் தப்பிக்க இந்த தொழில்நுட்பம் உங்களுக்கு உதவி செய்யும். விஷால் மற்றும் நெயில் அஸ்வின் ராஜ் உள்ளிட்ட மாணவர்கள் இணைந்து, உயிர் காக்கும் இந்த உன்னத தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...

பிரான்ஸை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான வாலியோ, சர்வதேச அளவில் மாணவர்களுக்கு இடையே, ''வாலியோ இன்னோவேஷன் சேலஞ்ச்'' (Valeo Innovation Challenge) என்ற போட்டியை நடத்துகிறது.

உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...

இதற்கு இந்தியாவில் இருந்து வெறும் 2 ப்ராஜெக்ட்கள் மட்டுமே தேர்வாகியுள்ளன. இதில், சென்னை கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது.

உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...

சென்சார், மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் மேற்கூரையை திறக்கும் மெக்கானிசம் ஆகியவைதான் அவை. இதன்படி தண்ணீரின் அழுத்தத்தை கண்டறியும் 6 சென்சார்கள் காரில் பொருத்தப்படும். இதில், 4 சென்சார்கள் மூலையிலும், 2 சென்சார்கள் பக்கவாட்டிலும் பயன்படுத்தப்படும்.

உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...

எனவே கார் தண்ணீரில் மூழ்க தொடங்கினால், மைக்ரோ கண்ட்ரோலருக்கு இந்த சென்சார்கள் சிக்னலை தூண்டிவிடும். இதன் மூலமாக காரின் மேற்கூரை தானாகவே திறந்து கொள்ளும். எனவே உள்ளே இருப்பவர்கள் எளிதாக வெளியேறி விடலாம்.

உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...

மாருதி சுஸுகி 800 காரில் இந்த தொழில்நுட்பம் சமீபத்தில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தை புதிய மாடல் கார்களில் பயன்படுத்த முடியும். அதே சமயம் தற்போது உள்ள கார்களிலும் கூட இந்த தொழில்நுட்பத்தை இன்ஸ்டால் செய்யலாம். தற்போது உள்ள கார்களில் இந்த தொழில்நுட்பத்தை புகுத்த 15 ஆயிரம் மட்டுமே செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு ஒரு சில மாடிபிகேஷன்களை செய்ய வேண்டும். ஆனால் இந்த மாடிபிகேஷன்கள் காரணமான காரின் வெளிப்புற தோற்றத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

அதேபோல் ஏரோடைனமிக்ஸிலும் எவ்வித பாதிப்பும் உண்டாகாது. இந்த சென்சார்கள் மிகவும் வலுவானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை கார் தண்ணீரில் தலைகீழாக கவிழ்ந்தாலும் கூட சென்சார்களுக்கு எந்தவிதமான சேதாரமும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: ANI

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Army Develops System To Check Drunk Driving. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X