ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

உயிரை பணயம் வைத்து சேவை செய்து வரும் காவல் துறையை, இந்திய ராணுவம் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

உண்மையான ஹீரோக்களை நமது நாடு இக்கட்டான சூழல்களில் அடையாளம் கண்டு கொள்கிறது. இரவு, பகல் பாராமல், கடும் குளிர், சுட்டெரிக்கும் வெயில் என்று பாராமல், நமது தேசத்தை காத்து வரும் ராணுவ வீரர்கள் நமக்கு என்றைக்குமே ஹீரோக்கள்தான். இந்த வரிசையில் கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி, மருத்துவர்களும் தெய்வங்களே என்பதை நமக்கு உணர்த்தியுள்ளது.

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

டாக்டர்கள் மட்டுமல்லாது, நுண்ணுயிரியல் துறை வல்லுனர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் என மருத்துவ துறை சார்ந்த ஒவ்வொருவரும், மக்களுக்கு இன்று ஹீரோவாக இல்லை... இல்லை... கடவுளாகவே தெரிகின்றனர். அதேபோல் துப்புரவு பணியாளர்களின் சேவையும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவர்களை நமது அரசாங்கம் தொடர்ந்து கௌரவித்து வருகிறது.

MOST READ: இல்லாட்டி கதை கந்தல்தான்... பருவ மழை காலத்தில் வண்டிக்கு தனி கவனிப்பு அவசியம்... என்னனு தெரியுமா?

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

கைகளை தட்டியும், விளக்கு ஏற்றியும் அவர்களை உற்சாகப்படுத்தியதுடன், ராணுவ ஹெலிகாப்டர்களில் பூ தூவி அவர்களின் சேவையை போற்றியது மத்திய அரசு. ஆனால் மற்றொரு துறையும் நமக்காக இரவு, பகல் பாராமல், களைப்பின்றி பணியாற்றி கொண்டிருக்கிறது. நம்மில் பெரும்பாலானோரால் எப்போதும் அவமரியாதைக்கு உள்ளாகி வரும் காவல் துறைதான் அது.

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

இன்றைய சூழலில் காவலர்களின் சேவை தன்னிகரில்லாதது. போலீசார் தங்கள் உயிரை பணயம் வைத்து முன்களத்தில் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு விதிகளை முறையாக அமல்படுத்தியதில் காவல் துறையின் பங்கு உண்மையிலேயே அளப்பரியது. நம்மை வீடுகளுக்குள்ளேயே இருக்க வைப்பதற்கு, அவர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து வீதியில் சாலையில் இறங்கினர்.

MOST READ: நம்பவே முடியல... சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிசய சம்பவம்... என்னனு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பற்றிய அச்சமும், விழிப்புணர்வும் கொஞ்சம் கூட இல்லாமல், வாகன ஓட்டிகள் பலர் தேவையே இல்லாமல் ஜாலியாக வலம் வர தொடங்கினர். ஊரடங்கை விடுமுறை காலம் என்று அவர்கள் கருதி விட்டார்கள் போல.

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

எனவே காவல் துறை தனது பாணியில் அவர்களுக்கு பாடம் நடத்தியது. கண்ணில் பட்ட வாகன ஓட்டிகளை எல்லாம் லத்தியால் வெளுத்து வாங்கினர். இந்த நடவடிக்கை விமர்சனத்திற்கு உட்பட்டது என்றாலும், சில அதிரடி நடவடிக்கைகள் தேவைப்பட்டன என்பதை மறுக்க முடியாது. எனினும் கடும் விமர்சனங்கள் காரணமாக தாக்குதல் போக்கை காவல் துறை கைவிட்டது.

MOST READ: இவரை போன்ற தொழிலதிபர் இருப்பது இந்தியாவிற்கே பெருமை... பிரம்மிக்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

அதற்கு பதிலாக தேவை இல்லாமல் சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய தொடங்கியது காவல் துறை. தமிழகத்தில் மட்டும் தற்போது வரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இதேபோல் பல லட்சக்கணக்கான வாகனங்களை காவல் துறை அதிரடியாக தூக்கியுள்ளது.

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

இதுதவிர வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களுக்கு அபராதம், வாகன ஓட்டிகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது என காவல் துறை இடைவிடாமல் பணியாற்றி வருகிறது. காவல் துறையின் இப்படிப்பட்ட தன்னலமற்ற சேவையை தற்போது இந்திய ராணுவம் போற்றியுள்ளது. அது தொடர்பான வீடியோவும் வெளியாகி நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

MOST READ: 5 நிமிடத்தில் சாகும் கொரோனா... ஒரு பைசா செலவில்லாமல் காரில் வைரசை அழிக்க புது வழி!

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலத்தில், காவல் துறையினர் இரண்டு பேர் சமீபத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு ராணுவ வாகனங்கள் வந்து நின்றன. இதில், டாடா சபாரி ஸ்ட்ரோம் காரில் அமர்ந்திருந்த ராணுவ அதிகாரி ஒருவர், காவல் துறையினர் இருவரையும் அழைத்தார். அவர் வந்த டாடா சபாரி ஸ்ட்ரோம்தான், தற்போது இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ வாகனம் ஆகும்.

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

எஸ்யூவி ரக காரான டாடா சபாரி ஸ்ட்ரோம், மாருதி சுஸுகி ஜிப்ஸியின் இடத்தை தற்போது பிடித்துள்ளது. இந்திய ராணுவத்திற்கும், மாருதி சுஸுகி ஜிப்ஸிக்கும் இருந்த பந்தம் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்திய ராணுவம் மிக நீண்ட காலமாக மாருதி சுஸுகி ஜிப்ஸியைதான் பயன்படுத்தி வந்தது. அதன் அட்டகாசமான ஆஃப் ரோடு திறன்களே அதற்கு காரணம்.

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

ஆனால் ஒரு சில காரணங்களால், இந்திய ராணுவம் தற்போது டாடா சபாரி ஸ்ட்ரோம் காருக்கு மாறியுள்ளது. சபாரி ஸ்ட்ரோம் கார்களை தயாரித்து வழங்குவதற்கு இந்திய ராணுவம் கொடுத்த ஆர்டரை டாடா பெற்று, கார்களை கனகச்சிதமாக டெலிவரி செய்துள்ளது. ஆனால் டாடா சபாரி ஸ்ட்ரோம் வந்து விட்டாலும் கூட, இந்திய ராணுவம் இன்னமும் ஜிப்ஸிகளை பயன்படுத்தவே செய்கிறது.

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

ராணுவ அதிகாரி அமர்ந்திருந்த டாடா சபாரி ஸ்ட்ரோம் காருக்கு பின்னால், ஜிப்ஸியும் கம்பீரமாக நிற்பதை நம்மால் காண முடிகிறது. இந்த சூழலில், ராணுவ அதிகாரி அழைத்ததும் காவல் துறையினர் இருவரும் வந்தனர். அவர்களிடம் அவர் பேசியதில், ஒருவர் காவல் துறையை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் ஹோம்கார்டு என்பதும் தெரியவந்தது.

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

இதன்பின்னர் சூழ்நிலையை காவல் துறை கையாளும் விதத்தை பார்த்தும், அவர்களின் பணியை கண்டும், ராணுவம் பெருமைப்படுவதாக அந்த அதிகாரி கூறினார். அத்துடன் ஊரடங்கின்போது காவல் துறையின் பணிகளை பார்த்து ஒட்டுமொத்த தேசம் மகிழ்ச்சியடைவதாகவும் அந்த ராணுவ அதிகாரி தெரிவித்தார். இதனால் காவலர்கள் பெருமிதமடைந்தனர்.

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

அதன்பின் காவல் துறையினரின் பணிகளை பாராட்டி அவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கும்படி, அங்கிருந்த சக ராணுவ வீரருக்கு அந்த அதிகாரி உத்தரவிட்டார். அதே சமயம் போலீஸ் ஸ்டேஷன் பெரிது என்பதாலும், நிறைய காவலர்கள் இருப்பார்கள் என்பதாலும், எக்ஸ்ட்ரா ஸ்வீட் பாக்ஸ்களை வழங்கும்படியும் அவர் கூறினார்.

ஜெய்ஹிந்த்... காவல் துறையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த இந்திய ராணுவம்... என்னனு தெரியுமா?

இதில், சிறப்பம்சம் என்னவென்றால், இந்த இனிப்புகளை காவல் துறையினருக்காக தயாரித்தது இந்திய ராணுவ வீரர்கள்தான். இதனை அந்த அதிகாரி கூறினார். மேலும் காவல் துறையின் பணிகளுக்கு நன்றி கூறுவதற்காக, உள்ளூரில் உள்ள அனைத்து போலீஸ் செக் போஸ்ட்கள் மற்றும் ஸ்டேஷன்களுக்கும் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

போலீசாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அந்த ராணுவ அதிகாரி, ஜெய்ஹிந்த் எனக்கூறி விட்டு அவர்களிடமிருந்து விடைபெறுகிறார். ஆனால் இந்த நிகழ்வு எங்கு நடந்தது? என்பது உறுதியாக தெரியவில்லை. சீருடையை வைத்து பார்க்கையில், அவர்கள் ராஜஸ்தான் காவல் துறையை சேர்ந்தவர்கள் போல தெரிகிறது. இதன் காரணமாக இந்த நிகழ்வு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Army Officer In Tata Safari Storme Stops SUV: Distributes Sweets To Police Officers On COVID Duty - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X