Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வைரலாகும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் போட்டோ! கொஞ்சம் உத்து பாருங்க... விழுந்து விழுந்து சிரிப்பீங்க
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்தியாவில் கார் திருட்டு சம்பவங்கள் மிகவும் அதிக அளவில் நடக்கின்றன. குறிப்பாக பெரு நகரங்களில்தான் அதிக அளவிலான கார் திருட்டு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. கார்கள் திருடப்படுவதை தடுப்பதற்காக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன.

ஆனால் அதையும் மீறி ஒரு சில ஹைடெக் கொள்ளையர்கள், கார்களை சுலபமாக திருடி சென்று விடுகின்றனர். எனவே கார் உரிமையாளர்களும் தங்கள் பங்கிற்கு, வாகனங்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர். கார் திருட்டை தடுப்பதற்கு பெரும்பாலானோர் அதிநவீன தொழில்நுட்பங்களைதான் நம்புகின்றனர்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஆனால் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் ஒருவர், அந்த காலத்து டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளார். ஆம், அவர் தனது காரை ஒரு மரத்தில் சங்கிலி மூலம் கட்டி வைத்துள்ளார். மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்திற்கு இந்த புகைப்படம் சென்றது. உடனடியாக அவர் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து விட்டார்.

இதுபோன்ற வித்தியாசமான புகைப்படங்கள், காணொளிகளை ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் பகிர்வது இது முதல் முறை கிடையாது. அவர் டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். வித்தியாசமான செய்திகள் பலவற்றை அவர் டிவிட்டர் மூலம் மக்களுக்கு கூறி கொண்டுள்ளார். அந்த வகையில்தான் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை மரத்தில் கட்டி வைத்திருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்தார்.

''இது அதிநவீன தொழில்நுட்பம் கிடையாது. இருந்தாலும் இந்த காரை யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது என்ற உரிமையாளரின் பொஸஸிவ்னெஸ்ஸை இது காட்டுகிறது. என்னை பொறுத்தவரை, ஊரடங்கில் நான் எப்படி உணர்ந்தேன் என்பதை இந்த புகைப்படம் மிக சரியாக விவரிக்கிறது'' என இந்த புகைப்படத்துடன் ஆனந்த் மஹிந்திரா கருத்து பதிவிட்டுள்ளார்.

அத்துடன், ''இந்த வார இறுதியில் அந்த சங்கிலியை அறுக்க நான் முயற்சிக்க போகிறேன் (முக கவசம் அணிந்து கொண்டு)'' என ஆனந்த் மஹிந்திரா நகைச்சுவையாகவும் பதிவிட்டுள்ளார். டிவிட்டரில் ஆனந்த் மஹிந்திராவை பல லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். அவர்களில் பலர் தற்போது இந்த புகைப்படத்தை ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் ஆனந்த் மஹிந்திரா சங்கிலியை அறுக்க முயற்சி செய்யப்போவதாக வேடிக்கையாக கூறியதற்கு, அவரை பின் தொடர்பவர்களில் சிலர், ஸ்கார்பியோ காரை பின்னால் எடுத்தால் அது தானாகவே சங்கிலியை அறுக்கும் என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளனர். அதே சமயம் இன்னும் சிலர், வாகன திருட்டை தடுக்க அதிநவீன தொழில்நுட்பங்கள் அவசியம் என கூறியுள்ளனர்.

எது எப்படியோ இந்தியாவில் கார் திருட்டு சம்பவங்கள் எந்த அளவிற்கு அதிகமாக உள்ளது? என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த புகைப்படம் அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. எனவே ஆனந்த் மஹிந்திராவை பின் தொடர்பவர்களில் சிலர் கூறியபடி, வாகன திருட்டு சம்பவங்களை தடுக்க, வாகன உற்பத்தி நிறுவனங்கள் இன்னும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும்.