பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியத்தால், இந்திய மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக நம் இந்தியா உள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதற்கு வாகனங்களை அதிவேகத்தில் இயக்குவதுதான் முக்கியமான காரணமாக உள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

போதாக்குறைக்கு தற்போது லாக்டவுன் அமலில் இருப்பதால், வாகனங்களை பலர் அதிக வேகத்தில் இயக்கி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் முன்பு போல போக்குவரத்து இல்லை.

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

சாலைகள் வெறிச்சோடி கிடப்பதால், அதை பயன்படுத்தி கொண்டு ஒரு சிலர் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். அப்படி அதிவேகத்தில் பறந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தற்போது சாலை விபத்தில் சிக்கியுள்ளார். இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்று தந்ததில் இவரின் பங்களிப்பு முக்கியமானது. அப்படி இருக்கையில் நடைபெற்றுள்ள இந்த விபத்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

27 வயதாகும் இளம் கிரிக்கெட் வீரரான ஆகாஷ்தீப் நாத்தான் (Akashdeep Nath) அதிவேகத்தில் காரை ஓட்டி விபத்தில் சிக்கியுள்ளார். இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தர பிரதேச அணிக்காக அவர் விளையாடி வருகிறார். உத்தர பிரதேச தலைநகரான லக்னோவில்தான் ஆகாஷ்தீப் நாத் பிறந்தார். ஆகாஷ்தீப் நாத் இதற்கு முன்பு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) இந்திய அணியில் விளையாடியுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த ஐசிசி யு-19 உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அப்போதைய இந்திய அணியின் துணை கேப்டனாக ஆகாஷ்தீப் நாத்தான் இருந்தார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகளில் இவர் இடம்பெற்றுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

இப்படிப்பட்ட சூழலில் லாக்டவுன் சமயத்தில் அவர் விபத்தில் சிக்கி கொண்டுள்ளார். ஃபோர்டு மஸ்டாங் ஜிடி (Ford Mustang GT) காரை மேம்பாலத்தின் மீது அதிவேகத்தில் ஓட்டி சென்றபோது, அவர் கட்டுப்பாட்டை இழந்தார். இதன் காரணமாக கார் விபத்தில் சிக்கியது. மேம்பாலம் காலியாக இருந்ததால், அவர் அதிவேகத்தில் பறந்ததாக கூறப்படுகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

கடந்த வெள்ளிக்கிழமை (மே 29ம் தேதி) இரவு இந்த விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் இருக்கும் குக்ரெயில் மேம்பாலத்தில் (Kukrail Flyover) இந்த விபத்து அரங்கேறியுள்ளது. மிக நீண்ட தாமதத்திற்கு பின் கடந்த ஆண்டுதான் இந்த ஃப்ளைஓவர் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

இந்த ஃப்ளைஓவர் சுமார் 5.8 கிலோ மீட்டர் நீளமுடையது. அத்துடன் வேகத்தடைகளும் இருக்காது. இதனால் இளைஞர்கள் பலர் இந்த ஃப்ளைஓவரில் வாகனங்களை இயக்குவதற்கு அதிகம் ஆசைப்படுகின்றனர். போதாக்குறைக்கு தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், குக்ரெயில் ஃப்ளைஓவரில் வாகன போக்குவரத்தும் பெரிதாக இல்லை.

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

விபத்து நடைபெற்றபோது ஆகாஷ்தீப் நாத்தான் காரை ஓட்டி சென்றுள்ளார். அவர் என்ன வேகத்தில் பயணம் செய்தார்? என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் விபத்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்து பார்க்கையில், அவர் அதிவேகத்தில் பயணித்திருப்பது போல் தெரிகிறது. முதலில் மாருதி 800 கார் ஒன்றின் மீது, ஆகாஷ்தீப் நாத்தின் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி மோதியுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

அதன்பின்னர் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ஒன்றின் மீது ஃபோர்டு மஸ்டாங் ஜிடி கார் மோதியுள்ளது. இதன் பின்னரே அந்த கார் நின்றது. அங்கிருந்த டிவைடர் மீதும் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி மோதியிருக்கிறது. எனவே ஃபோர்டு மஸ்டாங் ஜிடி பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. அந்த காரின் ஏர்பேக் விரிவடைந்திருப்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

இந்த விபத்து நடைபெற்றபோது, ஃபோர்டு மஸ்டாங் ஜிடி காரில் மொத்தம் 5 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விபத்து காரணமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. சிறு சிறு காயங்கள் மட்டும்தான் ஏற்பட்டுள்ளது. அதற்கும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அவர்கள் சிகிச்சை பெற்று கொண்டனர். இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் தற்போது நலமாக உள்ளனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா?

ஃபோர்டு மஸ்டாங் ஜிடி காரை, ஆகாஷ்தீப் நாத் கடந்த ஆண்டுதான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கார் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் பவர்ஃபுல்லான கார். நீங்கள் இந்த காரை கவனத்துடன் ஓட்டாவிட்டால், கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடிய அளவிற்கு பவர்ஃபுல்லானது.

ஃபோர்டு மஸ்டாங் ஜிடி காரில், 5.0 லிட்டர், வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 396 பிஎச்பி பவரையும், 515 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லகூடியது. இவ்வளவு செயல்திறன் மிக்க காரை முறையாக ஓட்டாவிட்டால், அது ஆபத்தில் முடிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

காரை ஓட்டுவதற்கு முன்பு ஒருவர் அதன் பவர் என்ன? என்பதை தெரிந்து கொள்வது அவசியமானது. மேலும் ஸ்பீடு லிமிட்களை பின்பற்றுவதும் அவசியம். இல்லாவிட்டால் கார் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடும். எனவே சாலை விபத்துக்களை நீங்கள் தவிர்க்க விரும்பினால், அளவான வேகத்தில் வாகனங்களை இயக்குங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Cricket Player Akshdeep Nath’s Ford Mustang GT Loses Control: Hits Two Cars On Kukrail Flyover - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more