யாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சூப்பரான டிராக்டர் ஒன்றை தல டோனி விலைக்கு வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஹேந்திர சிங் தோனி, கிரிக்கெட்டிற்கு நிகராக வாகனங்களை அதிகம் நேசிக்க கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். மிகவும் அரிதான மற்றும் கவர்ச்சிகரமான மோட்டார்சைக்கிள்கள் பலவற்றை டோனி சேகரித்து வைத்துள்ளார். இதில், யமஹா ஆர்டி350, யமஹா ஆர்எக்ஸ்100, கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்12ஆர் ஆகியவை முக்கியமானவை.

யாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இதுதவிர கவாஸாகி ஹெச்2ஆர், கான்ஃபெடரேட் ஹெல்கேட் ஆகியவையும் தல டோனியிடம் இருக்கின்றன. மோட்டார்சைக்கிள்கள் மட்டுமல்லாது, கவர்ச்சிகரமான கார்களையும் டோனி வைத்துள்ளார். சாலைகளில் அடிக்கடி வாகனங்களில் உலா வருவது டோனியின் வழக்கம். அப்படி டோனி பொது சாலைகளில் வாகனங்களை ஓட்டி வந்த வீடியோக்கள் பலவும் இணையத்தில் உள்ளன.

யாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

தற்போது லாக்டவுன் நாட்களை தனது வாகனங்களுடன் டோனி உற்சாகமாக செலவிட்டு வருகிறார். அதனை அவரது மனைவி சாக்ஸி தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசிய சாக்ஸி, பைக்குகளுடன்தான் டோனி அவரது பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வருவதாக கூறியிருந்தார். பைக்குகளை தனித்தனி பாகங்களாக கழற்றி, அவற்றை மீண்டும் அசெம்பிள் செய்வது டோனியின் பொழுதுபோக்குகளில் ஒன்று.

யாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இப்படி கிரிக்கெட் தவிர, வாகனங்கள் தொடர்பான செய்திகளிலும் டோனியின் பெயர் அடிக்கடி இடம்பெறும். இந்த வகையில் டோனி சமீபத்தில் புதிதாக வாங்கியுள்ள ஒரு விவசாய வாகனம் பற்றிய தகவல்களைதான் நாம் இன்று பார்க்க போகிறோம். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், ஸ்வராஜ் 963 (Swaraj 963) டிராக்டரை டோனி சாலையில் ஓட்டி வரும் வீடியோ ஒன்று வெளியானது.

யாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

அந்த டிராக்டரை தல டோனி வாங்கியிருக்கும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. தனது பண்ணை வீட்டில் இயற்கை முறையிலான விவசாயத்திற்கு அந்த டிராக்டரை டோனி பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், ஸ்வராஜ் விற்பனை பிரதிநிதியிடம் டோனி பேசி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

யாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

அத்துடன் அவர் தானாகவே நிலத்தை உழுவதையும் அந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. தல டோனி தற்போது வாங்கியிருப்பதுதான், ஸ்வராஜ் நிறுவனம் விற்பனை செய்வதிலேயே மிகவும் விலை உயர்ந்த மாடல் என கூறப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்வதிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மாடலும் இதுதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

963 எஃப்இ (963 FE) மாடலான இது, 12 ஸ்பீடு ஃபார்வார்டு கியர்களையும், 2 ஸ்பீடு ரிவர்ஸ் கியர்களையும் வழங்குகிறது. அத்துடன் 4X4 சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் உழும்போது, சேறு, சகதியில் சிக்கி கொள்ளாமல் இருப்பதை இது உறுதி செய்கிறது. ஸ்வராஜ் 963 எஃப்இ டிராக்டரில், சக்திவாய்ந்த 3.5 லிட்டர், 3-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

யாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 63 பிஎஸ் பவரை உருவாக்க கூடியது. டோனியின் புதிய டிராக்டர் குறித்தும், அவர் விவசாய நிலத்தை உழும் பணிகளில் ஈடுபடுவது தொடர்பாகவும் டெக்னோ விமல் யூ-டியூப்பில் வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

மஹேந்திர சிங் டோனி ஸ்டைலான பைக்குகளில், சென்னை மற்றும் ராஞ்சி உள்பட இந்தியாவின் பல்வேறு ஊர்களின் சாலைகளில் வலம் வந்த வீடியோக்கள் பலவற்றை நாம் பார்த்துள்ளோம். இனி அவர் விவசாய நிலத்தில், டிராக்டர் மூலமாக உழவு பணிகளில் ஈடுபடும் வீடியோக்களையும், அவ்வப்போது எதிர்பார்க்கலாம் போல தெரிகிறது.

யாருமே எதிர்பாக்காத ஒன்னு... சூப்பரான டிராக்டரை விலைக்கு வாங்கிய தல டோனி... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இதுவரை கிரிக்கெட் களத்தில் மாஸ் காட்டி வந்த தல டோனி, இனி விவசாயத்தையும் ஒரு கை பார்க்கலாம். டோனி விவசாய பணிகளில் ஈடுபடுவார் என்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. எனவே இதையும் அவரது ரசிகர்கள் தற்போது கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Cricketer Dhoni Buys Swaraj Tractor. Read in Tamil
Story first published: Tuesday, July 7, 2020, 20:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X