சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?

20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய காரை தல டோனி வாங்கியுள்ளார். அது ஏன்? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் மஹேந்திர சிங் டோனி. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது டோனியின் ஓய்வு குறித்தும், அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் விவாதித்து வருகின்றனர். ஆனால் தல டோனி வழக்கம் போல் எதையும் அலட்டி கொள்ளாமல் தனக்கே உரிய பாணியில் மிகவும் கூலாக இருந்து வருகிறார்.

சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?

ராணுவ சேவை மற்றும் கார் பயணங்கள் ஆகியவற்றில் டோனி தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். கிரிக்கெட்டை தவிர டோனி அதிகம் நேசிக்கும் இரண்டு விஷயங்கள் இவைதான். குறிப்பாக கார்கள் மற்றும் பைக்குகள் மீது டோனிக்கு உள்ள காதலை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. மிகவும் விலை உயர்ந்த மற்றும் அரிதான பல கார், பைக்குகள் அவரது வீட்டில் உள்ளன.

சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?

டோனியின் பைக் கலெக்ஸன் என எடுத்து கொண்டால், கான்ஃபெடரேட் ஹெல்கேட் எக்ஸ்132, கவாஸாகி எச்2, டுகாட்டி 1098, கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்14ஆர், ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய், பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை டோனி வைத்துள்ளார். மேலும் யமஹா ஆர்எக்ஸ்100 மற்றும் ஆர்டி350 உள்ளிட்ட பைக்குகளும் டோனியிடம் உள்ளன.

சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?

இதில், யமஹா ஆர்எக்ஸ்100 மற்றும் ஆர்டி350 ஆகியவை டோனியின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. தல டோனியின் பைக் கலெக்ஸனை போலவே, அவரது கார் கலெக்ஸனும் மிகவும் பெரியதுதான். ஹம்மர் எச்2, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ, லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2, ஆடி க்யூ7 உள்ளிட்ட பல்வேறு கார்களை தல டோனி வைத்துள்ளார்.

சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?

இதுதவிர டோனி சமீபத்தில் ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் (Jeep Grand Cherokee Trackhawk) கார் ஒன்றையும் புதிதாக வாங்கியுள்ளார். இதன் விலை 1.60 கோடி ரூபாய் என தகவல்கள் கூறப்படுகிறது. இந்த காரில், 6.2 லிட்டர் ஹெல்கேட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 707 பிஎச்பி பவரையும், 875 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?

இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு கார் ஒன்றை டோனி தற்போது வாங்கியுள்ளார். நிஸான் ஜோங்கா 1 டன் (Nissan Jonga 1 Ton) கார்தான் டோனி வீட்டின் தற்போதைய புது வரவு. இது ஒரு காலத்தில் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இந்த வாகனத்தை இந்திய ராணுவம் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தது.

MOST READ: 2.50 கோடி ரூபாய் காரை அசால்டாக தட்டி தூக்கிய போலீசார்... அதிர்ந்து போன உரிமையாளர்... ஏன் தெரியுமா?

சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?

அதன்பின் சேவையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. தற்போது நாட்டையும், ராணுவத்தையும் நேசிக்கும் டோனியின் கைகளுக்கு அது வந்து சேர்ந்துள்ளது. டோனி புதிதாக வாங்கியுள்ள இந்த வாகனத்தின் வயது 20 ஆண்டுகள் எனவும், அவர் இதனை பஞ்சாபில் இருந்து வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த கார் கடந்த 1999ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

MOST READ: 2 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பெற்ற நடிகை ஸ்ரீதேவி மகள்... விலையை விடுங்க... இந்த கனெக்ஸன்தான் ஹைலைட்

சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?

டோனி வாங்கியுள்ள நிஸான் ஜோங்கா கார், பிரகாசமான பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்துடன் ராஞ்சி நகர வீதிகளையும் டோனி வலம் வந்துள்ளார். குறிப்பாக ராஞ்சியில் தனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு தல டோனி வந்தபோது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ஆனால் அவர்களை டோனி ஏமாற்றவில்லை.

MOST READ: அடேங்கப்பா... 2,400 கிமீ ரேஞ்ச்... எலெக்ட்ரிக் கார்களுக்கான ஃப்யூவல் செல்லை உருவாக்கிய எஞ்சினியர்!

சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?

அவர்களுக்கு ஆட்டோகிராப்களை வழங்கியதுடன், செல்பி புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்துள்ளார். இந்த வாகனம் மிகவும் பிரம்மாண்டமானது என்பதால், ரசிகர்கள் நிச்சயமாக வியந்து போயிருப்பார்கள். அத்துடன் இது ராணுவ வாகனம் என்பதால், இந்திய சாலைகளில் நிஸான் ஜோங்கா பிரம்மாண்ட காரை அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது.

சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?

இதுவும் கூட ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்திருக்கும். இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பதால்தான் டோனி இந்த காரை வாங்கியிருப்பதாக தெரிகிறது. அத்துடன் அவர் அரிதான கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ராணுவம் மற்றும் கார்களை டோனி எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Cricketer MS Dhoni Buys Nissan Jonga Military Vehicle. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X