உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இந்திய இன்ஜினியர் ஒருவர் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அப்படி அவர் என்ன செய்தார்? என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவதுடன் மட்டுமல்லாது பெருமையும் அடைவீர்கள் என்பது உறுதி.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

உலகின் பல்வேறு நகரங்களும் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டுள்ளன. குறிப்பாக இந்திய நகரங்களின் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். உலகில் காற்று அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் பெரும்பாலான நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. தலைநகர் டெல்லி இதற்கு உதாரணம்.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையை சமாளிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காற்று மாசுபாட்டிற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வாகனங்கள்தான் அதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. வாகனங்கள் வெளியிடும் புகையால்தான் காற்று அதிகம் மாசடைகிறது.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

உடல் நலம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை காற்று மாசுபாடு உண்டாக்குகிறது. மறதி என்ற பிரச்னையை காற்று மாசுபாடு வேகப்படுத்துவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் மூளையின் வயதையும் அவை 10 வயது அதிகரித்து விடுவதாக ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது 50 வயது மட்டுமே நிரம்பிய ஒருவர் 60 வயது ஆனதை போல் நடந்து கொள்வார்.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இவ்வாறு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் டிவைஸ் ஒன்றை, கரக்பூர் ஐஐடி-யில் படித்த இன்ஜினியர் ஒருவர் தற்போது கண்டறிந்துள்ளார். வாகனங்களின் எக்ஸாஸ்ட்டில் இந்த டிவைஸை பொருத்தி கொள்ள முடியும். இந்த டிவைஸ் காற்று மாசுபாட்டை குறைக்கும். எனவே இந்த டிவைஸ் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

சாலைகளில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த டிவைஸை கரக்பூர் ஐஐடி பட்டதாரி கண்டறிந்துள்ளார். அவரது பெயர் தீபயன் சஹா. வாகனத்தின் எக்ஸாஸ்ட் உடன் அட்டாச் செய்து கொள்ளும் வகையில் இந்த டிவைஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸின் சிறப்பம்சம் உண்மையில் ஆச்சரியப்படுத்துகிறது.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

ஒரு காரில் இந்த டிவைஸை பொருத்தி கொண்டால், அதன் அருகில் உள்ள 10 கார்கள் வெளியேற்றும் மாசுபாட்டை இது நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த டிவைஸ் ஒரு காந்தம் போல் செயல்பட்டு, காற்று மாசுபாட்டை குறைக்கும். மின்சார ஆற்றல் மற்றும் ஆலை ஆற்றலின் கலவையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இந்த அரிய தயாரிப்பை வணிகமயமாக்க தேவையான முயற்சிகளில் தீபயன் சஹா தற்போது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா போன்ற காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளுக்கு இதுபோன்ற தயாரிப்புகள் மிகவும் அவசியம்.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

அப்படி ஒரு டிவைஸை கண்டறிந்த தீபயன் சஹாவிற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இதை வணிகயமாக்க அரசு உதவ வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இதற்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலை வெகுவாக மாசுபடுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இதற்காக ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்பட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதேபோல் இதுபோன்ற டிவைஸ்களை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் மத்திய அரசு செய்தால் நன்றாக இருக்கும். இது தொடர்பான உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Source: Indiatimes

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Engineer Builds Device For Vehicle Exhaust To Reduce Air Pollution. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X