சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

சீனாவின் செங்குடு ஜே-20 போர் விமானத்தை இந்தியாவின் சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானம் கண்டறியும் வல்லமையை பெற்றிருப்பது அண்மையில் தெரிய வந்துள்ளது. திபெத் பகுதியில் சீனாவின் புதிய செங்குடு ஜே-20 போர்

ரேடார் கண்களில் சிக்காத அம்சங்கள் கொண்ட போர் விமானத்தை ஸ்டீல்த் ரக விமானம் என்றும் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் என்றும் குறிப்பிடப்படுகிறது. உலகின் அதிநவீன ரகமாக கருதப்படும் இந்த வகை போர் விமானங்களை அமெரிக்கா மட்டுமே வைத்திருக்கிறது.

சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

இந்த சூழலில், கடந்த ஆண்டு சீனாவும் ஸ்டீல்த் ரக போர் விமானத்தை தயாரித்து விட்டதாக அறிவித்தது. செங்க்டு ஜே-20 என்ற பெயரிலான இந்த விமானத்தை சீன மீடியாக்கள் புகழ்ந்து தள்ளின. அண்டை நாடான இந்தியாவுக்கு இது அச்சுறுத்தலான விஷயமாக குறிப்பால் உணர்த்தின. மேலும், சீனாவின் கூட்டாளியான பாகிஸ்தானுக்கும் இது நல்ல செய்தியாக மனதுக்குள் கொண்டாடியது.

சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

இந்த நிலையில், சீனாவின் செங்குடு ஜே-20 போர் விமானத்தை இந்தியாவின் சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானம் கண்டறியும் வல்லமையை பெற்றிருப்பது அண்மையில் தெரிய வந்துள்ளது. பதட்டம் மிகுந்த இந்திய- சீன எல்லைப் பகுதிகளில் சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானம் வழக்கமான கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

அப்போது, திபெத் பகுதியில் சீனாவின் புதிய செங்குடு ஜே-20 போர் விமானங்கள் பறந்ததை சுகோய் எஸ்யூ-30 போர் விமானங்கள் கண்டறிந்துள்ளன. இதுகுறித்து விமானப் படை தலைமை தளபதி பீரேந்தர் சிங் கூறுகையில்," சீனாவின் ஜே-20 போர் விமானங்களை வெகு தூரத்தில் இருந்த சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானங்கள் கண்டறியும் திறனை பெற்றிருக்கின்றன.

சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

ஜே-20 போர் விமானத்தை கண்டறிவது மட்டுமின்றி, அந்த விமானங்கள் எந்த திசையில் செல்கின்றன என்பதையும் துல்லியமாக கண்காணிக்கும் திறனையும் சுகோய் எஸ்யூ-30 போர் விமானத்திற்கு உண்டு," என்று அவர் கூறி இருக்கிறார்.

சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

அண்மையில் சுகோய் எஸ்யூ-30 போர் விமானங்களில் ரேடார் கருவி மேம்படுத்தப்பட்டது. இதன்மூலமாக, சீனாவின் ஜே-20 போர் விமானத்தை எளிதாக கண்டறியவும், கண்காணிக்கவும் முடிந்தததாகவும் விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

இதுதவிர, இந்திய விமானப் படையின் சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானங்களில் ரஷ்யாவின் அதிநவீன AESA என்ற ரேடார் கருவியை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, ஒரே நேரத்தில் 30 இலக்குகளை கண்டறிந்து கண்காணிக்க முடியும் என்பதுடன், 6 இலக்குகள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த முடியும்.

சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

ஸ்டீல்த் ரக போர் விமானத்தை தயாரித்து விட்டதாக சீனா தம்பட்டம் அடித்து வருகிறது. உலகிலேயே இரண்டாவது நாடாகவும் பெருமை அடித்து வருகிறது. இந்த சூழலில், ஜே-20 விமானம் இந்திய போர் விமானத்தின் ரேடார் கண்களில் சிக்கி இருப்பதால், அதன் ஸ்டீல்த் ரக திறன் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

அமெரிக்காவின் எஃப்-22 ராப்டர் மற்றும் எஃப்-35 ஆகிய ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை காப்பியடித்தே ஜே-20 ஸ்டீல்த் ரக விமானத்தை சீனா உருவாக்கி இருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

மேலும், ஐரோப்பிய பாதுகாப்பு வல்லுனர்கள் சீனாவின் ஜே-20 போர் விமானத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஜே-20 போர் விமானம் நடுத்தர மற்றும் நீண்ட தூரம் பறந்து தாக்கும் திறன் கொண்ட நான்காம் தலைமுறை போர் விமானமாகவே கருத்து தெரிவித்தனர். அவர்கள் கூற்றுப்படி, இந்திய போர் விமானத்தின் ரேடாரில் சீனாவின் ஜே-20 அகப்பட்டு இருப்பது, அதன் சாயத்தை வெளுத்துள்ளது.

சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

இதுதவிர்த்து, ஜே-20 போர் விமானத்தை இந்தியாவிற்கு எதிராக சீனா பிரயோகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளன. ஏனெனில், அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஜே-20 போர் விமானத்தை இந்திய போர் விமானங்கள் கண்டறியும் என்பதால், அதனை எளிதாக தாக்கி அழித்துவிடும்.

சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

அதுமட்டுமல்ல, இந்தியாவிற்கு எதிரான சீன விமானப் படை தளங்கள் அனைத்தும் அதிக உயரத்தில் இருக்கின்றன. அதுபோன்று, அதிக உயரத்தில் இருக்கும் விமானப் படை தளங்களில் இருந்து இயக்கும்போது பல்வேறு நடைமுறை சிக்கல்களை சீனா சந்திக்கும்.

சீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்!!

எரிபொருள் சப்ளை பெறுவதில் இருந்து ஆயுதங்களை பெற்று பொருத்துவது வரை அனைத்துமே சீனாவிற்கு சவாலானதாக இருக்கும் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Indian Fighter Jet Can Detect and Track China’s Stealth Fighter.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X