Just In
- 46 min ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 1 hr ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 2 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
- 5 hrs ago
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
Don't Miss!
- News
பிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எதிரிகளுக்கு தூக்கம் போச்சு... 3-வது விமானம் தாங்கி போர்க் கப்பல் திட்டத்தை கையில் எடுக்கும் இந்தியா
ரஃபேல் போர் விமானங்களின் வருகை எதிரி நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து ஒரு அதிர்ச்சியை எதிரிகளுக்கு கொடுக்க இருக்கிறது இந்தியா. இதுபற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரஃபேல் போர் விமானங்களின் வருகை எல்லையில் கடும் அச்சுறுத்தல்களை சமாளிக்க உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறு. மேலும், ரஃபேல் வருகையில் இந்திய விமானப் படையின் பலம் அதிகரிக்க உள்ளதோடு, இனி எல்லையில் வாலாட்டும்போது எதிரிகள் ஒன்றுக்கும், இரண்டு முறை யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், அதிக அளவில் தனது ராணுவ பலத்தை இந்தியா உயர்த்தி வருகிறது. இது அண்டை நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.

ரஃபேல் வருகையை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தியா ஆயுதங்களை குவித்து வருவது ஆசிய பிராந்தியத்தில் ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இதனால், ரஃபேல் வருகை பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இதனிடையே, எல்லைப் பகுதிகளில் வேண்டும் என்றே குடைச்சலை கொடுத்து வரும் சீனா, பாகிஸ்தான் நாடுகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்கும், வரும் வம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், முப்படைகளின் பலத்தை அதிகரித்து வருகிறது இந்தியா.

இந்திய விமானப் படைக்கு ரஃபேல் தவிர்த்து மேலும் பல புதிய விமானங்களை அடுத்து வரும் ஆண்டுகளில் இணைத்து இந்திய விமானப் படை பலத்தை அதிகரிக்க உள்ளது. அதேபோன்று, கடற்படை பலத்தை அதிகரிக்க புதிய நீர்மூழ்கி கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல், தாக்குதல் போர்க்கப்பல்களை கட்டி வருகிறது.

இந்த நிலையில், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அடுத்து ஒரு அதிர்ச்சியை எதிரிகளுக்கு கொடுக்க இருக்கிறது இந்தியா. அதாவது, மூன்றாவது விமானம் தாங்கி போர்க் கப்பலை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெறுவதற்கு இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை வைத்திருப்பதே பெரும் பலம். யானையை கட்டி தீணி போடுவது போலத்தான் இதன் பராமரிப்பு மற்றும் செலவீனங்கள். ஆனால், தனது எதிரிகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க இது பெரும் உதவியாக இருக்கும்.

தற்போது இந்தியாவிடம் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் பயன்பாட்டில் உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து மறுகட்டமைப்பு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா பயன்பாட்டில் உள்ளது. இந்த விமானம் தாங்கி கப்பல் இந்திய கடற்படை பலத்திற்கு முக்கிய பங்காற்றி வருகிறது.

அடுத்து இரண்டாவதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியா சொந்தமாக உருவாக்கி வருகிறது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், இந்த கப்பலின் இறுதி கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற பெயரில் இந்த புதிய விமானம் தாங்கி கப்பல் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு இந்திய கடற்படையின் பயன்பாட்டில் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில், மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் திட்டத்தையும் இந்திய கடற்படை கையில் எடுத்துள்ளது. இந்த புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்தால், கப்பல் கட்டும் பணி உடனடியாக துவங்கப்படும்.

மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் IAC-2 என்ற குறியீட்டுப்பெயரில் அழைக்கப்படும். பயன்பாட்டுக்கு வரும்போது ஐஎன்எஸ் விஷால் என்று பெயரிப்பட உள்ளது. இந்த கப்பல் 65,000 டன் எடை கொண்டதாக இருக்கும். அதாவது, ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை விட இது பெரிதாக இருக்கும்.

இந்த மூன்று விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இணைந்து செயல்படும்போது, இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் தடுத்து நிறுத்தப்படும். மேலும், இந்தியா மீது கை வைப்பதற்கு எந்த ஒரு நாடும் தயங்கும் அளவுக்கு கடற்படை பலத்தை இந்தியா பெறும். இந்த புதிய கப்பல்கள் மூலமாக அடுத்த தசாப்தத்தில் மூன்று விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கொண்ட உலகின் மிகவும் வலிமையான கடற்படை அந்தஸ்தை இந்தியா பெறும் வாய்ப்புள்ளது.

அடுத்து, இரண்டு புதிய போர் விமான படையணிகளை அமைக்கவும் இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு படையணியிலும் தலா 18 போர் விமானங்கள் இடம்பெறும். இந்த இரண்டு புதிய படையணிகளுக்கான போர் விமானங்களை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த மெக்டொனல் டக்ளஸ் நிறுவனம் தனது எஃப்-ஏ-18 போர் விமானத்தை சப்ளை செய்வதற்கு முயற்சித்து வருகிறது. அதேபோன்று, ரஃபேல் போர் விமானங்களை வழங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனமும், எம்ஜி-29கே போர் விமானங்களை வழங்குவதற்கு ரஷ்யாவின் மிகோயன் நிறுவனமும், கிரிபென் போர் விமானங்களை வழங்க ஸ்வீடன் நாட்டின் சாப் நிறுவனமும் முயற்சிகளில் இறங்கி உள்ளன.

இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம், விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இயக்குவதில் இந்தியா நீண்ட அனுபவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே, எதிரிகளைவிட விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்கான போர் தந்திரத்தை வகுப்பதில் சீனா, பாகிஸ்தானை விட இந்தியா சிறந்ததாக இருக்கும் என்றால் மிகையாகாது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.