வெறும் 8 மணிநேரத்தில் சென்னை டூ டெல்லி... புல்லட் ரயில் திட்டம் விறுவிறு!!

சென்னையிலிருந்து தலைநகர் டெல்லிக்கு புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் ரயில்வேத் துறை முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டம் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மணிக்கு 300 கி

By Saravana Rajan

சென்னையிலிருந்து தலைநகர் டெல்லிக்கு புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் ரயில்வேத் துறை முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டம் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சென்னை டூ டெல்லி புல்லட் ரயில் திட்டம் சூடுபிடிக்கிறது!

சென்னை- டெல்லி புல்லட் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான சாத்திக்கூறுகள் குறித்து தீவிர ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி, டெல்லியிலிருந்து நாக்பூர் வரையிலான ஆய்வுகள் வரும் ஜனவரி மாதம் நிறைவு பெற இருக்கின்றன.

சென்னை டூ டெல்லி புல்லட் ரயில் திட்டம் சூடுபிடிக்கிறது!

ஆய்வுப் பணிகள் முடிந்தவுடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் ரயில்வேத் துறை தீவிரமாக ஈடுபட இருக்கிறது. முதல்கட்டத் தகவல்களின்படி, டெல்லியிலிருந்து சென்னைக்கு சராசரியாக மணிக்கு 300 கிமீ வேகத்தில் புல்லட் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

சென்னை டூ டெல்லி புல்லட் ரயில் திட்டம் சூடுபிடிக்கிறது!

சென்னையிலிருந்து டெல்லிக்கு ரயிலில் செல்வதற்கு ராஜ்தானி மற்றும் துரந்தோ ரயில்களில் 28 மணிநேரமும், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களில் 35 மணிநேரம் வரை பிடிக்கிறது. ஆனால், புல்லட் ரயிலில் வெறும் 8 மணிநேரத்தில் டெல்லி சென்றுவிடலாம்.

சென்னை டூ டெல்லி புல்லட் ரயில் திட்டம் சூடுபிடிக்கிறது!

மேலும், சென்னை- டெல்லி இடையில் 1,754 கிமீ தூரத்திற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன்படி பார்த்தால், உலகிலேயே மிக நீளமான இரண்டாவது புல்லட் ரயில் வழித்தடமாக சென்னை- டெல்லி வழித்தடமாக பெருமை பெறும்.

சென்னை டூ டெல்லி புல்லட் ரயில் திட்டம் சூடுபிடிக்கிறது!

தற்போது சீனத் தலைநகர் பீஜிங்கிலிருந்து குவான்ஸோ நகருக்கு இடையில் 2,298 கிமீ தூரத்திற்கு புல்லட் ரயில் தடம் அமைக்ககப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே மிக நீளமான புல்லட் ரயில் வழித்தடம். மணிக்கு 300 கிமீ வேகத்தில் இந்த தடத்தில் இயக்கப்படுகிறது.

சென்னை டூ டெல்லி புல்லட் ரயில் திட்டம் சூடுபிடிக்கிறது!

சென்னை- டெல்லி இடையிலான புல்லட் ரயில் வழித்தடத்திற்கு 32.6 பில்லியன் டாலர் செலவு பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. மும்பை- ஆமதாபாத் புல்லட் ரயில் தடம் ஜப்பான் கடனுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்படுகிறது.

சென்னை டூ டெல்லி புல்லட் ரயில் திட்டம் சூடுபிடிக்கிறது!

அதேபோன்று, சென்னை- டெல்லி இடையிலான இந்த மெகா புல்லட் ரயில் வழித்தடமும் வெளிநாட்டு கடனுதவியுடன் அமைக்க ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது. சென்னை- டெல்லி புல்லட் ரயில் வழித்தடமானது, தலைநகர் டெல்லியையும் தென்னிந்திய நகரங்களையும் இணைக்கும் என்பதால், அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை டூ டெல்லி புல்லட் ரயில் திட்டம் சூடுபிடிக்கிறது!

டெல்லி- சென்னை புல்லட் ரயில் வழித்தடம் வர்த்தக ரீதியிலும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி, சென்னை- பெங்களூர்- மைசூர் இடையிலும் புல்லட் ரயில் வழித்தடத்தை அமைப்பதற்கு ரயில்வேத் துறை முனைப்பு காட்டி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Indian Railways Speed up Chennai- Delhi Bullet Train Project.
Story first published: Wednesday, May 23, 2018, 20:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X