அமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான்! எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

அமெரிக்காவில் லாரி டிரைவராக வேலை செய்து வரும் இந்தியர் ஒருவரின் வருமானம் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன. அது எவ்வளவு? என தெரிந்தால் நீங்கள் நிச்சயமாக நம்ப மாட்டீர்கள்.

அமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான்! எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் அமெரிக்காவில் ''செட்டில்'' ஆகி, கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற கனவு உள்ளது. இதனால் அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த விஷயத்தில் இந்தியர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்ற லட்சியம் நம்மில் பலருக்கும் உள்ளது.

அமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான்! எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

இப்படி யுஎஸ் கனவுடன் வாழ்ந்து கொண்டிருந்த லட்சக்கணக்கான இந்தியர்களில் ஒருவர்தான் சட்னம் சிங் (Satnam Singh). பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் தனது யுஎஸ் கனவை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார். சட்னம் சிங் தற்போது அமெரிக்காவில், செமி-டிரைலர் ட்ரக்கை (Semi-trailer Truck) ஓட்டி வருகிறார்.

அமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான்! எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

இந்த சூழலில் அல் ஜசீரா (Al Jazeera) நியூஸ் நெட்வொர்க்கின் ஒரு அங்கமாக செயல்படும் ஏஜே+ (AJ+), இந்தியரான சட்னம் சிங்கை பேட்டி கண்டது. அப்போது சட்னம் சிங் தனது தினசரி வாழ்க்கை மற்றும் சம்பாத்தியம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். அத்துடன் அமெரிக்க நெடுஞ்சாலைகளில் தனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் விவரித்தார்.

அமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான்! எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

கடந்த 1970களில்தான் சட்னம் சிங் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தார். தற்போது முழு நேர ட்ரக் டிரைவராக பணியாற்றி வரும் சட்னம் சிங், அதற்கு முன் விவசாயம் சார்ந்த வேலைகளை அமெரிக்காவில் செய்து வந்தார். தற்போது கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள யூபா சிட்டியில் (Yuba City) சட்னம் சிங் வசித்து வருகிறார். பஞ்சாபியர்களும், சீக்கியர்களும் நிறைந்திருப்பதால், குட்டி பஞ்சாப் என்ற செல்ல பெயர் யூபா சிட்டிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான்! எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

ட்ரக்கில் மிக நீண்ட நேரம் பணியாற்றுவேன் என சட்னம் சிங் தெரிவிக்கிறார். கலிபோர்னியா மகாணத்தில் லோடுகளை பிக்கப் செய்வது மற்றும் டெலிவரி செய்வது ஆகிய வேலைகளை ட்ரக் மூலம் அவர் செய்து கொண்டுள்ளார். ட்ரக் டிரைவராக பணியாற்ற ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் சட்னம் சிங்.

அமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான்! எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

ட்ரக்குகளில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் பஞ்சாப் பிராந்தியத்தை சேர்ந்த எவ்வளவு பேர் அமெரிக்கா வருகின்றனர்? என்பது குறித்தும் ஏஜே+ வெளியிட்டுள்ள வீடியோ பேசுகிறது. அத்துடன் ட்ரக் கலாச்சாரம் பற்றி பேசும் பஞ்சாபி பாடல்கள் குறித்தும் விவரிக்கிறது. இதுதவிர சட்னம் சிங்கிடம், சம்பாத்தியம் குறித்த கேள்வியையும் அந்த ரிப்போர்ட்டர் எழுப்பினார்.

அமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான்! எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

இதற்கு, ''இயல்பாக வேலை செய்தால், அதாவது ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்தால், ஒரு ஆண்டுக்கு 2,00,000 டாலர்கள் முதல் 2,25,000 டாலர்கள் வருவாய் ஈட்ட முடியும்'' என்பதுதான் சட்னம் சிங் அளித்த பதில். இதை அப்படியே இந்திய மதிப்பில் கணக்கிட்டால், ஒரு ஆண்டுக்கு 1.57 கோடி ரூபாய் அல்லது ஒரு மாதத்திற்கு 13 லட்ச ரூபாய்.

அமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான்! எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

தினசரி மதிய உணவை எப்படி கொண்டு வருவேன்? என்பதை சட்னம் சிங் காட்டுகிறார். ஒரு வேளை மதிய உணவு கொண்டு வர முடியாவிட்டால், நெடுஞ்சாலையில் உள்ள ஏதேனும் ஒரு பஞ்சாபி உணவகத்தில்தான் அவர் சாப்பிடுவாராம். இதுதவிர சட்னம் சிங்கின் ட்ரக்கில் எப்போதும் மினி ஸ்டவ் ஒன்று இருக்கும். வழியில் தேவைப்பட்டால், டீ தயாரித்து கொள்ள இந்த மினி ஸ்டவ்வை சட்னம் சிங் பயன்படுத்துகிறார்.

அமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான்! எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

சட்னம் சிங்கின் ட்ரக்கினுடையே கேபின் மிகப்பெரியதாக உள்ளது. அதில் ஓய்வு எடுத்து கொள்ள பெரிய படுக்கையும், துணிகளை வைத்து கொள்ள இட வசதியும் இருக்கிறது. சீக்கியராக இருப்பதால் தலையில் டர்பன் கட்டுவது சட்னம் சிங்கின் வழக்கம். இது தவிர நீண்ட தாடியையும் வளர்த்து வருகிறார். ஆனால் கடந்த காலங்களில் இதனை அமெரிக்கர்கள் சிலர் கிண்டல் அடித்துள்ளதாக சட்னம் சிங் வேதனையுடன் தெரிவிக்கிறார். குறிப்பாக ஒசாமா பின்லேடனுடன் அவரை தொடர்புபடுத்தி கிண்டல் செய்துள்ளனர்.

அமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான்! எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

அத்துடன் இந்தியர்கள் என்றாலே ஒரு சில அமெரிக்கர்கள் வெறுப்புடன் பார்ப்பதாகவும் சட்னம் சிங் தெரிவிக்கிறார். அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை இந்தியர்கள் பறித்து கொள்வதே இதற்கு காரணமாக உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில், அமெரிக்காவில் ட்ரக் டிரைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது குறிப்பிடத்தக்கது. சட்னம் சிங்கிடம் ஏஜே+ பேட்டி கண்ட வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதனிடையே அமெரிக்காவில் ட்ரக் டிரைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. ட்ரக் டிரைவராக வேலை செய்தால், அடிக்கடி வீட்டை விட்டு பிரிந்து நீண்ட காலம் வெளியே இருக்க வேண்டிய சூழ்நிலை வரும். இதன் காரணமாகதான் பலர் அதனை முழு நேர வேலையாக செய்ய மறுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Truck Driver Earns Rs 13 Lakh Per Month In United States. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X