மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி?

துபாயில் தச்சராக பணிபுரியும் இந்தியர் ஒரே நாளில் கோடீஸ்வரராகியிருப்பபதாக புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி...?

ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆவதெல்லாம் லாட்டரி சீட்டு அடித்தால் மட்டுமே முடியும். அவ்வாறு, லாட்டரி சீட்டு அடித்து, ஒரு சிலர் கோடீஸ்வரரான கதைகளையெல்லாம் நாம் செய்திகளின் வாயிலாக கேட்டிருப்போம். அதேசமயம், லாட்டரி சீட்டுகளால் சொத்துக்களை இழந்து தெருவிற்கு வந்த பணக்காரர்களின் சோக கதையையும் நாம் அறிந்திருப்போம். இதன் காரணமாகதான், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி சீட்டுக்குத் தடை விதிக்ப்பட்டுள்ளது.

மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி...?

ஆனால், நாம் பார்க்கவிருக்கும் இந்த பதிவில் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கமலேயே கோடீஸ்வரர் ஆகியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் பல்விர் சிங். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக துபாயில் தச்சராக பணியாற்றி வருகிறார். இவர் துபாய் சென்றபோது, தன் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளும்விதமாக, அந்த நாட்டில் செயல்பட்டு வரும் டியு என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம் கார்டினை வங்கியுள்ளார்.

மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி...?

இந்த சிம் கார்டினை பல்விர் சிங் கடந்த சில வருடங்களாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், டியு தொலைத் தொடர்பு நிறுவனம், அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை கடந்த வருடம் வெளியிட்டிருந்தது. அதில், "ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது டியு நெட்வர்க் சிம் கார்டினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்களின் நம்பர் முடக்கப்படும்" என கூறியிருந்தது.

மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி...?

இதைத்தொடர்ந்து, பல்வீர் சிங் அவரது நம்பரை குறிப்பிட்ட நாளுக்குள் அப்டேட் செய்திருந்தார். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் பல்வீர் சிங்-கை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ஒருவர், உங்களுக்கு பரிசு அடித்துள்ளது. இதனை டியு அலுவவகத்தில் வந்து பெற்றுக்கொள்ளவும் என்று கூறியுள்ளனர்.

மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி...?

இதனை நம்பாத பல்வீர் சிங் ஆரம்பத்தில் பிராங்க் கால் என நினைத்து, அழைப்பினைது துண்டித்துள்ளார். பின்னர், மீண்டும் தொடர்புகொண்ட டியு நிர்வாகத்தினர், நீங்கள் குறிப்பிட்ட நாளில் உங்களது சிம் கார்டினைப் புதுப்பித்தக் காரணத்திற்காக உங்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மெக்லாரன் நிறுவனத்தின் 570எஸ் ஸ்பைடர் கார் பரிசாக அடித்துள்ளது என புரிய வைத்தனர்.

மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி...?

இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த பல்வீர் சிங் செய்வதறியாமல் திகைத்து நின்றார். பின்னர், அவரை அழைத்துச் சென்ற டியு தொலைத் தொடர்பு நிர்வாகத்தினர், அவருக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள மெக்லாரன் 570எஸ் ஸ்பைடர் காரை பரிசாக அளித்தனர். ஆனால், காரை பரிசாகப் பெற்ற பல்வீர் சிங், அதனைப் பயன்படுத்தாமல், வெறொரு நபருக்கு விற்றுள்ளார். மேலும், இதன்மூலம் கிடைத்த பணத்தை வைத்து அவரின் தொழிலில் முதலீடு செய்துள்ளார்.

மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி...?

காரை விற்றது கவலையளிக்கக்கூடிய விஷயமாக இருந்தாலும், அந்த பணத்தை அவர் செலவு செய்த விதம் பாராட்டக்கூரியதாக இருக்கிறது. அதேசமயம், இந்த அதிக விலைக்கொண்ட ஸ்போர்ட்ஸ் காரை வைத்து பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமும் இல்லை.

மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி...?

பல்வீர் சிங்கிற்கு பரிசாக அளிக்கப்பட்ட மெக்லாரன் 570எஸ் ஸ்பைடர் கார் இந்திய மதிப்பில் துபாயில் ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு செய்யப்பட்டு வருகிறது. இந்த காரில் 3.8 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜட் வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது. மேலும், இந்த கார் மணிக்கு 328 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

Source: Gulflifestyle

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Worker Wins McLaren 570S Spyder In Dubai. Read In tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X