என்ன பெரிய வெளிநாட்டு சொகுசு கார்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது

பிரபல விளையாட்டு வீராங்கனை ஒருவர் இந்திய நிறுவனத்தின் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெளிநாட்டு சொகுசு கார்கள் வேணாம்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது!

இந்தியாவை சேர்ந்த புகழ் பெற்ற மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவர் கீதா போகத் (Geeta Phogat). மல்யுத்த களத்தில் இந்தியாவிற்கு பல்வேறு பெருமை தேடி தந்தவரான கீதா போகத், தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். கீதா போகத் வாங்கியிருப்பது மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) கார் ஆகும். மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு வந்தது.

வெளிநாட்டு சொகுசு கார்கள் வேணாம்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது!

முரட்டுத்தனமான தோற்றம், அட்டகாசமான வசதிகள் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், விலையும் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால், இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. மஹிந்திரா நிறுவனமே இப்படி ஒரு வரவேற்பை எதிர்பார்த்திருக்காது என்றால் சொன்னால் மிகையாகாது.

வெளிநாட்டு சொகுசு கார்கள் வேணாம்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது!

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு வெறும் 30 நிமிடங்களில் 1 லட்சம் முன்பதிவுகள் குவிந்த செய்திகளை நீங்கள் சமீபத்தில் வாசித்திருக்கலாம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த காருக்கு எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது? என்பதற்கு இந்த முன்பதிவு எண்ணிக்கையே சாட்சியாகும். இப்படிப்பட்ட ஒரு அற்புதமான காரைதான் கீதா போகத் தற்போது வாங்கியுள்ளார்.

வெளிநாட்டு சொகுசு கார்கள் வேணாம்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது!

இப்படி ஒரு சிறப்பான காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ததற்காக சமூக வலை தள பதிவு மூலமாக ஆனந்த் மஹிந்திராவிற்கு, கீதா போகத் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். அத்துடன் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருடன் தான் இருக்கும் புகைப்படங்களையும் கீதா போகத் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு சொகுசு கார்கள் வேணாம்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது!

புதிய ஸ்கார்பியோ என் காரின் டெலிவரி பணிகள் செப்டம்பர் 26ம் தேதி தொடங்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன் தினம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டன. நடப்பாண்டு டிசம்பர் மாதத்திற்குள் 25 ஆயிரம் ஸ்கார்பியோ என் கார்களை டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

வெளிநாட்டு சொகுசு கார்கள் வேணாம்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது!

Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8 L ஆகிய வேரியண்ட்களில் ஸ்கார்பியோ என் காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் குறிப்பிடத்தகுந்தவை.

வெளிநாட்டு சொகுசு கார்கள் வேணாம்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது!

இதுதவிர ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் போன்ற வசதிகளையும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் பெற்றுள்ளது. இந்திய சந்தையில் டாடா ஹாரியர் (Tata Harrier), டாடா சஃபாரி (Tata Safari) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) போன்ற கார்களுடன் மஹிந்திரா ஸ்கார்பியோ என் போட்டியிட்டு வருகிறது.

வெளிநாட்டு சொகுசு கார்கள் வேணாம்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது!

செயல்திறனை பொறுத்தவரையில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் ஆப்ஷன்களுடனும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் கிடைக்கிறது. இதன்படி இந்த காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 200 பிஎஸ் பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

வெளிநாட்டு சொகுசு கார்கள் வேணாம்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது!

அதே நேரத்தில் இந்த காரின் டீசல் இன்ஜின் 2 வகையான ட்யூனிங் உடன் கிடைக்கிறது. மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் வழங்கப்பட்டிருப்பது, 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆகும். 132 பிஎஸ் மற்றும் 300 என்எம் பவர் அவுட்புட் உடனும், 175 பிஎஸ் பவர் மற்றும் 400 என்எம் பவர் அவுட்புட் உடனும் 2 வகையான ட்யூனிங்கில் இந்த இன்ஜின் ஆப்ஷன் கிடைக்கிறது.

வெளிநாட்டு சொகுசு கார்கள் வேணாம்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது!

தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப விலை 11.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 23.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த சிறப்பான விலை நிர்ணயமும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வரவேற்பிற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

வெளிநாட்டு சொகுசு கார்கள் வேணாம்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது!

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் சமீப காலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யும் அனைத்து கார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. புதிய தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய கார்களை தொடர்ந்து தற்போது ஸ்கார்பியோ என் காரும் மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.

வெளிநாட்டு சொகுசு கார்கள் வேணாம்... இந்திய தயாரிப்பை வாங்கிய பிரபல விளையாட்டு வீராங்கனை... பாராட்டு குவிகிறது!

பொதுவாக மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களும், சினிமா நட்சத்திரங்களும் ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் கார்களைதான் வாங்கி வருகின்றனர். ஆனால் கீதா போகத் இந்திய தயாரிப்பை வாங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்காக அவரை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian wrestler geeta phogat buys mahindra scorpio n
Story first published: Wednesday, September 28, 2022, 18:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X