யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது

யூ-டியூப்பில் சம்பாதித்த பணத்தில், இந்திய இளைஞர் ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது

இளைஞர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கு, யூ-டியூப் மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறது. யூ-டியூப் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்பதும் கூடுதல் சிறப்பு. இளைஞர்கள் பலர் யூ-டியூப் மூலமாக வருமானம் ஈட்ட தற்போது முயற்சி செய்து கொண்டுள்ளனர். ஆனால் யூ-டியூப்பில் வருமானம் ஈட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது

அதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவை. இந்த இரண்டும் இல்லாத ஒரு சிலர் யூ-டியூப்பில் வருவாய் ஈட்ட முயற்சி செய்து, பின்னர் சோர்ந்து விடுகின்றனர். ஆனால் இன்னும் சிலரோ கடின உழைப்பின் மூலமாக, யூ-டியூப்பில் நன்கு பிரபலமாகி இருப்பதுடன், லட்சக்கணக்கில் வருமானமும் ஈட்டி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கௌரவ் சௌத்ரி (Gaurav Chaudhary).

யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது

நீங்கள் யூ-டியூப்பை அதிகம் பயன்படுத்துபவர் என்றாலோ அல்லது டெக்னாலஜி தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டக்கூடியவர் என்றாலோ, கௌரவ் சௌத்ரியை பற்றிய அறிமுகமே தேவையில்லை. ஆம், டெக்னிக்கல் குருஜீ (Technical Guruji) என்ற யூ-டியூப் சேனலை, கௌரவ் சௌத்ரிதான் நடத்தி வருகிறார்.

யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது

டெக்னிக்கல் குருஜீ யூ-டியூப் சேனல் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டெக் வீடியோக்களை மக்கள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, கௌரவ் சௌத்ரி இந்த சேனலை தொடங்கினார். தற்போது இந்த சேனலை 17.6 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். அதாவது 1.76 கோடி பேர்!

யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது

டெக்னாலஜி தகவல்களை பெற யூ-டியூப்பில் பல்வேறு சேனல்கள் இருந்தாலும், கௌரவ் சௌத்ரி தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் வெளியிடும் செல்போன் விமர்சன வீடியோக்களுக்கு ரசிகர்கள் மிக அதிகம். இந்தியரான இவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். யூ-டியூப் மூலம் இவர் ஒரு மாதத்திற்கு 20 லட்ச ரூபாய்க்கும் மேல் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.

யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது

இவர் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls-Royce Ghost) காரை வாங்கியுள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிரபலமான கார்களில் கோஸ்ட்டும் ஒன்று. இந்திய மார்க்கெட்டில் 5.25 கோடி ரூபாய் முதல் 6.83 கோடி ரூபாய் வரையிலான விலையில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது

இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். அத்துடன் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கும் பிரபலங்கள், அதில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிறைய மாறுதல்களை செய்து கொள்கின்றனர். அப்படி மாறுதல்களை தேர்ந்து எடுக்கும் பட்சத்தில், விலை இன்னும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில், எந்த வேரியண்ட்டை கௌரவ் சௌத்ரி வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. கௌரவ் சௌத்ரிக்கு முன்பாகவே இந்தியாவை சேர்ந்த பல்வேறு பிரபல மனிதர்களிடம், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யூ-டியூப்பில் காசு பாத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய கில்லாடி... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வருது

இதில், பிரியங்கா சோப்ரா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை சொந்தமாக வைத்துள்ளனர். அதே சமயம் ஹிருத்திக் ரோஷனிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II கார் இருக்கிறது. புதிதாக வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருடன் தான் இருக்கும் படத்தை கௌரவ் சௌத்ரி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதற்காக கௌரவ் சௌத்ரிக்கு நெட்டிசன்கள் தற்போது வாழ்த்து தெரிவித்து கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளால் வேலையிழந்துள்ள பலர், யூ-டியூப் மூலம் வருமானம் ஈட்ட முயற்சி செய்து வருகின்றனர். கௌரவ் சௌத்ரி ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கியுள்ள செய்தி, அவர்களுக்கு எல்லாம் கண்டிப்பாக உற்சாகம் அளிக்க கூடியதாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian YouTuber Gaurav Chaudhary (Technical Guruji) Bought Custom Made Rolls Royce Ghost. Read in Tamil
Story first published: Tuesday, July 7, 2020, 16:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X