செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே!!

மின் வாகனங்களுக்கான ஒயர்லெஸ் சார்ஜிங் வசதிக் கொண்ட சாலையை உருவாக்க இரு நாடுகள் இணைந்திருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே!!

இந்தியானாவின் போக்குவரத்து கழகமும், அமெரிக்காவும் இணைந்து சாத்தியமற்ற ஓர் செயலை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி கேள்விப்பட்டிருப்போம், சமீப காலமாக இந்த வசதியை சில வாகன உற்பத்தி நிறுவங்கள் தங்களின் புதுமுக கார்களில் வழங்கு வருகின்றன.

செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே!!

இத்தகைய ஓர் வசதிக் கொண்ட சாலையை உருவாக்கவே இந்தியானாவின் போக்குவரத்து கழகமும், அமெரிக்காவும் இணைந்திருக்கின்றன. ஒயர்லெஸ் சார்ஜிங் பேட்கள் ஒயர் இணைப்பு இல்லாமல் செல்போனை சார்ஜ் செய்ய உதவும். அதாவது, செல்போனை அந்த பேடின்மீது வைத்தால்போதும் தானாகவே செல்போன் சார்ஜாகும்.

செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே!!

இந்த மாதிரியான ஓர் சார்ஜிங் வசதிக் கொண்ட சாலையையே முக்கிய நகரங்களில் கட்டமைக்க இந்தியானா-அமெரிக்கா இணைவு அரங்கேறியிருக்கின்றது. இது வாகனங்கள் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போதே சார்ஜ் செய்ய உதவும். இதற்காக இரு நாடுகளும் பர்டூ பல்கலைக்கழகத்துடன் (Purdue University) இணைந்திருக்கின்றன.

செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே!!

இந்த பல்கலைக்கழகமே சிமெண்டுடன் சேர்ந்து ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கக் கூடிய சாலையை உருவாக்க இருக்கின்றன. மக்கள் மத்தியில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை அமெரிக்க, இந்தியானா கையில் எடுத்திருக்கின்றன.

செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே!!

முன்னதாக நாட்டின் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் இதனை சோதனையோட்டமாக நடைமுறைக்குக் கொண்டு வர அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை இரண்டு கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக நாட்டின் ஓர் முக்கிய நகரம் தேர்வு செய்யப்பட்டு அங்கு முழு நீள ஒயர்லெஸ் சார்ஜிங் வசதிக் கொண்ட சாலை அமைக்கப்பட இருக்கின்றது.

செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே!!

இந்த சாலை மின்சார கார்கள் மட்டுமின்றி கன ரக வாகனங்கள்கூட சார்ஜேற்றிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட இருக்கின்றன. 200 கிலோவாட் மற்றும் அதற்கும் மேலான திறன் கொண்ட வாகனங்களால் சார்ஜேற்றிக் கொள்ள முடியும்.

செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே!!

இந்த மூன்று கட்ட ஆய்வுகளும் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில் இந்தியானாவில் இரு மாநிலங்களை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலை அமைக்கப்பட இருக்கின்றது. அது எந்த மாநிலம் என இன்னும் தீர்மானிக்கவில்லை. தற்போது சோதனையோட்ட திட்டத்தை வரும் கோடை காலத்தில் தொடங்க இந்தியானா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

செல்போனை போல் கார்களையும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்... அதுவும் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போதே!!

ஆகையால், ஒயர்லெஸ் சார்ஜிங் வசதிக் கொண்ட சாலை மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது அதிகரித்து வரும் மின் வாகன பயன்பாட்டை மேலும் பல மடங்கு உயர்த்த வழி வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Indiana And US In Partnership For Wireless EV Charging Embedded On Roads. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X