Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
இந்தியாவின் முதல் விமான டாக்ஸி சேவை ஹரியானா மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையின் சிறப்புகளை இந்த செய்தியில் பார்ப்போம்.

சண்டிகர் மற்றும் ஹரியானாவின் ஹிசார் நகரங்களுக்கு இடையே புதிய விமான சேவை ஹிசார் சர்வதேச விமான நிலையத்தில் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் துவங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிய விமான சேவை நாடு முழுவதும் அவ்வப்போது துவங்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த விமான சேவையின் சிறப்பம்சமே, குறைவான தூரத்திற்கு குறைவான செலவில் செல்ல குறிப்பாக மிடில்-க்ளாஸ் மக்களை டார்க்கெட் செய்து துவங்கப்பட்ட சேவையாகும்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், சூரரைப் போற்று படத்தில் சூர்யா துவங்குவாறே அதுபோலதான் இது. ஆனால் அந்த படத்தில் சென்னை- மதுரைக்கு எவ்வளவு விமான கட்டணமாக நிர்ணயித்தார் என்பது தெரியவில்லை.

ஆனால் இங்கு ஹிசார்- சண்டிகருக்கே ரூ.1,755 கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். ஹிசார் விமான நிலையத்தில் இருந்து சண்டிகர் கிட்டத்தட்ட 250கிமீ தொலைவில் உள்ளது. இந்த தூரத்தை இந்த விமானத்தின் மூலமாக வெறும் 45 நிமிடங்களில் சென்றடைந்து விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விமான சேவையின் முதல் பயணம் ஹிசாரில் இருந்து சண்டிகர் வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயணத்தை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார்.

இந்த விமான சேவையின் குறை என்று பார்த்தால், இந்த சேவைக்கான விமானங்களில் ஓட்டுனரையும் சேர்த்து வெறும் நான்கு நபர்கள் மட்டுமே அமர முடியும். அப்படி பார்த்தால் குடும்பத்துடன் மூன்று மூன்று நபர்களாகவே சொல்ல முடியும்.

அவர்களுக்கே டிக்கெட்டின் விலை 5 ஆயிரம் ரூபாயை கடந்துவிடும். இந்த விமான சேவை மத்திய அரசின் ‘உடான்' திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமே, குறைவான செலவில் மக்களை வானில் பறக்க வைக்க வேண்டும் என்பதாகும்.

ஆனால் டிக்கெட்டின் விலை இந்த நோக்கத்திற்கு எதிராக உள்ளதுபோல் இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. இந்த விமான சேவைக்கான முன்பதிவுகள் இணையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விமான சேவையை துவங்கிய நிறுவனம் தனி பயன்பாட்டிற்கான முன்பதிவுகளையும் துவங்கியுள்ளது. ஆனால் அவற்றிற்கான டிக்கெட் விலை மேலே கூறியதை காட்டிலும் அதிகமாக உள்ளது. இந்த விமான சேவையில் தினமும் விமானங்கள் ஹிசார் - சண்டிகர் நகரங்களுக்கு இடையே பறக்கவுள்ளன.

இந்த மலிவான விமான சேவையில் முதல் விமானம் ஹிசாரில் இருந்து சண்டிகரை நோக்கி பறந்துள்ளது, அடுத்த விமானம் வருகிற ஜனவரி 18ஆம் தேதி ஹிசாரில் இருந்து டெக்ராடூனை நோக்கியும், அதற்கடுத்த விமானம் ஜனவரி 23ல் ஹிசாரில் இருந்து தர்மசாலாவை நோக்கியும் பறக்கவுள்ளது.