சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பலான 'ஆங்ரியா' நாளை முதல் இயக்கப்படுகிறது.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பலான 'ஆங்ரியா' நாளை முதல் இயக்கப்படுகிறது. ஆங்ரியா உல்லாச கப்பலில் இடம்பெற்றிருக்கும் பிரம்மாண்டமான வசதிகள், டிக்கெட் விலை உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

கேளிக்கைகள் மற்றும் உல்லாச சுற்றுலாக்களுக்காக அதிகப்படியான தொகையை செலவிடும் வழக்கம் இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது. என்றாலும் 'க்ரூஸ்' (Cruise) எனப்படும் உல்லாச கப்பல் சேவை மட்டும் இந்தியாவில் தற்போது வரை கிடையாது.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

ஆனால் அந்த குறை இன்றுடன் நிவர்த்தியாகிறது. ஆம், இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் சேவை நாளை (அக்டோபர் 20) முதல் தொடங்கவுள்ளது. 'ஆங்ரியா' (Angriya) என பெயரிடப்பட்டுள்ள இந்த உல்லாச கப்பல், இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறது.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

ஆங்ரியா உல்லாச கப்பலானது மும்பை-கோவா இடையே இயக்கப்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாட்கள் ஆங்ரியா உல்லாச கப்பல் இயக்கப்படும். ஆங்ரியாதான் இந்தியாவின் முதல் உள்நாட்டு க்ரூஸ் லைனர் (Domestic Cruise Liner) என்பது குறிப்பிடத்தக்கது.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

ஆங்ரியா உல்லாச கப்பலில் சொகுசான 7 தளங்கள் உள்ளன. 131 மீட்டர் நீளம் கொண்ட இந்த பயணிகள் சொகுசு கப்பல் ஜப்பானில் கட்டப்பட்டதாகும். ஆங்ரியா உல்லாச கப்பலில், அங்கோரா (Ancora) மற்றும் கோரல் ஃரீப் (Coral Reef) என்ற பெயரில் 2 ரெஸ்டாரென்ட்கள் உள்ளன.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

மது பிரியர்களுக்கு என தனியாக அக்வாடு, காஜ், சீ ப்ரீஸ், ஃகோப், சாரோ டி மற்றும் சீ ஹோர்ஸ் என 6 பார்களும் ஆங்ரியா உல்லாச கப்பலில் இடம்பெற்றுள்ளன. ரெஸ்டாரென்ட்கள் மற்றும் பார்கள் தவிர ஸ்பா (Spa), நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளும் ஆங்ரியா உல்லாச கப்பலில் உள்ளன.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

ஃபேம்லி ரூம் (Family room), கபில் ரூம் (Couple Room) என 8 வகைகளின் கீழ் மொத்தம் 104 தங்கும் அறைகள் ஆங்ரியா உல்லாச கப்பலில் இடம்பெற்றுள்ளன. இதில், பயணிகள் தங்கள் தேவைக்கு ஏற்ற தங்கும் அறைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

ஆங்ரியா உல்லாச கப்பலில் அன்டர் வாட்டர் லெவல் (Underwater Level) லக்ஸரி அறைகளும் உள்ளன. எனவே இந்த அறைகளில் தங்கும் பயணிகளுக்கு நிச்சயமாக வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அதேபோல் அன்டர் வாட்டர் லெவல் ஸ்பாவும் உள்ளது.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

ஆங்ரியா உல்லாச கப்பல் மும்பையில் இருந்து மாலை 5 மணியளவில் புறப்படும். மறுநாள் காலை 7 மணியளவில் கோவா சென்றடையும். எனவே பயணிகள் அனைவரும் கடலில் இருந்தவாறே தெளிவான வானத்தில் சூரியன் அஸ்தமனமாவதையும், சூரியன் உதிப்பதையும் கண்டு ரசிக்க முடியும்.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

ஆக மொத்தம் ஆங்ரியா உல்லாச கப்பலில் 14 மணி நேரத்தை பயணிகள் உல்லாசமாக கழிக்கலாம். ஆங்ரியா உல்லாச கப்பலானது மணிக்கு 32 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும். எனவே பயணிகள் தங்கள் பயணத்தை ரசித்து அனுபவிக்க முடியும்.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டங்கள், பார்ட்டி அல்லது திருமணம் ஆகியற்றையும் ஆங்ரியா உல்லாச கப்பலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெகு விரைவிலேயே நாடு முழுவதும் ஆங்ரியா உல்லாச கப்பல் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

ஆங்ரியா உல்லாச கப்பல் சேவை கடந்த ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு சில காரணங்களால் அதன் அறிமுகம் தாமதமாகி விட்டது. என்றாலும் இனி இந்திய மக்களும் உல்லாச கப்பலில் சொகுசாக பயணிக்க முடியும்.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

ஆங்ரியா உல்லாச கப்பல் புறப்படுவதற்கு முன்பாகவே அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விடும். எனினும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், பயணிகளுக்கு உதவுவதற்கு என தனியாக மருத்துவ குழுவும், ஆங்ரியா உல்லாச கப்பலில் பயணிக்கும்.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

ஆங்ரியா உல்லாச கப்பலில் பயணிப்பதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை 4,300 ரூபாய் மட்டுமே. அதிகபட்ச டிக்கெட் விலை 12,000 ரூபாய். இதில், பயணம் செய்ய விரும்பும் பயணிகள், ஆங்ரியா க்ரூஸ் வெப்சைட்டில் டிக்கெட்களை புக்கிங் செய்து கொள்ளலாம்.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

ஆங்ரியா உல்லாச கப்பல் சேவையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டி மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் நாளை தொடங்கி வைக்கின்றனர். ஆங்ரியா உல்லாச கப்பலில் சுமார் 400 பயணிகள் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

ஆங்ரியா உல்லாச கப்பலில் இடம்பெற்றிருக்கும் வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், பயண நேரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய வீடியோவை Angriya Cruises வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஆங்ரியா சீ ஈகிள் பிரைவேட் லிமிடெட் (Angriya Sea Eagle Pvt Ltd) என்ற நிறுவனம்தான் ஆங்ரியா உல்லாச கப்பலை இயக்குகிறது. ஆங்ரியா உல்லாச கப்பல் மூலமாக, இந்தியாவில் கடல் வழி போக்குவரத்து பிரபலமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

இதுகுறித்து மும்பை துறைமுக கழக தலைவர் சஞ்சய் பாட்டியா கூறுகையில், ''மும்பையில் இருந்து உல்லாச கப்பலை இயக்க பல தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தன. ஆங்ரியா உல்லாச கப்பலுக்கு பிறகு, கோவாவிற்கு பயணிகள் கப்பல் ஒன்றை இயக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சகல வசதிகளுடன் கூடிய இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் நாளை முதல் இயக்கம்.. டிக்கெட் விலை குறைவுதான்

சுமார் 2 ஆயிரம் பயணிகள் பயணம் செய்யும் வகையிலான இந்த கப்பலை 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கொச்சி, சென்னை வழித்தடங்கள் குறித்தும் நாங்கள் ஆராய உள்ளோம்'' என்றார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
India's First Luxury Cruise ' Angriya ' Will Sail From Mumbai To Goa On October 20. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X