சென்னை வந்திறங்கிய இந்தியாவின் முதல் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் - VIII கார்..!!

By Azhagar

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய 2018 பான்டம் கார் அறிமுக விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இந்த கார் கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களில் உலகளவில் பிரபலமான மாடல் என்றால் அது பான்டம் தான். தற்போது இதன் 8வது தலைமுறை மாடலான 2018 பான்டம் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

இதற்காக இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் 2018 பான்டம் கார் சென்னையில் வந்திறங்கியது. சரக்கு கப்பல் மூலம் எடுத்துவரப்பட்ட இந்த கார் 22ம் தேதி நடைபெறும் அறிமுக விழாவில் காட்சிப்படுத்தப்படும்.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

இதை இந்தியாவில் வெளியிடும் பிஎம்டபுள்யூ குன் டீலர்ஷிப் நிறுவனமும் உறுதி செய்துள்ளதை அடுத்து, 2018 பான்டம் கார் சென்னை துறைமுகத்தை வந்தடைந்த புகைப்படங்களை அந்நிறுவனம் தனது இஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
Auto Rickshaw Explodes In Broad Daylight
ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

சென்னை துறைமுகத்தில் வந்திறங்கிய இந்த கார் ஒரு கன்டெயனரில் இருப்பது போன்ற புகைப்படங்களை அந்நிறுவனம் பதிவிட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவின் அறிமுக விழாவில் இடம்பெறும் 2018 பான்டம் கார் வெள்ளை நிறத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

உலகளவில் பலரால் விரும்பப்படும் ஒரே ஆடம்பர கார் நிறுவனமான உள்ள ரோல்ஸ் ராய்ஸ், இந்தியாவிற்கான 2018 பான்டம் காரை வெள்ளை மற்றும் நீலம் என டூயல் டோன் நிறங்களில் உருவாக்கியுள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

காரில் வெள்ளை நிறம் தான் பிரதானம் என்றாலும், க்ரிலின் சுற்றுப்புறம், பானட் மற்றும் மேற்கூரை ஆகியவை நீல நிற பூச்சை பெற்றுள்ளன.

பான்டம் சிரீஸில் பழைய மாடலுக்கு மாற்றாக விற்பனைக்கு வரவுள்ள 2018 ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் கார் இந்தியாவிலும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

ரோல்ஸ் ராய்ஸின் 'ஆர்கிடெக்சர் ஆஃப் லக்ஸுரி' என்ற பிளாட்பாரமின் கீழ் 2018 பான்டம் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பாரம் 'பீஸ்போக் ஸ்பேஸ் ஃபிரேம்' என்ற கட்டமைப்பை பெற்றுள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

இதன் காரணமாக தற்போதைய புதிய மாடல், முந்தைய பான்டம் காரை விட 30 சதவீதம் வலிமை , உறுதி மற்றும் இலகுத்தன்மை ஆகியவற்றை அதிகமாக பெற்றிருக்கும்.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

6.75 லிட்டர் ட்வின்-டர்போ சார்ஜிடு வி12 எஞ்சின் கொண்ட இந்த கார், 563 பிஎச்பி பவர் மற்றும் 900 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

துவக்க நிலையில் 100கி.மீ வேகத்தை 5.3 நொடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த காரில் இசட்.எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

தற்போதைய கார்களின் ஆடம்பர தேவைகளை விட கூடுதலான பல அம்சங்கள் இந்த காரில் உள்ளன. 2018 பான்டம் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் கேட்கும் பிரத்யேக தேவைகளையும் ரோல்ஸ் ராய்ஸ் இந்த மாடலில் தயாரித்து வழங்கும்.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

பீ-ஸ்போக் ஆர்கிடெக்ச்சரில் தயாராகியுள்ளதன் காரணமாக கம்போர்ட், மற்றும் சொகுசான பயணத்தை இது வழங்கும். தவிர காரின் உள்கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

2018 பான்டம் காரில் பல உயர் ரக தொழில்நுட்பங்களை பெற்ற 12.3 இஞ்ச் டிஸ்பிளே உள்ளது. இதன்மூலம் முன்னர் இருந்த பின்னாகில் இன்ஃபொடெயின்மென்ட் டிஸ்பிளேவிற்கு ரோல்ஸ் ராய்ஸ் விடைக்கொடுத்துள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

புதிய பான்டம் கார் டாஷ்போர்டில் பெரிய கிளாஸ் பேனல் ஒன்று உள்ளது. இதை 'கேலரி' என்று குறிக்கிறது ரோல்ஸ் ராய்ஸ்.

மூன்று பரிமாணங்களை கொண்ட இந்த அமைப்பு உரிமையாளரின் பிரத்யேக தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும்.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

இந்தியாவிற்கு வந்துள்ள முதல் 2018 பான்டம் காரின் அறிமுக விழாவின் போது, மூன்று பரிமாணங்களை கொண்ட இந்த விசேஷ'கேலரி' அம்சம் பற்றி விளக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

இந்தியாவிற்கான முதல் 2018 ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் கார் சென்னை மண்ணில் வந்திறங்கி இருப்பது தமிழகத்தை சேர்ந்த பல வாகன ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை பாய்ச்சியுள்ளது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

ஏறுமுகத்தில் பெட்ரோல் விலை, 2018 பட்ஜெட் ஆகிய செயல்பாடுகளுக்கு பிறகு வரும் 22ம் தேதி ரோல்ஸ் ராய்ஸ் 2018 பான்டம் இந்தியாவில் அறிமுகமாகிறது.

ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார்- சென்னைக்கு வருகை..!!

இதற்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பட்ஜெட் எஃபெக்ட்: சொகுசு கார்கள், பிரிமியம் பைக்குகளின் விலை உயர்கிறது!

பட்ஜெட் எஃபெக்ட்: சொகுசு கார்கள், பிரிமியம் பைக்குகளின் விலை உயர்கிறது!

பட்ஜெட்டில் சுங்க வரி அதிகரிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் சொகுசு கார்கள் மற்றும் பிரிமியம் பைக்குகளின் விலை அதிகரிக்க இருக்கிறது.

பட்ஜெட் எஃபெக்ட்: சொகுசு கார்கள், பிரிமியம் பைக்குகளின் விலை உயர்கிறது!

இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரி இருமடங்கு அதிகம் என்பதால், பல சொகுசு கார் நிறுவனங்கள் முக்கிய பாகங்களாக தருவித்து இந்தியாவில் அசெம்பிள் செய்து கார்களை விற்பனை செய்து வருகின்றன. இதே நடைமுறையைத்தான் பிரிமியம் பைக் நிறுவனங்களும் பின்பற்றி அசெம்பிள் செய்கின்றன.

பட்ஜெட் எஃபெக்ட்: சொகுசு கார்கள், பிரிமியம் பைக்குகளின் விலை உயர்கிறது!

எஞ்சின், ட்ரான்மிஷன் உள்ளிட்ட பல முக்கிய பாகங்கள் தங்களது தாய் நாட்டிலோ அல்லது வேறு நாட்டில் உள்ள தங்களது ஆலையிலிருந்து அந்நிறுவனங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்கின்றன.

பட்ஜெட் எஃபெக்ட்: சொகுசு கார்கள், பிரிமியம் பைக்குகளின் விலை உயர்கிறது!

பின்னர் இங்குள்ள ஆலைகளில் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் கார் மற்றும் பைக்குகள் விற்பனைக்கு செல்கின்றன. இதனால், கணிசமான அளவு வரியை மிச்சப்படுத்த முடிவதால், விலையை சவாலாக நிர்ணயிக்க முடிகிறது.

பட்ஜெட் எஃபெக்ட்: சொகுசு கார்கள், பிரிமியம் பைக்குகளின் விலை உயர்கிறது!

ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ, ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற கார் நிறுவனங்களும், ஹார்லி டேவிட்சன், ட்ரையம்ஃப் உள்ளிட்ட பிரிமியம் பைக் நிறுவனங்களும் இந்த முறையை பின்பற்றிதான் இந்தியாவில் தங்களது தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்றன.

பட்ஜெட் எஃபெக்ட்: சொகுசு கார்கள், பிரிமியம் பைக்குகளின் விலை உயர்கிறது!

இந்த நிலையில், பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரிபாகங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 10 சதவீத சுங்கவரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த பைக்குகளின் விலை உயர இருக்கிறது.

பட்ஜெட் எஃபெக்ட்: சொகுசு கார்கள், பிரிமியம் பைக்குகளின் விலை உயர்கிறது!

உதாரணமாக ரூ.25 லட்சம் மதிப்புடைய சொகுசு காரின் விலை ரூ.80,000 வரை உயரும். தற்போது ரூ.1.5 கோடி விலை மதிப்புடைய கார்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. அவை அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை விலை உயர வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த கூடுதல் சுமை வாடிக்கையாளர்கள் தலையில்தான் சுமத்தப்படும்.

பட்ஜெட் எஃபெக்ட்: சொகுசு கார்கள், பிரிமியம் பைக்குகளின் விலை உயர்கிறது!

அதேபோன்று, முழுமையாக கட்டப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பஸ் மற்றும் டிரக்குகளுக்கான வரி 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதால், இந்த துறையில் பெரிய பாதிப்பு இருக்காது.

பட்ஜெட் எஃபெக்ட்: சொகுசு கார்கள், பிரிமியம் பைக்குகளின் விலை உயர்கிறது!

அதேநேரத்தில், முழுமையாக கட்டடைக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர கார்கள் மற்றும் பைக்குகள் மீதான இறக்குமதி வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Read in Tamil: India's First Rolls-Royce Phantom VIII Arrives In Chennai. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X