நிபந்தனையுடன் கொரோனோ முகாமாக மாறும் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்... நீதிமன்றம் அதிரடி!

கொரோனா அச்சத்தின் காரணமாக சொந்த ஊர் திரும்பி வரும் தினக் கூலி தொழிலாளர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்காக இந்தியாவின் முதல் ரேஸ் டிராக்கை பயன்படுத்திக் கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நிபந்தனையுடன் கொரோனோ முகாமாக மாறும் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்... நீதிமன்றம் அதிரடி!

கோரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு உத்தரவினால் நாடே முடங்கிய நிலையில் காணப்படுகின்றது. முக்கியமாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் நாட்டின் பல பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

நிபந்தனையுடன் கொரோனோ முகாமாக மாறும் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்... நீதிமன்றம் அதிரடி!

முன்னதாக பரபரப்பாக காணப்பட்ட ஆலைகள், புழுதியை கிளப்பியவாறு சுற்றுப்புறச்சூழலை கெடுக்கும் வகையில் புகையை வெளியிட்டு சுற்றித்திரிந்த வாகனங்கள் என அனைத்தும் தற்போது இயக்கமற்ற நிலையில் உள்ளன.

இந்த நிலையால் அன்றாட கூலித் தொழிலளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், ஊரை விட்டு ஊருக்கு பணி சென்று பணியாற்றும் தினக் கூலி தொழிலாளர்கள் மிக கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றனர்.

நிபந்தனையுடன் கொரோனோ முகாமாக மாறும் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்... நீதிமன்றம் அதிரடி!

144 தடை உத்தரவு திடீரென அமலுக்குக் கொண்டுவரப்பட்டதால் பலர் உடனடியாக தங்களின் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு விட்டனர். ஆனால், பெரும்பாலான தினக்கூலி தொழிலாளர்கள் போதியளவு பணம் கையிருப்பில் இல்லாத காரணத்தால் இருந்த இடத்திலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், அரசு போக்குவரத்து சேவையும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், அவர்களால் அரசு வாகனங்களையும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

நிபந்தனையுடன் கொரோனோ முகாமாக மாறும் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்... நீதிமன்றம் அதிரடி!

ஏற்கனவே, கையில் பணம் இல்லாதது, வருமை உள்ளிட்ட காரணங்களால் பிழைக்க வந்த இடத்தில் மேலும் வருமையை அவர்கள் தற்போது சந்தித்து வருகின்றனர்.

எனவே, பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து சாதனங்கள் இல்லாத காரணத்தால் கொடி நடையாக நடந்துச் சென்று சொந்த ஊரடைய அவர்கள் புறப்பட்டுவிட்டனர்.

நிபந்தனையுடன் கொரோனோ முகாமாக மாறும் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்... நீதிமன்றம் அதிரடி!

தொழிலாளர்களின் இந்த விபரீத முடிவினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு அதிகமாகவே கூடக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வரும் வேலையில் ஒட்டுமொத்தமாக ஆயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடி தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று ஏற்படுவதுடன், ஒரு பகுதியில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவும் அபயாம் ஏற்பட்டுள்ளது.

நிபந்தனையுடன் கொரோனோ முகாமாக மாறும் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்... நீதிமன்றம் அதிரடி!

ஆகையால், இடம்பெயர்ந்து வரும் மக்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது.

அந்தவகையில், வெவ்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து தலை நகர் டெல்லியில் பணியாற்றி வந்த தினக் கூலி தொழிலாளர்கள் தற்போது கொரோனா அச்சத்தால் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

நிபந்தனையுடன் கொரோனோ முகாமாக மாறும் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்... நீதிமன்றம் அதிரடி!

இவர்கள் மூலம் நாடு முழுவதும் கொரோனா பரவும் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆகையால் அவர்கள் அனைவருக்கும் தற்காலிக தங்கும் வசதியை ஏற்படுத்தி தருமாறு கவுதம புத்தா நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரழிவு மேலாண்மை சட்டத்தின்கீழ் இதற்கான சிறப்பு அதிகாரங்களை மாவட்ட நீதிபதி பிஎன் சிங் வழங்கினார்.

நிபந்தனையுடன் கொரோனோ முகாமாக மாறும் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்... நீதிமன்றம் அதிரடி!

இதுகுறித்து அவர், கூறியதாவது, ஜேபி ஸ்போர்ட்ஸ் சிட்டி, யமுனா எக்ஸ்பிரே உள்ளிட்டவற்றின் கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு தற்காலிக இருப்பிட வசதியை ஏற்படுத்தித் தர பயன்படுத்திக்கொள்ளலாம். உடனடி மருத்துவம், உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகளை மாநில மற்றும் நகராட்சிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்" கூறினார். இதுகுறித்த தகவலை ஏஎன்ஐ தளமும் உறுதிச் செய்திருக்கின்றது.

நிபந்தனையுடன் கொரோனோ முகாமாக மாறும் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்... நீதிமன்றம் அதிரடி!

அதேசமயம், இந்தியாவின் ஃபார்முலா 1 ரேசிங் தளத்தைப் பயன்படுத்தும்போது குறிப்பிட்ட நிபந்தனைகளைக் கடைபிடிக்குமாறும் அவர் உத்தரவிட்டார். குறிப்பாக, வாகனங்கள் ஓடு தளத்தை மக்கள் யாரும் அண்டாத வகையில் கண்கானிக்கும் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, சில பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களையும் கூடுதல் கவனத்துடன் பார்வையிடும்படி கூறப்பட்டுள்ளது.

நிபந்தனையுடன் கொரோனோ முகாமாக மாறும் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்... நீதிமன்றம் அதிரடி!

இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 ரேஸ் டிராக்கை அண்மையில்தான் யமுனா எக்ஸ்பிரஸ்வே அதிகாரிகள் ஜேபி குழுமத்திடம் இருந்து கைப்பற்றினார். இந்த ரேஸ் டிராக்கிற்கான தவணை தொகைய அந்நிறுவனம் செலுத்த தவறிய காரணங்களால் இந்த நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India's Formula 1 Circuit Will Now House Of Migrant Workers. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X