பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. மோடி சார் ஈரான் விஷயத்தில் எங்கே உங்கள் ராஜ தந்திரம்?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கான தேவை, கடந்த ஜூலை மாதத்தில், 7.36% அதிகரித்துள்ளது.

By Arun

இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கான தேவை, கடந்த ஜூலை மாதத்தில், 7.36% அதிகரித்துள்ளது. இந்த சூழலில், அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடியால், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மோடி தலைமையிலான மத்திய அரசு கடும் நெருக்கடியில் சிக்கி கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 2016-17ம் நிதியாண்டில் மட்டும், இந்தியாவில் மொத்தம் 30,47,582 உள்நாட்டு பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது ஒரு சாதனை அளவாக கருதப்பட்டது.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

ஆனால் அதன்பின் வந்த 2017-18ம் நிதியாண்டில், இந்த சாதனை உடனடியாக முறியடிக்கப்பட்டது. 2017-18ம் நிதியாண்டில், மொத்தம் 32,87,965 உள்நாட்டு பயணிகள் வாகனங்கள் விற்பனையானது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வது, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

சுற்றுச்சூழல் மாசுபாடு, பெரு நகரங்கள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் சிறு நகர சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் என்பது போன்ற பிரச்னைகளையும் கடந்து, வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு ஏற்படுத்தி இருக்கும் மற்றொரு தலையாய பிரச்னை எரிபொருள் தட்டுப்பாடு.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

வாகனங்களின் எண்ணிக்கை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் (fuel) தேவையும் ஒருபக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள், இந்தியாவின் எரிபொருள் தேவை மிக மிக வேகமாக உயர்ந்து வருவதை பறை சாற்றுகின்றன.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 2,314 டன் பெட்ரோலை இந்தியா பயன்படுத்தியுள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகமாகும். இரு சக்கர வாகனங்களின் விற்பனை மிக வேகமாக உயர்ந்து வருவதே, பெட்ரோல் தேவை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனையானது, கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 22.28 சதவீதமும், ஜூலை மாதத்தில் 8.70 சதவீதமும் உயர்ந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிப்புதான், பெட்ரோல் நுகர்வு உயர முக்கிய காரணம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இந்தியா நுகரும் ஒட்டுமொத்த பெட்ரோலில் 60 சதவீதத்தை, இரு சக்கர வாகனங்கள்தான் பயன்படுத்தி வருகின்றன.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

அதே நேரத்தில் இந்தியாவின் டீசல் தேவையும் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஒட்டுமொத்தமாக 6,610 டன் டீசலை, இந்தியா நுகர்ந்துள்ளது. இது 2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும்.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

வணிக பயன்பாட்டு வாகனங்களின் (commercial vehicle) விற்பனை உயர்வு காரணமாகவே, டீசல் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்களின் விற்பனையானது, கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 42 சதவீதமும், ஜூலை மாதத்தில் 39 சதவீதமும் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

பெட்ரோல் மற்றும் டீசலை போன்று ஏவியேஷன் டர்பைன் ப்யூயல் (aviation turbine fuel) எனப்படும் ஏடிஎப் உள்ளிட்ட இதர எரிபொருட்களின் தேவையும் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையானது 7.36 சதவீதம் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும், 17,057 டன் எரிபொருளை இந்தியா பயன்படுத்தியுள்ளது. இது 2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 7.36 சதவீதம் அதிகம். இந்த சூழலில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

ஈரான் நாட்டு அரசுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா சமீபத்தில் விலகியது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன்னால் இயன்ற வரை, ஈரான் அரசுக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறார்.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

பொருளாதார ரீதியில் ஈரானுக்கு நெருக்கடி அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை, ஈரானில் இருந்து இறக்குமதி செய்வதை நவம்பர் 4ம் தேதிக்குள் நிறுத்தி கொள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

எனவே அமெரிக்கா உடனான பொருளாதார உறவு சீர்குலைந்து விடக்கூடாது என்பதற்காக, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை, இந்தியா படிப்படியாக குறைத்து கொண்டே வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கான தேவை ஏற்கனவே மிக அதிகமாக உள்ளது. இந்த சூழலில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்தினால், பெட்ரோல், டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயரும் அபாயம் நிலவி வருகிறது.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி முழுமையாக நிறுத்தம் செய்யப்படாத தற்போதைய சூழலிலேயே, மத்திய, மாநில அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்பு காரணமாக, இந்தியாவில் மிக அதிக விலைக்குதான் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

நிலைமை இப்படி இருக்கையில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்தி விட்டால், பெட்ரோல், டீசலுக்கான தேவை இன்னும் கடுமையாக அதிகரித்து, அதன் விலை மிக அதிக அளவில் உயரும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. ஈரான் விஷயத்தில் என்ன ராஜ தந்திரத்தை கையாள போகிறார் மோடி?

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் தேவை மிக மிக கடுமையாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள ஈரான் பிரச்னை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India's Fuel Demand Increased by 7.36 Percent in July. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X