இந்தியாவுலேயே இதான் பெருசு... 3.5 கி.மீ நீளம் உள்ள ரயிலை ஓட்டி இந்திய ரயில்வே புதிய சாதனை...

இந்தியாவிலேயே நீளமான ரயிலாக 3.5 கி.மீ நீளம் கொண்ட சூப்பர் வாசுகி என்ற ரயிலை இந்திய ரயில்வே நிர்வாகம் கடந்த 15ம் தேதி சோதனை செய்துள்ளது. இந்த ரயில் குறித்த விரிவான மற்றும் தெளிவாகத் தகவல்களைக் கீழே காணுங்கள்.

இந்தியாவுலேயே இதான் பெருசு . . . 3 . 5 கி . மீ நீளம் உள்ள ரயிலை ஓட்டி இந்திய ரயில்வே புதிய சாதனை . . .

இந்தியாவில் போக்குவரத்தில் மிக முக்கியமான அங்கம் வகிப்பது ரயில் போக்குவரத்து தான் இது பயணிகளுக்கான போக்குவரத்தாக மட்டுமல்லாமல் சரக்கு போக்குவரத்திற்கும் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. முக்கியமான அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரிகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் இன்று ரயில்கள் மூலம் தான் இந்த போக்குவரத்து நடக்கிறது.

இந்தியாவுலேயே இதான் பெருசு . . . 3 . 5 கி . மீ நீளம் உள்ள ரயிலை ஓட்டி இந்திய ரயில்வே புதிய சாதனை . . .

மிக அதிக எடை கொண்ட நிலக்கரிகளை விரைவாக மின் நிலையங்களுக்கு அதுவும் குறைந்த செலவில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு ரயில்கள் தான் ஒரே தீர்வு, அதனால் இந்திய ரயில்வே இன்னும் நிலக்கரியை வேகமாகவும் குறைந்த செலவிலும் கொண்டு செல்ல என் வழி என ஒவ்வொரு வழியாக யோசித்து அதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்தியாவுலேயே இதான் பெருசு . . . 3 . 5 கி . மீ நீளம் உள்ள ரயிலை ஓட்டி இந்திய ரயில்வே புதிய சாதனை . . .

இந்நிலையில் கடந்த 15ம் தேதி அதாவது சுதந்திர தினம் அன்று ஒரு சோதனை முயற்சியாக சட்டீஸ்கர் மாநிலம் கோர்பாவிலிருந்து நாக்பூரில் உள்ள ராஜ்நந்த்கவுன் பகுதிக்கு இந்தியாவின் நீளமான ரயிலை ஓட்டி சோதனை செய்யப்பட்டது. 283.9 கி.மீ தூரம் இந்த ரயில் பயணம் செய்தது.

இந்தியாவுலேயே இதான் பெருசு . . . 3 . 5 கி . மீ நீளம் உள்ள ரயிலை ஓட்டி இந்திய ரயில்வே புதிய சாதனை . . .

இந்த ரயிலின் சிறப்பம்சம் என்னவென்றால் இது தான் இந்தியாவின் நீளமான ரயிலாகும் அதாவது இதன் நீளம் 3.5 கி.மீ நீளம் கொண்டது. இந்த ரயிலில் மொத்தம் 295 சரக்கு பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த ரயிலை மொத்தம் 6 இன்ஜின்கள் சேர்த்து இழுத்துச் சென்றன. வழக்கமாக முன்பக்கம், பின்பக்கம் மட்டுமல்லாமல் இடையிடையேயும் ரயில் இன்ஜின்கள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.

இந்தியாவுலேயே இதான் பெருசு . . . 3 . 5 கி . மீ நீளம் உள்ள ரயிலை ஓட்டி இந்திய ரயில்வே புதிய சாதனை . . .

இந்த பயணத்தில் மொத்தம் 27000 டன் அதாவது 2.7 கோடி கிலோ நிலக்கரி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தியாவிலேயே ஒரு முறையில் அதிக எடை கொண்ட பொருளை எடுத்துச் சென்றது இது தான் முதன் முறையாகும். இந்த முறை வெற்றி பெற்ற நிலையில் இனி தொடர்ந்து இப்படியாக ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்தியாவுலேயே இதான் பெருசு . . . 3 . 5 கி . மீ நீளம் உள்ள ரயிலை ஓட்டி இந்திய ரயில்வே புதிய சாதனை . . .

இந்த ரயில் பயணத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலக்கரி மொத்தம் 3000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. வழக்கமாக ஒரு சரக்கு ரயிலில் 9000 டன் அதாவது 90 லட்சம் கிலோ எடை கொண்ட நிலக்கரி தான் எடுத்துச் செல்ல முடியும். தற்போது ரயில்வேயின் இந்த 3.5 கி.மீ நீள ரயில் சாதனையின் மூலம் 2 மடங்கு அதிகமாக ஒரே முறையில் மொத்தம் 2.7 கோடி கிலோ நிலக்கரி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்தியாவுலேயே இதான் பெருசு . . . 3 . 5 கி . மீ நீளம் உள்ள ரயிலை ஓட்டி இந்திய ரயில்வே புதிய சாதனை . . .

இந்த சாதனையைத் தென்கிழக்கு மத்திய ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது. இந்த ரயிலுக்கு சூப்பர் வாசுகி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சரக்கு ரயில் பெட்டிக்கு 1 லட்சம் கிலோ எனக் கணக்கிட்டு 295 பெட்டிகள் மொத்தம் இணைக்கப்பட்டுள்ளது. இதை இழுத்துச் செல்ல முன், பின், இடை இடையே என எலெக்டரிக்கில் இயங்கும் இன்ஜின்கள் என மொத்தம் 6 இன்ஜின்கள் இணைக்கப்பட்டிருந்தது.

இந்தியாவுலேயே இதான் பெருசு . . . 3 . 5 கி . மீ நீளம் உள்ள ரயிலை ஓட்டி இந்திய ரயில்வே புதிய சாதனை . . .

இந்த ரயிலுக்கு சூப்பர் வாசுகி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவின் நீளமான ரயிலுக்குப் பெயர் சூப்பர் அனகோண்டா ரயிலாகும். இந்த ரயில் மொத்தம் 2.8 கி.மீ நீளம் கொண்ட ரயிலாக இருந்தது. நீளமாகப் பாம்பு போல இருந்ததால் இந்தப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதை விட நீளமாக 3.5 கி.மீ நீளத்தில் ரயில் உருவாக்கப்பட்டுள்ளதால் இதற்கு சூப்பர் வாசுகி எனப் பெயர் வைத்துள்ளனர். வாசுகி என்றால் பாம்பு என அர்த்தம்

இந்தியாவுலேயே இதான் பெருசு . . . 3 . 5 கி . மீ நீளம் உள்ள ரயிலை ஓட்டி இந்திய ரயில்வே புதிய சாதனை . . .

இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஒரு சாதனை முயற்சியாக இந்த நீளமான ரயில் முயற்சி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் செல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indias longest and heaviest freight train with six loco tested successfully
Story first published: Wednesday, August 17, 2022, 16:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X