நடு ரோட்ல அமர்ந்து குடிக்கலாமா?.. அப்படி செய்த ஒரு இளைஞர் இப்போ என்ன நிலைமையில் இருக்காரு தெரியுமா?

இளைஞர் ஒருவர் போக்குவரத்துக்கு இடையூறாக நடு ரோட்டில் அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு பொதுவெளியில், குறிப்பாக, வாகனங்கள் செல்லும் சாலையில் செய்வதற்கு இந்தியாவில் அனுமதி இருக்கின்றதா?, என்பது பற்றிய தகவலையும், மேலும், இளைஞரின் அத்துமீறலுக்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நடு ரோட்ல அமர்ந்து குடிக்கலாமா?.. அப்படி செய்த ஒரு இளைஞர் இப்போ என்ன நிலைமையில் இருக்காரு தெரியுமா?

நம்ம ஊரு டிடிஎஃப் வாசனை போல் உத்தர்காண்ட் இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் ஃபேமஸான நபராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் பாபி கத்தாரியா. இவரை ஃபாலோ செய்வதற்கென்றே இன்ஸ்டாகிராமில் தனி கூட்டம் உண்டு. ஆகையால், இன்ஸ்டாவில் இவரின் சேட்டை சற்று அதிகமாக தென்படுகின்றது. உடலை எப்படி கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வது போன்ற டிப்ஸ்களை அவர் வழங்கி வருகின்றார்.

நடு ரோட்ல அமர்ந்து குடிக்கலாமா?.. அப்படி செய்த ஒரு இளைஞர் இப்போ என்ன நிலைமையில் இருக்காரு தெரியுமா?

இதுதவிர இன்னும் என்டர்டெயின்மென்டை தனது இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக ஃபாலோவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார். அந்தவகையில் அவர் வெளியிட்ட ஓர் வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. சாலையின் நடுவில் அமர்ந்து கொண்டு ஜேக் அண்ட் டேனியல்ஸ் மதுபானத்தை குடிப்பது போன்ற ஓர் வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார்.

நடு ரோட்ல அமர்ந்து குடிக்கலாமா?.. அப்படி செய்த ஒரு இளைஞர் இப்போ என்ன நிலைமையில் இருக்காரு தெரியுமா?

இந்த வீடியோவே அவர் தற்போது சர்ச்சையில் சிக்க காரணமாக அமைந்திருக்கின்றது. இன்ஸ்டாவில் ஃபாலோவர்கள் அதிகம் ஆக வேண்டும் என்பதற்காக பிற அந்த ஆப் பயன்பாட்டாளர்கள் சிலர் ஆபாசமாக வீடியோ வெளியிடுதல், முரண்பாடான செயல்களைச் செய்தல் என பல அறுவறுத்தக்க காரியங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நடு ரோட்ல அமர்ந்து குடிக்கலாமா?.. அப்படி செய்த ஒரு இளைஞர் இப்போ என்ன நிலைமையில் இருக்காரு தெரியுமா?

நாளுக்கு நாள் அவர்களின் சேட்டை எல்லையை மீறிக் கொண்டு செல்வதாக சமூக நல ஆர்வலர்கள் சிலர் வேதனைத் தெரிவிக்கின்றனர். இந்த நிலையிலேயே பொதுவெளியில் அமர்ந்துக் கொண்டு பாபி கத்தாரியா எனும் இளைஞர் மதுபானத்தை அருந்தும் வீடியோவை வெளியிட்டிருக்கின்றார். முக்கிய தலைவர்கள் சிலர் மது ஒழிப்பிற்காக போராடிக் கொண்டிருக்கின்ற இந்தமாதிரியான வேலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புழங்கக் கூடிய சமூக வலைதளத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இளைஞர் செயல்பட்டிருக்கின்றார்.

நடு ரோட்ல அமர்ந்து குடிக்கலாமா?.. அப்படி செய்த ஒரு இளைஞர் இப்போ என்ன நிலைமையில் இருக்காரு தெரியுமா?

ஆகையால், பல தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்பும், கண்டனமும் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே உத்தர்காண்ட் காவல்துறையினர் இன்ஸ்டா பயன்பாட்டாளர் மீது வழக்கு பதிந்து அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கின்றார். குறிப்பாக, சாலையில் அமர்ந்து அவர் செய்த அறுவறுக்கத்தக்க செயலுக்காகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடு ரோட்ல அமர்ந்து குடிக்கலாமா?.. அப்படி செய்த ஒரு இளைஞர் இப்போ என்ன நிலைமையில் இருக்காரு தெரியுமா?

வீடியோ ஜூலை 28 ஆம் தேதி பதிவிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இப்போதே அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அவ்வீடியோவை, "சாலையில் அமர்ந்து கொண்டு என்ஜாய் செய்யும் நேரம் இது" என்ற கேப்ஷனுடன் அவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான பதிவிற்காகவே அவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

நடு ரோட்ல அமர்ந்து குடிக்கலாமா?.. அப்படி செய்த ஒரு இளைஞர் இப்போ என்ன நிலைமையில் இருக்காரு தெரியுமா?

சாலையை மறித்து மதுபானம் குடித்தல், பொதுவெளியில் அறுவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டல் என பல்வேறு குற்றப் பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபி கத்தாரியா மட்டுமின்றி அவருடன் இருந்த மற்றுமொரு நபர் மீதும் இதேமாதிரியான நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்திருக்கின்றனர்.

சாலையில் அமர்ந்து மதுபானம் குடிக்காலமா?

நம்ம ஊருல இருக்க பல பேரு வீட்டில் இருக்கும் மனைவிக்கு பயந்து டாஸ்மாக்கில் வாங்கும் மதுபானங்களை சாலையோரம், காட்டு பகுதி போன்ற இடங்களில் அமர்ந்து குடித்துவிட்டு அங்கேயே அந்த காலி பாட்டில்களைப் போட்டு விட்டு செல்கின்றனர். இவ்வாறு, பொதுவெளியில் செய்வது குற்றமாகும். குறிப்பாக, பொதுமக்கள் கூடும் பகுதியில் திறந்த அமைப்பில் மது அருந்துவது தண்டனைக்கு உரிய செயல்.

நடு ரோட்ல அமர்ந்து குடிக்கலாமா?.. அப்படி செய்த ஒரு இளைஞர் இப்போ என்ன நிலைமையில் இருக்காரு தெரியுமா?

இந்த மாதிரியான சூழலிலேயே இன்ஸ்டா பயனர் நடு ரோட்டில் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் மதுபானத்தைக் குடித்திருக்கின்றார். வாகன ஓட்டிகள் பலர் தங்கு தடையின்ற சென்று வருவதற்கு முறையான பாதை இல்லை என புலம்பிக் கொண்டிருக்கின்ற வேலையில், பாபி கத்தாரியா எந்தவொரு தயக்கமும் இன்றி சாலையில் அமர்ந்து மதுபானம் குடித்துள்ளார். "நடு ரோட்டில் அமர்ந்து உரிமைக்காக போராட்டாம் செய்யவே இங்கு அனுமதி இல்லை. இதுல மதுபானம் வேற அவரு குடிச்சிருக்காரு" என பலரை கேள்வியெழுப்ப செய்திருக்கின்றது பாபியின் செயல்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Insta user drinking alcohol in the middle of the road is that legal
Story first published: Friday, August 12, 2022, 18:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X