உதவிக்கு ஓடோடி வரும் துருவ் ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள்!!

By Saravana

இயற்கை பேரழிவில் சிக்கி சின்னாபின்னாமாகியிருக்கும் நேபாள நாட்டில் மீட்புப் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மீட்புப் பணிகளில் உலகின் பல்வேறு நாடுகளும் பங்குகொண்டு, நேபாள மக்களுக்கு உதவி செய்து வருகின்றன.

இந்த நிலையில், நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளில் இந்திய தயாரிப்பான துருவ் ஹெலிகாப்டரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மழை காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வடைந்த நிலையிலும், துருவ் ஹெலிகாப்டரின் பங்கு மகத்தானதாக இருந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி. நேபாளம் மட்டுமின்றி, இந்தியாவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல இயற்கை பேரிடர் சமயங்களில் இந்த ஹெலிகாப்டரின் பங்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது. இந்த ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

இலகு ரக மாடல்

இலகு ரக மாடல்

இது இலகு ரக ஹெலிகாப்டர் மாடலாக உருவாக்கப்பட்டது. நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. இது அதிகபட்சம் 5.5 டன் எடையுடன் மேலெழும்பும் திறன் கொண்ட, பல்வகை பயன்பாட்டு மற்றும் பல்நோக்கு ஹெலிகாப்டர் மாடல்.

அறிமுகம்

அறிமுகம்

1984ம் ஆண்டு துருவ் ஹெலிகாப்டரை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ராணுவத்தின் தேவை மற்றும் டிசைன் மாற்றங்களால் நீண்ட கால தாமதம் ஏற்பட்டது. ஜெர்மனியின் எம்பிபி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஹெலிகாப்டர் தயாரிப்பு நடந்தது. முதல் ஹெலிகாப்டர் 1992ல் முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2002ம் ஆண்டு ராணுவ பயன்பாட்டு மாடலும், 2004ல் பொது பயன்பாட்டு மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

மாடல்கள்

மாடல்கள்

ALH Mk. I மற்றும் ALH Mk. II ஆகிய இரு மாடல்களும் ராணுவத்தின் சாதாரண பயன்பாட்டுக்கு பொருத்தமாக தயாரிக்கப்பட்டது. ALH Mk.III என்ற இந்த மாடலில் சக்தி என்ற புதிய எஞ்சின் பொருத்தப்பட்டது. பாதுகாப்புத் துறையின் பல்வேறு பயன்பாட்டில் ஈடுபடுத்தப்படுகிறது. குறிப்பாக, மலை சிகரங்களில் அமைந்திருக்கும் படை தளங்களுக்கு விரைவான போக்குவரத்து இணைப்பை இந்த ஹெலிகாப்டர் வழங்குகிறது. ALH Mk. IV என்ற மாடல் எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கான கருவிகளையும், ஆயுதங்களும் பொருத்தப்பட்ட மாடலாகும்.

உற்பத்தி

உற்பத்தி

இந்திய பாதுகாப்புத் துறையின் பல்வேறு பயன்பாட்டிலும் இந்த ஹெலிகாப்டர் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை 200க்கும் அதிகமான துருவ் ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. நேபாளம், ஈக்குவடார் மற்றும் இஸ்ரேலுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு நாடுகளும் ஆர்டர்களை கொடுத்து காத்திருக்கின்றன. அவ்வப்போது, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

 பயன்பாடு

பயன்பாடு

ராணுவ வீரர்களை விரைவாக மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு, விஐபி.,களை அழைத்துச் செல்வது, சரக்குகளை எடுத்துச் செல்வது, சரங் குழுவில் சாகச பயன்பாடு, ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சி, மீட்புப் பணிகள் மற்றும் பகல் மற்றும் இரவு நேர தாக்குதல்கள் என பல்வேறு பயன்பாடு வசதி கொண்டது. இந்த ஹெலிகாப்டரில் ஒன்று அல்லது இரண்டு பைலட்டுகள் இயக்கலாம். 12 முதல் 14 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

நவீன வசதிகள்

நவீன வசதிகள்

இந்த ஹெலிகாப்டரில் நவீன வகை நிகழ்நேர கண்காணிப்பு சாதனங்களும், தற்காப்பு சாதனங்களும் உள்ளன. எந்தவொரு வானிலையிலும் சிறப்பாக செயல்படக்கூடியது. நேபாளத்தில், மழை குறுக்கிட்ட போதிலும், 80 மணிநேரத்தில் 50 முறைக்கும் மேலாக பறந்து பறந்து மீட்புப் பணிகளை செய்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இது இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர். எம்கே3 மற்றும் எம்கே4 ஆகிய துருவ் மாடல்களில் சக்தி என்ற பெயரில் அழைக்கப்படும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதற்கு முந்தைய மாடலைவிட 12 சதவீதம் கூடுதல் பவரை வெளிப்படுத்தும் வசதி கொண்டது. ஒரு எஞ்சின் 1341 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 295 கிமீ வேகத்தில் பறக்கும். 1400 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 640 கிமீ தூரம் வரை பறக்கும்.

விலை மதிப்பு

விலை மதிப்பு

ஒரு ஹெலிகாப்டர் ரூ.40 கோடி மதிப்பு கொண்டது. கடந்த ஆண்டு வானிலை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட துருவ் ஹெலிகாப்டர் ரூ.60 கோடி மதிப்புடையது.

சேவை சிறக்கட்டும்...

சேவை சிறக்கட்டும்...

ராணுவத் தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்வதுடன், மீட்புப் பணிகளில் சிறப்பாக சேவையாற்றி பல உயிர்களையும், பொருட்களை காவந்து செய்து வருகிறது துருவ். எந்த இடத்திலும் எளிதாக ஏற்றி இறக்கக்கூடிய இந்த ஹெலிகாப்டரின் சேவை தொடரட்டும்.

Most Read Articles
English summary
The Helicopter Division of the government-owned Hindustan Aeronautics Limited (HAL) has developed the Dhruv (Pole Star) advanced light helicopter (ALH), a light (5.5t class) multirole and multimission helicopter for army, air force, navy, coastguard and civil operations, for both utility and attack roles by day and night. The helicopter, which is built to FAR 29 specifications, entered series production in 2000.
Story first published: Saturday, May 2, 2015, 13:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X